சினிமாவில் பல நடிகைகள் பல மோசமான பாதைகள் கடந்து அதன் பிறகு சினிமாவில் சாதிக்க வேண்டும் என தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் தங்கள் விருப்பமே இல்லாமல் சினிமா துறையில் நடித்து அதன் பிறகு தங்களுக்கு கிடைத்த மார்க்கெட்டை வைத்து அவர்களுக்கு பிடித்த துறை தேர்வு செய்து சாதித்தும் வருகிறார்கள்.
அந்த வகையில் சினிமா சிலருக்கு வாழ்க்கையும், அதே சமயம் பிடிக்காததையும் கொடுத்திருக்கிறது. சில நடிகைகள் விருப்பமே இல்லாமல் சினிமாவில் நுழைந்து அதன் பிறகு வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான தகவல்களை நாம் இந்த பதிவில் பார்ப்போம்.
தற்கொலைக்கு முயன்ற மீனா
கண்ணழகி என்றால் உடனே அனைவரின் நினைவுக்கு வருவது மீனாதான். இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். சூப்பர் ஸ்டார், உலகநாயகன், விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் நடித்து பெரும் புகழை அடைந்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற படங்களிலும் நடித்து தற்போது வரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் மீனா.
இவர் நடிகையாக சினிமாவில் நுழையும் பொழுது ஒரு நபரை காதலித்திருந்ததாகவும், ஆனால் அப்பொழுது மீனா நல்ல பிரபலமாக இருந்ததால் அவரின் காதலரை அடித்து விரட்டி விட்டதாகவும், இதனால் மீனா கடும் மன உளைச்சலில் சில நாட்கள் படப்பிடிப்பிற்குச் செல்லாமல் இரண்டு மூன்று தடவை தற்கொலைக்கு முயன்று உள்ளார் என தற்பொழுது அவரைப் பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் அவரின் கணவர் இழந்த நிலையில், இவருக்கு திருமணத்திற்கு முன்பாகவே அந்த காதல் இருந்ததாக தற்பொழுது கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
விருப்பமே இல்லாமல் சினிமாவில் நுழைந்த ஜெயலலிதா
அம்மா என்று அன்போடு அழைக்கப்படுபவர் ஜெ. ஜெயலலிதா. இவர் தென்னிந்திய திரைப்பட நடிகை மட்டுமல்லாமல், முன்னாள் தமிழக முதல்வரும் கூட. இவரைப் போன்று தான் ஒரு பெண்மணி இருக்க வேண்டும் என்று பலருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் ஜெயலலிதா. இவர் பள்ளிக்கூடங்களில் படிக்கும் பொழுது தன்னுடைய நண்பர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்திருக்கிறார். இவர் சென்னையில் உள்ள சர்ச் பார்க் ப்ரெசெண்டேஷன் கான்வென்டில் படித்துள்ளார்.
இவரின் தாயார் சந்தியா நடிகை ஆவார். அவர் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவருக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஜெயலலிதா எனக்கு நடிப்பில் விருப்பமில்லை நான் படித்து பெரிய ஆளாக வேண்டும் என கூறினார். ஆனால் அவரின் தாயார் கேட்காமல் வலுக்கட்டாயமாக சினிமாவில் ஜெயலலிதாவை நடிக்க வைத்துள்ளார். இதனால் ஜெயலலிதா பலமுறை வீட்டில் சண்டை போட்டும், வீட்டில் உள்ள பாத்திரங்களை உடைத்தும், கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேல் சாப்பிடாமல் அழுது சினிமா வாழ்க்கையை வெறுத்துள்ளார் என தற்பொழுது பேசப்பட்டு வருகிறது.