இணையத்தின் வளர்ச்சிக்கு பிறகு இப்போது ஆல்பம் பாடல்கள் என்பவை அதிகமாக பிரபலமாகி வருகிறது. அதிகப்பட்சம் பெரும்பாலான மக்கள் யூ ட்யூப், இன்ஸ்டா மாதிரியான சமூக வலைத்தளங்களைதான் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் முன்பெல்லாம் ஆல்பம் பாடல்கள் என்றால் அதை பிரபலப்படுத்துவது கடினமான விஷயமாக இருந்தது. டிவி மற்றும் ரேடியோ வழியாக மட்டுமே மக்கள் மத்தியில் இந்த ஆல்பம் பாடல்களை பிரபலப்படுத்த முடியும் என்கிற நிலை ஏற்பட்டது.
ஆனால் இப்போது யூ ட்யூப் வழியாகவே மிக எளிதாக ஒரு பாடலை பிரபலப்படுத்த முடிகிறது. இதனால் முன்பு கவனிக்கப்படாமல் இருந்த பாடல்கள் கூட இப்போது கவனத்தை ஈர்க்க துவங்கியுள்ளது. இந்த நிலையில் திங்க் மியூசிக் நிறுவனம் தொடர்ந்து ஆல்பம் பாடல்கள் மூலமாக புது முகங்களை மக்களிடம் பிரப்பலப்படுத்தி வருகிறது.
அப்படியாக நேற்று பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகரான சாய் அபயரங்கரை கொண்டு சித்திர புத்தரி என்கிற பாடலை வெளியிட்டனர். இதில் சாய் அபயங்கருடன் சேர்ந்து நடிகை மீனாட்சி சௌத்ரி நடனமாடியுள்ளார். இந்த பாடல் வெளியாகி 14 மணி நேரங்களுக்குள்ளேயே 1 மில்லியன் அதாவது 10 லட்சம் வீவ்களை கடந்து சென்றுள்ளது.
தற்சமயம் யூ ட்யூப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது சித்திர புத்தரி பாடல்.





