Tag Archives: சீனா

2 நொடியில் ஒரு படம் ஏறிடும்… 10ஜி இண்டர்நெட்டை அறிமுகப்படுத்திய சீனா.!

உணவு, உடை, இருப்பிடம் மாதிரியே இப்போது மக்களுக்கு அத்தியாவசிய தேவையாக இணையமும் மாறி இருக்கிறது. இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க துவங்கியது முதலே அது தொடர்பான தொழில்நுட்பமும் வளர்ச்சியடைய துவங்கிவிட்டது.

கடந்த 10 வருட காலத்தில் மட்டும் இணைய தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. தற்சமயம் அதிவேக இணையமாக உலகம் முழுக்க 5ஜி இணைய சேவை இருந்து வருகிறது. மொபைல் போன்களும் அந்த தொழில்நுட்பத்திற்கு தகுந்தாற் போல வர துவங்கிவிட்டன.

இந்த நிலையில் அனைத்து நாடுகளும் 6ஜி தொழில்நுட்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் சீனா 10ஜி இணைய சேவையை அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 10ஜி என்பது மிக அதிக இணைய வேகத்தை கொண்ட இணைய வசதி ஆகும். இதற்காக PON Passive optical Network என்கிற தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர் சீனர்கள்.

இதன் மூலம் மூன்று நொடிகளில் 9834 எம்.பி (9 GB) பதிவிறக்கம் வேகமும் 1008 பதிவேற்றம் வேகமும் கிடைக்கிறதாம். உலக நாடுகளுக்கே இது பெரிய ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. பெரிய பெரிய ஃபைல்களை கூட கண் இமைக்கும் நேரத்தில் இதனால் பதிவிறக்க முடியும்.

இப்போதுதான் 2030க்குள் இந்திய அரசு 6ஜி தொழில்நுட்பத்தை கொண்டு வருவோம் என கூறியிருந்தது. பாரத் 6ஜி விஷன் என இதற்கு பெயரிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சீனாவின் இந்த முன்னெடுப்பு உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

எந்திரன் பட ரோபோவை நிஜமாக்கிய சீனா.. புது ஏ.ஜி.ஐ தொழில்நுட்பம்..!

ஏ.ஐ தொழில்நுட்பம் ஒரு பக்கம் ஆக்கபூர்வமானதாக பார்க்கப்பட்டாலும் கூட இன்னொரு பக்கம் ஏ.ஐ தொழில்நுட்பம் தொடர்ந்து பலருக்கும் பயத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

என்றாவது ஒருநாள் ஏ.ஐ தொழில்நுட்பம் மனிதர்களை மிஞ்சிய ஒரு ஆற்றலை பெறும். அன்று மனிதர்களுக்கு எல்லாம் வேலைகள் இல்லாமல் போய்விடும் என்பது பலரது கவலையாக இருந்து வருகிறது.

இதனை தொடர்ந்து இன்னும் பெரிய பெரிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. இந்த வகையில் தான் ஏ.ஐ யின் அடுத்த ஒரு பாய்ச்சலாக சீனா புதிதாக ஏ.ஜி.ஐ என்கிற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

எந்திரங்களை மனிதர்கள் போலவே சிந்திக்க வைக்கும் புது தொழில் நுட்பம் தான் ஏஜிஐ. ஏற்கனவே கூகுள் லேம்டா என்கிற ஒரு செயற்கை நுண்ணறிவை உருவாக்கி அதன் பிறகு அதை வெளியிடவே இல்லை.

அது மனிதர்களை போல சிந்திக்க துவங்கியது தான் அதற்கு காரணம் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் ஏ.ஜி.ஐ என்கிற இந்த தொழில்நுட்பம் எதற்கு உதவும் என்பதற்கு சீனா சில நியாயமான காரணங்களை முன்வைக்கிறது.

அதாவது ரோபோ எந்திரங்களுக்கு இந்த ஏஜிஐ தொழில்நுட்பத்தை செலுத்துவதன் மூலமாக மனிதர்கள் போலவே அவை சிந்திக்கும் உதாரணத்திற்கு வீட்டில் கீழே பால் கொட்டி விட்டது என்றால் அதை துடைக்க வேண்டும் என்கிற அறிவு மனிதர்களுக்கு இருப்பது போலவே அந்த ரோபோட்டுக்கும் இருக்கும்.

இதனால் மனிதர்களின் வேலைகள் எளிமையாகும் என்று கூறப்படுகிறது ஆனாலும் கூட மனிதர்களைப் போலவே எந்திரங்கள் சிந்திப்பது என்பது எதிர்காலத்தில் என்ன விதமான பாதிப்பை ஏற்படுத்தும் என இப்பொழுது மக்கள் இது குறித்து அச்சப்பட துவங்கியிருக்கின்றனர்.

ஆனால் சீனா தொடர்ந்து இந்த தொழில்நுட்பத்தில் ஈடுபாடு காட்டி வருகிறது

ரஜினியின் 2.0 திரைப்படத்தை முறியடித்த மகாராஜா..! சீனாவில் சாதனை.!

தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மகாராஜா. பெரிய பட்ஜெட் எதுவும் இல்லாமல் சின்ன பட்ஜெட்டிலேயே எடுக்கப்பட்ட படம் என்றாலும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது மகாராஜா.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் தமிழ் தமிழ்நாட்டில் வெளியான பொழுது 150 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்தது. பிறகு இந்த திரைப்படம் நெட்ஃப்லிக்ஸ் ஓ.டி.டி தளத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த தளத்தில் வெளியான பிறகு மகாராஜா திரைப்படத்திற்கான வரவேற்பு என்பது உலக அளவிற்கு மாறியது.

உலக அளவில் வரவேற்பு:

உலக அளவில் மாறியது உலக அளவில் மகாராஜா திரைப்படத்திற்கு நிறைய வரவேற்புகள் கிடைத்தது. அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தை வேறு நாடுகளில் வெளியிட திட்டமிடப்பட்டது.

maharaja

அந்த வகையில் தற்சமயம் சீனாவில் சீன மொழியிலேயே மகாராஜா திரைப்படம் வெளியாகி இருக்கிறது. வெளியான முதல் நாளிலேயே எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்து இருக்கிறது மகாராஜா திரைப்படம்.

முதல் நாளே 20 கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கிறது மகாராஜா திரைப்படம் இதற்கு முன்பு ரஜினியின் 2.0 திரைப்படம் தான் முதல் நாள் சீனாவில் அதிக வசூல் செய்த படமாக இருந்தது அந்த திரைப்படம் 33 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. எனவே அடுத்து மகாராஜா திரைப்படத்திற்கு திரையரங்குகள் அதிகரிக்கும் பட்சத்தில் அந்த திரைப்படம் இன்னும் அதிக வசூலை பெற்றுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.