தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறில் பிறந்தவர் நடிகர் மனோபாலா
சிறு வயது முதலே சினிமாவில் ஈர்ப்பு கொண்டிருந்ததால் இயக்குனராவதற்கான முயற்சிகளை செய்து வந்தார்
1979 இல் வெளிவந்த சுவரில்லா சித்திரங்கள் திரைப்படத்தில் பாரதி ராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்
புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்
பிறகு இயக்குனரான மனோபாலா கங்கை, பிள்ளைநிலா, ஊர் காவலன், மல்லுவேட்டி மைனர், நைனா உள்ளிட்ட படங்களை இயக்கினார்
1994 ஆம் ஆண்டு தோழர் பாண்டியன் என்கிற திரைப்படத்தில் தனது நடிப்பு பயணத்தை துவங்கினார்.
இதுவரை 231 படங்களில் நடித்துள்ளார். 17 படங்களை இயக்கியுள்ளார் மனோபாலா...
தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு ஈடு இணையற்ற கலைஞராக மனோபாலா இருப்பார்...