Black Myth Wukong

Black Myth Wukong: ஒரே ஒரு வீடியோ கேமில் கேமிங் இண்டஸ்ட்ரியையே வாயை பிழக்க வைத்த சீனா!.

ஒவ்வொரு நாடும் தங்களது வரலாற்றை மீட்டெடுப்பதை விட முக்கியம், அதை வெளியில் பரப்புவதுதான். அந்த வகையில் தற்சமயம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் படங்கள், கார்ட்டூன்கள், காமிக்ஸ், கேம்ஸ் மூலமாக தங்களது வரலாற்றையும், சிந்தனைகளையும் ஒவ்வொரு நாடும் மக்களிடம் பரப்புகின்றன.

எப்போதுமே அமெரிக்க ராணுவமும், உளவுத்துறையும்தான் உலகிலேயே சிறந்தது என நாம் நினைப்போம். ஏனெனில் அமெரிக்கர்களின் Call of Duty கேமில் துவங்கி படங்கள் வரை அனைத்திலும் அவர்கள் தங்களை திறமைசாலிகளாக காட்டி கொள்வதே அதற்கு காரணம்.

Black Myth: Wukong:

இந்த நிலையில் சீனா தன்னுடைய புராண கதையையே வீடியோ கேமாக மாற்றி தற்சமயம் கேமிங் இண்டஸ்ட்ரியையே புரட்டி போட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும். Son wu kong என்பது சீனாவில் தொன்று தொட்டு வரும் ஒரு புராதண கதையாகும். குரங்கு ராஜா என அழைக்கப்படும் இந்த கதாபாத்திரத்தை வைத்து நிறைய படங்கள் வந்துள்ளன.

ஆனால் அதையே தற்சமயம் வீடியோ கேமாக மாற்றி Black Myth: Wukong என்னும் வீடியோ கேமாக வெளியிட்டுள்ளது கேம் சயின்ஸ் என்னும் சீன நிறுவனம். இதுவரை கேமிங் துறையில் அமெரிக்கா மட்டுமே பெரும் சாதனைகளை செய்து வந்த நிலையில் இந்த சீன புராண கதை அதை பின்னுக்கு தள்ளியுள்ளது.

நேற்று வெளியான இந்த கேம் ஒரு நாளுக்குள்ளாகவே 2.50 மில்லியன் மக்களால் வாங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சாதனை படத்தை எல்டன் ரிங், சைபர் பங்க் கேம்களின் சாதனைகளை முறியடித்துள்ளது இந்த Black Myth: Wukong கேம் இதன் மூலம் கேமிங் இண்டஸ்ட்ரியில் தனக்கென தனி இடத்தை சீனா பிடித்துள்ளது. மேலும் தனது புராண கதையை உலகறிய செய்துள்ளது சீனா.