தீபாவளியை முன்னிட்டு இன்றைய தினம் பிரின்ஸ் மற்றும் சர்தார் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகியுள்ளன. இரண்டு படங்களுமே முக்கிய நாயகர்கள் நடித்துள்ளதால் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இன்று காலை பிரின்ஸ் முதல் ஷோ போடப்பட்டது. அதை பார்த்த ரசிகர்கள் பலரும் படம் குறித்து அதிருப்தி அடைந்துள்ளது தெரிகிறது.
சிலர் படம் நன்றாக இருப்பதாக கூறினாலும் கூட, படத்தில் பெரிதாக கதை இல்லை என்பதே பலரின் குற்றச்சாற்றாக இருக்கிறது. படம் முழுக்க நகைச்சுவை இருக்கிறது. ஆனால் கதை இல்லை என கூறுகின்றனர்.
இன்னும் சிலர் விஜய் டிவியில் கலக்க போவது யாரு பார்த்த மாதிரி இருக்கிறது என கூறுகின்றனர். முதல் ஷோவிலேயே அதிக எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருப்பது பிரின்ஸ் திரைப்படத்திற்கு ஒரு பின்னடைவே.