Connect with us

விமர்சனத்தாலேயே தோல்வி அடைந்த நல்ல படம்!.. அதுவும் அஜித் படமா? என்னப்பா சொல்றீங்க…

ajith

Cinema History

விமர்சனத்தாலேயே தோல்வி அடைந்த நல்ல படம்!.. அதுவும் அஜித் படமா? என்னப்பா சொல்றீங்க…

Social Media Bar

Tamil Ajith Movies : சுவாரஸ்யமான கதை அமைப்பைக் கொண்டு தமிழ் சினிமாவில் வெளியாகும் எந்த ஒரு திரைப்படமும் பெரும் வரவேற்பை பெறும் என்பது இயக்குனர்களின் பெரும் நம்பிக்கையாகும்.

தமிழ் ரசிகர்களும் அதற்கு ஏற்றார் போல குட் நைட் போன்ற நல்ல திரைக்கதை அமைப்பை கொண்ட படங்களை வெற்றியடைய செய்திருக்கின்றனர். ஆனால் நல்ல கதை அமைப்பும் பெரிய ஹீரோவும் நடித்தும் கூட வரவேற்பை பெறாத தமிழ் சினிமாவும் இருக்கின்றன.

ஆனால் பட விமர்சனத்தின் காரணமாகவே தோல்வி அடைந்த ஒரு திரைப்படமும் இருக்கிறது. அதுதான் பூவெல்லாம் உன் வாசம் திரைப்படம். பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசை அமைத்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் அஜித் மற்றும் ஜோதிகா முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருந்தனர். படத்திற்கான திரைக்கதை அமைப்பும் சிறப்பாக இருந்தது மேலும் இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே பெரும் வெற்றியை கொடுத்தன. அப்படி இருக்கும் பொழுது இந்த திரைப்படம் மட்டும் பெரும் தோல்வியை கண்டது.

அதற்கு காரணம் என்னவென்று பார்க்கும் பொழுது அப்பொழுது இருந்த பத்திரிகைகள் இந்த திரைப்படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை வழங்கியுள்ளன. படத்தின் திரைக்கதை அவ்வளவு சிறப்பாக இல்லை என்று அவர்கள் வழங்கிய விமர்சனத்தின் காரணமாக பொதுமக்கள் அந்த படத்தை திரையரங்கில் பார்ப்பதை தவிர்த்து இருக்கின்றனர்.

இப்போது வரை அந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் கூட வெளியான பொழுது விமர்சனத்தின் காரணமாகவே அந்த திரைப்படம் தோல்வியடைந்து இருக்கிறது.

To Top