குட்டி இடுப்பழகு… திருமணத்திற்கு பிறகு.. வெகுநாள் கழித்து புகைப்படம் விட்ட நிக்கி கல்ராணி.!

மலையாளம் தமிழ் என இரண்டு மொழிகளிலுமே பிரபலமாக இருந்தவர் நடிகை நிக்கி கல்ராணி. ஜிவி பிரகாஷ் நடித்த டார்லிங் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதற்கு பிறகு அவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. தொப்டர்ந்து தமிழில் கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் என பல படங்களில் நடித்தார். அந்த சமயத்தில்தான் மரகத நாணயம் படத்தில் நடித்தார் நிக்கி கல்ராணி.

மரகத நாணயம் திரைப்படத்தில் நடிகர் ஆதி கதாநாயகனாக நடித்தார். அவருக்கும் நிக்கி கல்ராணிக்கும் இடையே அந்த சமயத்தில் காதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சில வருடங்களிலேயே இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு பெரிதாக நடிப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார் நிக்கி கல்ராணி. இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.