Connect with us

ஹிப் ஹாப் ஆதி அடுத்த படத்தின் ஃபர்ஸ்ர் லுக் !-  ஒருவேளை சூப்பர் ஹீரோ படமா!

News

ஹிப் ஹாப் ஆதி அடுத்த படத்தின் ஃபர்ஸ்ர் லுக் !-  ஒருவேளை சூப்பர் ஹீரோ படமா!

Social Media Bar

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்சமயம் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஹிப் ஹாப் ஆதி. மீசைய முறுக்கு திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ஹிப் ஹாப்.

அந்த படம் நல்ல ஹிட் கொடுத்தது. அதை தொடர்ந்து வரிசையாக நட்பே துணை, நான் சிரித்தால் என மூன்று ஹிட் படங்கள் கொடுத்தார். ஆனால் அதற்கு பிறகு வெளிவந்த சிவக்குமாரின் சபதம் மற்றும் அன்பறிவு ஆகிய இரு திரைப்படங்களுமே சரியான தோல்வியை கண்டது.

இந்த நிலையில் தற்சமயம் வீரன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஹிப் ஹாப் ஆதி. வழக்கமாக ஹிப் ஹாப் ஆதி திரைப்படம் மிகவும் காமெடியாக அமைந்திருக்கும். ஆனால் இதில் கொஞ்சம் சீரியஸ் கண்டெண்டும் இருக்கும் என கூறப்படுகிறது.

இயக்குனர் ஆர்க் சரவணன் இந்த படத்தை இயக்குகிறார். முனிஸ்காந்த், காலி வெங்கட் ஆகிய நடிகர்கள் இதில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்சமயம் வெளியாகியுள்ளது. எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் ஹிப் ஹாப் ஆதிக்கும் சூப்பர் சக்திகள் இருப்பது போல அந்த போஸ்டரில் தெரிகிறது.

இது இல்லாமல் ஹிப் ஹாப் இரட்டை வேடத்தில் நடித்துள்ளாரா? என கேள்விகள் எழுகின்றன. ஏற்கனவே அன்பறிவு படத்திற்கு பிறகே அவருக்கு இரட்டை வேடம் அவ்வளவாக செட் ஆகவில்லை என கூறப்பட்டது. மீண்டும் இரட்டை வேடம் என்றால் என்ன செய்வது என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

To Top