பாலிவுட்டில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட திரைப்படம் காஷ்மீர் ஃபைல்ஸ். காஷ்மீரில் நடந்த மத கலவரத்தை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கியிருந்தார்

இந்த திரைப்படத்திற்கு சில எதிர்மறையான விமர்சனங்களும் இருந்து வந்தன. அதாவது இந்த படம் இஸ்லாம் மத வெறுப்பை வெளிப்படுத்துகிறது எனவும் கூறப்பட்டது. பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த திரைப்படம் தேசிய விருதை பெற்றது.
இந்நிலையில் தற்சமயம் கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட்டது. கோவாவில் தேர்வு குழுவின் உறுப்பினரான இஸ்ரேலை நாடவ் என்பவர் இந்த படத்தை பற்றி கூறும்போது “இந்திய அரசாங்கத்தினால் படம் திரையிடப்படும் ஒரு விழாவில் பயங்கரவாதிகளின் படம் எப்படி திரையிடப்பட்டது என தெரியவில்லை. இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு எதிராக இருக்கிறார்களா?” என கேள்வியை எழுப்பியுள்ளார்.
இந்த நிகழ்வு குறித்த பதிலளித்த இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி கூறும்போது, “இந்த ஒரு படத்திற்காக நான் நான்கு ஆண்டுகளாக காஷ்மீரில் தகவல் திரட்டியுள்ளேன். 700க்கும் அதிகமான நபர்களை பேட்டி எடுத்துள்ளேன். இஸ்ரேலைச் சேர்ந்த திரைப்பட துறைக்கு சவால் விடுகிறேன், அவர்கள் தி காஷ்மீர் ஃபைல்ஸில் ஒரு காட்சியோ, ஒரு உரையாடலையோ கற்பனையானது என்று நிரூபித்தால், நான் திரைப்படம் எடுப்பதையே நிறுத்திவிடுகிறேன்” என கூறியுள்ளார்.