உலக அளவில் எப்போதுமே சூப்பர் ஹீரோ திரைப்படங்களுக்கு என்று அதிக வரவேற்பு உண்டு. இப்பொழுதும் சக்திமானை விரும்பும் ரசிகர்களை பார்க்க முடியும்.
அதே போல பவர் ரேஞ்சர்ஸ்க்கு என்று தனி ரசிக்கப்பட்டாளம் உண்டு. சூப்பர் ஹீரோக்கள் சிறுவர்களுக்கு ஒரு மறக்காத அனுபவத்தை கொடுக்கும் கதாபாத்திரங்களாக இருக்கின்றன.
தமிழை பொருத்தவரை அவ்வளவாக தமிழில் பெரிதாக சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் வந்தது கிடையாது. இருந்தாலும் தொடர்ந்து அனைத்து சினிமாக்களிலும் சூப்பர் ஹீரோ திரைப்படங்களுக்கான முயற்சிகள் நடந்து கொண்டதாக இருக்கின்றன.
மின்மேன் திரைப்படம்:
அந்த வகையில் தற்சமயம் பிரபுதேவா நடித்து வரும் திரைப்படம் மின்மேன் இந்த திரைப்படம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக படமாக்கப்பட்டு வருகிறது. கிராபிக்ஸ் அனிமேஷன் தெரிந்த ஒரு இளைஞர் கூட்டம் என்னிடம் வந்து படம் பண்ண வேண்டும் என்று கேட்டார்கள். நானும் அதற்கு ஒப்புக்கொண்டேன் ஏனெனில் படம் நன்றாக வருதோ இல்லையோ?
இந்த இளைஞர்கள் புதிதாக ஒன்றை முயற்சி செய்ய நினைக்கிறார்களே அதற்கு நாம் உதவுவோம் என்று நான் நினைத்தேன் ஆனால் படப்பிடிப்புகளை நடத்திய பிறகு அவர்கள் சில காட்சிகளை எனக்கு காட்டினார்கள் அதை பார்த்து நான் மிரண்டு போய் விட்டேன் கண்டிப்பாக இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று பிரபு தேவா கூறி இருக்கிறார்.