தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் மிக முக்கியமானவர் செல்வராகவன். செல்வராகவன் இயக்கும் பெரும்பாலான படங்களுக்கு நல்ல வரவேற்பு என்பது இருந்து வருகிறது.
தனுஷின் அண்ணனான செல்வராகவன்தான் முதன்முதலில் தனுஷை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் நடந்த மகாவிஷ்ணு சர்ச்சைக்குறித்து பதில் அளித்து இருக்கிறார். சமீபத்தில் அரசு மகளிர் பள்ளியில் கலந்து கொண்ட மகாவிஷ்ணு என்கிற சாமியார் ஒருவர் நிறைய தவறான விஷயங்களையும் மறுஜென்மம் குறித்த மூடநம்பிக்கைகளையும் பரப்பி வந்தார்.
அதனை எதிர்த்து அந்த பள்ளியில் கேள்வி கேட்ட ஆசிரியரையும் அவர் மிகவும் வலுவாக எதிர்த்து பேசியிருந்தார். இந்த நிலையில் அந்த காணொளி அதிக பிரபலமாக துவங்கியது. முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
செல்வராகவன் காட்டம்:
இந்த நிலையில் மகாவிஷ்ணுவுக்கு எதிரான பேச்சுகள் சமூக வலைதளங்களில் அதிகரிக்க துவங்கின. இந்த நிலையில் இது குறித்து பேசிய செல்வ ராகவன் கூறும் பொழுது யாராவது ஒருவர் தன்னை குரு என்று கூறிக்கொண்டு வந்துவிட்டால் உடனே அவர் முன்னாடி போய் அனைவரும் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்யத் தொங்கு விடுகிறீர்கள்.
தியானம் செய்வதற்காக அவ்வளவு காஞ்சி போய் கிடக்கிறீர்களா உண்மையிலேயே குரு என்பவர் இப்படி எல்லாம் ஒரு மீட்டிங்கை போட்டு உங்கள் முன்னால் வந்து அமர்ந்து பேசிக் கொண்டிருக்க மாட்டார். குரு என்பவர் உண்மையில் தன்னை காட்டிக் கொள்ளவே மாட்டார்.
ஆன்மீகம் என்றால் என்னவென்று புரிந்து கொள்ளுங்கள். புத்தர் சொன்னதை கேளுங்கள் உங்கள் மூச்சின் மீது கவனத்தை செலுத்துவது தான் தியானம் என்று புத்தர் கூறியிருக்கிறார். அதற்கு மேற்பட்ட தியானம் ஒன்று தேவையே கிடையாது இதற்காக நீங்கள் ஒரு குருவை போய் அணுக வேண்டிய தேவையும் கிடையாது என்று காட்டமாக பேசியிருக்கிறார் செல்வராகவன்.