Tamil Actor Jaishankar : எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு பிறகு தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களாக களம் இறங்கியவர்களில் முக்கியமானவர் நடிகர் ஜெய் சங்கர். அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு சிவக்குமார், ஜெய்சங்கர் போன்ற நடிகர்கள் மீது ஆர்வம் உண்டானது.
இவர்கள் இருவருமே அப்போது இளம் நடிகர்களாக இருந்ததால் இவர்களுக்குள் நல்ல நட்பு உண்டானது. சிவக்குமார் தொடர்ந்து குடும்ப பாங்கான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டிருந்தார். அதே சமயம் நடிகர் ஜெய்சங்கர் தொடர்ந்து சண்டை படங்களாக நடித்து கொண்டிருந்தார்.
வெளிநாடுகளில் வரும் கௌபாய் திரைப்படங்கள், உளவாளி திரைப்படங்கள் மீது ஆர்வம் கொண்ட ஜெய்சங்கர் தொடர்ந்து அந்த மாதிரியான படங்களில் நடிக்க துவங்கினார். இதனால் தமிழக ஜேம்ஸ் பாண்ட் என்றெல்லாம் இவர் அழைக்கப்பட்டார்.
சினிமாவில் சில வருடங்கள் கடந்தப்பிறகு ஜெய்சங்கருக்கும் சிவக்குமாருக்கும் இருந்த நட்பும் இடைவெளியை கண்டிருந்தது. இந்த நிலையில்தான் சிவக்குமாருக்கு திருமணமாகி 25 வருடங்கள் ஆனதை விழாவாக கொண்டாட நினைத்தார் சிவக்குமார்.
இதற்காக திரைத்துறையை சேர்ந்த நபர்களுக்கு எல்லாம் பத்திரிக்கை வைத்தார் சிவக்குமார். ஆனால் அவரது நண்பர் ஜெய்சங்கருக்கு மட்டும் அவர் பத்திரிக்கை வைக்கவில்லை. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் ஜெய்சங்கரே இப்படி ஒரு விழா ஒன்று நடக்கிறது என்பதை அறிந்துக்கொண்டார்.
இதனை தொடர்ந்து அந்த விழாவின் போது அழையா விருந்தாளியாக வந்து நின்றார் ஜெய்சங்கர். உண்மையில் அவர் வரமாட்டார் என்று நினைத்தே சிவக்குமார் பத்திரிக்கை வைக்காமல் இருந்தார். ஆனால் பழைய நட்பை மறக்காமல் அங்கு வந்து நின்றார் ஜெய்சங்கர்.
இந்த நிகழ்வை சிவக்குமார் தன்னுடைய புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.