Tag Archives: இந்தியன்

போர் தொடர்பாக தமிழில் வெளிவந்த 07 முக்கிய திரைப்படங்கள்!.

உலக அளவில் எல்லா சினிமாக்களிலும் போர் தொடர்பான திரைப்படங்கள் வந்துக்கொண்டுதான் இருக்கின்றன. போருக்கு செல்லும் வீரன், போரால் மக்கள் படும் பாடு, போரால் ஏற்படும் வறுமை, போருக்குள் ஒரு காதல் என கதைக்களம் மாறுப்பட்டாலும் போர் என்பதே படத்தின் மைய கதையாக இருக்கும்.

இரு நாடுகளுக்கு நடுவே நடப்பது மட்டுமே போர் என்று ஆகிவிடாது. ஒரே நாட்டுக்குள் நடக்கும் உள்நாட்டு யுத்தம் கூட போர்தான். அப்படியாக தமிழில் போர் தொடர்பாக வந்த சில திரைப்படங்களின் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்தியன் (1996):

1996 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் திரைப்படம் முக்கியமான திரைப்படமாகும். இரண்டாம் உலகப்போர் நடந்துக்கொண்டிருந்த சமகாலத்தில் இந்தியாவில் விடுதலையை மீட்டெடுக்க சுபாஷ் சந்திரப்போஸ் இந்திய தேசிய இராணுவம் என்கிற இராணுவம் ஒன்றை அமைத்தார். அதில் போராட்டக்காரராக இருந்த சேனாபதி என்னும் நபரை வைத்து செல்லும் படமே இந்தியன்.

வீரப்பாண்டிய கட்டப்பொம்மன் (1959)

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் பி.ஆர் பந்துலு இயக்கத்தில் வெளிவந்த வரலாற்று திரைப்படம் வீரப்பாண்டிய கட்டபொம்மன். இந்தியாவில் ஆங்கில ஆதிக்கம் மோலோங்கிய சமயத்தில் அதனை எதிர்த்த பல முக்கிய தலைவர்களில் முக்கியமானவர் வீரப்பாண்டிய கட்டபொம்மன். எனவே அவரது கதையை சிவாஜி கணேசனை வைத்து படமாக்கினர்.

கன்னத்தில் முத்தமிட்டாள் (2002)

2002 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கன்னத்தில் முத்தமிட்டால். இலங்கையில் சிங்களர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் நடந்த போருக்கு நடுவே தனது தாயை தேடும் மகளின் கதையாக கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் இருந்தது. இதனால் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இப்போது வரை பிரபலங்கள் பலரும் இந்த படத்தை புகழ்ந்து பேசுவதை பார்க்க முடியும்.

மதராசப்பட்டினம் (2010)

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஒரு ஆங்கிலேய பெண்ணுக்கும், தமிழ்நாட்டை சேர்ந்த வண்ணான் இளைஞனுக்கும் இடையே ஏற்படும் காதலை அழகாக கூறும் திரைப்படம் மதராசப்பட்டினம். அந்த படத்தின் செட் ஒர்க்கிற்காகவே அப்போது வெகுவாக பேசப்பட்ட திரைப்படமாக மதராசப்பட்டினம் திரைப்படம் இருந்தது.

ஆயிரத்தில் ஒருவன் (2010)

இந்தியா ஒரு நாடாக மாறுவதற்கு முன்பு ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு மன்னர்கள் ஆண்டு வந்தனர். அப்படியாக தமிழ்நாட்டை சோழர், பாண்டியர் என்கிற இரண்டு குழு ஆண்டு வந்தது. இதனால் வரலாறு நெடுகிலும் இவர்களுக்கு இடையே போர் நடந்து வந்தது.

அந்த போர் இப்போதைய காலக்கட்டத்திலும் தொடர்ந்தால் அது எப்படி இருக்கும் என்பதை ஃபேண்டசி ஜானரில் பேசிய திரைப்படம்தான் ஆயிரத்தில் ஒருவன்.

காற்று வெளியிடை (2017)

கார்கில் போர் நடந்துக்கொண்டிருந்த சமயத்தில் அதில் பங்குபெறும் வீரனுக்கு ஒரு பெண்ணோடு காதல் ஏற்படுகிறது. அவன் விமானப்படை வீரனாக இருக்கின்றான். இந்த பெண் மருத்துவராக இருக்கிறாள். இவர்கள் இருவருக்குமிடையே உள்ள காதலை கூறும் திரைப்படமாக காற்று வெளியிடை உள்ளது.

07.பொன்னியின் செல்வன்

சோழ சாம்ராஜ்யத்தின் பெரும் மன்னராக இப்போதும் அறியப்படுபவர் மன்னர் ராஜ ராஜ சோழன். இவரது பெருமைகள் பல இருந்தாலும் ஒரு புனைவு கதையாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நாவல்தான் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல்

இதனை அடிப்படையாக கொண்டு அதுவே திரைப்படமாகவும் வந்தது. கதைப்படி பாண்டிய மன்னரை ராஜ ராஜ சோழனின் அண்ணனான ஆதித்த கரிகாலன் போர் புரிந்து கொன்றதால் அதற்கு பழி வாங்குவதற்காக பாண்டியர்கள் சூழ்ச்சியை செய்கின்றனர். அந்த சூழ்ச்சியால் சோழ தேசத்திற்கு என்ன நடக்க போகிறது என்பதுதான் படத்தின் கதையாக உள்ளது.

ஒரு காலத்துல என்ன விரட்டி விட்ட இயக்குனர் இப்ப கமல் படத்துல நடிக்க கூப்பிடுறார்!.. வாழ்க்கை நிகழ்வை பகிர்ந்த சமுத்திரக்கனி!..

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக சேர்ந்து பிறகு நடிப்பிலும் பெரும் உயரத்தை தொட்டவர் நடிகர் சமுத்திரகனி. சாட்டை திரைப்படத்திற்கு பிறகு சமுத்திரக்கனியின் நடிப்புக்கு அதிக வரவேற்பு கிடைக்க துவங்கியது, மேலும் எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை சிறப்பாக நடிக்க கூடியவர் சமுத்திரக்கனி.

இவர் தன்னுடைய இளம் வயதிலேயே தந்தையிடம் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்தார். அந்த நிலையில் வெகு காலங்கள் வாய்ப்புகளே கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தார் சமுத்திரக்கனி.

samuthrakani

அப்போதுதான் இந்தியன் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்தியன் திரைப்படத்தில் ஆ.டி.ஓ அலுவலக காட்சிகளுக்கு அதிகமாக ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் தேவைப்பட்டனர். இந்த நிலையில் அதற்காக ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு பெயர் எழுதும்போது சமுத்திரக்கனி தனது பெயரையும் கொடுத்தார்.

ஆனால் அவரது பெயரை படக்குழுவை சேர்ந்தவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிகழ்வை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ள சமுத்திரக்கனி கூறும்போது அப்போது ஒரு ஜுனியர் ஆர்ட்டிஸ்டுக்கே எனக்கு தகுதியில்லை என அனுப்பினார்கள் ஆனால் இப்போது இந்தியன் 2 திரைப்படம் இயக்கும்போது அதில் இயக்குனர் ஷங்கரே என்னை அழைத்து வாய்ப்பளித்துள்ளார் என்கிறார் சமுத்திரக்கனி.

கவர்ச்சியா நடிச்சே ஆகணும்! நடிகையை வற்புறுத்திய ஷங்கர் – நடவடிக்கை எடுத்த ராதாரவி!..

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் அதிக பிரச்சனைகளை சந்திக்கின்றனர். ஏனெனில் கதாநாயகர்களாக நடிக்கும் ஆண் நட்சத்திரங்கள் போல் இல்லாமல் கதாநாயகிகள் மார்க்கெட்டை பிடித்து தமிழ் சினிமாவில் அப்படியே இருப்பது கடினமான காரியமாக இருக்கிறது.

எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி பிறகு கமல் ரஜினி வந்த ஆரம்பக்காலக்கட்டங்களிலும் சரி கதாநாயகிகள் சினிமாவில் வெகு காலங்கள் இருக்க முடிந்தது. ஸ்ரீ தேவி, ரேவதி மாதிரியான கதாநாயகிகளை இதற்கு உதாரணமாக கூறலாம்.

இந்த நிலையில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்கிற குறிக்கோளோடு இருக்கிற நடிகைகள் வெகுவாக சிரமப்படுகின்றனர். அந்த வகையில் இந்தியன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. இந்தியன் திரைப்படத்தில் வயதான கமலுக்கு ஜோடியாக நடிகை சுகன்யா நடித்திருப்பார்.

எந்த படத்தில் நடிப்பதாக இருந்தாலும் கவர்ச்சி காட்சிகள் இல்லாததை உறுதி செய்துக்கொண்டே சுகன்யா நடிப்பார். அந்த வகையில் இந்தியன் படத்தில் உடையில்லாமல் நிற்கும் சுகன்யாவிற்கு கமல் பொட்டு வைத்து மனைவியாக ஏற்றுக்கொள்ளும் காட்சி இருக்கும்.

ஆனால் அந்த காட்சியில் எந்த கவர்ச்சியும் இல்லை என இயக்குனர் ஷங்கர் கூறியிருந்தார். ஆனால் படப்பிடிப்பு நடக்கும்போது அவர் சுகன்யாவை கவர்ச்சியாக நடிக்க வற்புறுத்தியுள்ளார். இதனால் கோபமான சுகன்யா அப்போது நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்த நடிகர் ராதா ரவியிடம் இந்த பிரச்சனையை கொண்டு சென்றுள்ளார்.

பிறகு ஷங்கரை சந்தித்த ராதா ரவி சுகன்யா கவர்ச்சியாக நடிக்க மாட்டார் என கூறியுள்ளார். தற்சமயம் ஒரு பேட்டியில் இதுக்குறித்து அவர் பேசும்போது ராதாரவிக்கு நன்றி கூறியுள்ளார் நடிகை சுகன்யா.

என்ன அந்த பாட்டு சரியில்ல.. ரகுமான் பாட்டை திருத்திய வாலி.. ஆனா செம ஹிட்டு!..

தமிழில் உள்ள பெரும் பாடலாசிரியர்களில் மிகவும் முக்கியமானவர் பாடலாசிரியர் வாலி. கவிஞர் கண்ணதாசனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியர் கவிஞர் வாலிதான். எம்.ஜி.ஆர், சிவாஜி காலகட்டங்களில் துவங்கி விஜய் அஜித் காலகட்டம் வரை கிட்டத்தட்ட 3 தலைமுறைகளாக தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு வரிகள் எழுதுவதை வேலையாக வைத்திருந்தார் வாலி.

நான் ஆணையிட்டால் பாடலில் துவங்கி மங்காத்தா வரை பல ஹிட் பாடல்களுக்கு, பாடல் வரிகளை எழுதியவர் வாலி. அதனால் மற்ற பாடல் ஆசிரியர்களை விடவும் அதிகமான அனுபவங்களை கொண்டவர் வாலி.

சங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு கமல் நடித்த வெளியான திரைப்படம் இந்தியன். மாஸ் ஹிட் கொடுத்த அந்த திரைப்படத்தில் அனைத்து பாடல்களும் எதிர்பார்த்ததை விடவும் பெரும் ஹிட் கொடுத்தன.

படத்தில் உள்ள அனைத்து பாடல்களுக்குமே வாலிதான் பாடல் எழுதினார். அதில் ஒரு பாடலுக்கு மட்டும் இசையை வாலி மாற்றி அமைத்தார். பொதுவாக பாடலாசிரியர் பேச்சைக் கேட்டு இசையமைப்பாளர்கள் பாட்டை மாற்றி அமைக்க மாட்டார்கள். ஆனால் வாலிக்கு இருந்த மரியாதை காரணமாக இந்த விஷயம் நடந்துள்ளது.

அக்கடான்னு நாங்க நட போட்டா என்கிற பாடல் முதலில் இசை அமைக்கப்பட்ட பொழுது மிகவும் சுமாரான ஒரு இசையாக அமைக்கப்பட்டுள்ளது. அதைக் கேட்ட வாலி இந்த பாடல் சுமாராக இருக்கிறது என ஏ.ஆர் ரகுமானிடம் கூறி பாடலை மாற்ற வேண்டும் எனவும் கூறி அவர் மொத்தமாக பாட்டின் மெட்டை மாற்றி அமைத்து அதன் பிறகு அதற்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார். அந்த பாடலும்  பெரும் ஹிட் கொடுத்த பாடலாகியுள்ளது.