Tag Archives: nanban

என் படம் எப்படி ஓடுதுன்னு எனக்கே தெரியலை.. ஓப்பன் டாக் கொடுத்த விஜய்..!

தமிழ் சினிமாவில் எப்போதுமே வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக தற்சமயம் விஜய் இருந்து வருகிறார். சினிமாவில் உயரத்தை தொடுவதற்கு விஜய் நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறார்.

ஆரம்பத்தில் நிறைய விமர்சனங்களுக்கு விஜய் உள்ளாகி இருந்தாலும் கூட போக போக சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார். இப்பொழுது தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகராக மாறி இருக்கிறார் விஜய்.

இந்த நிலையில் விஜய் இப்படிப்பட்ட ஒரு நிலையை விட்டுவிட்டு அடுத்து அரசியலுக்கு செல்வது பலருக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் விஜய் முன்பு சினிமா தொடர்பாக கொடுத்த பேட்டிகள் எல்லாம் இப்பொழுதும் அதிக வைரல் ஆகி வருகின்றன.

vijay

விஜய் சொன்ன விஷயம்:

ஏனெனில் இப்பொழுது விஜய் அதிக சீரியஸாக இருப்பதை பலரும் பார்த்து வருகிறோம். ஆனால் முன்பெல்லாம் விஜய் மிக ஜாலியாக பேட்டிகளில் பேசி வருவார். இப்படியாக நண்பன் திரைப்படத்திற்காக ஒரு பேட்டி நடத்தப்பட்டது.

அந்த விழாவில் விஜய் கலந்து கொண்ட பொழுது ரசிகர்கள் பலரும் அவரிடம் கேள்வி கேட்டனர். அப்படியாக ஒரு ரசிகர் விஜயிடம் கேள்வி கேட்கும் பொழுது நீங்கள் நடித்த திரைப்படங்களில் இந்த ஒரு திரைப்படம் நல்ல வெற்றியை கொடுக்காது என்று நீங்கள் நினைத்தும் பெரிய வெற்றியை கொடுத்த படம் எது என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த விஜய் என்னுடைய எல்லா படத்தின் மீதும் அப்படியான ஒரு சந்தேகம் இருக்கிறது என்று பதில் அளித்துள்ளார் அந்த வீடியோ இப்பொழுது ட்ரெண்டாகி வருகிறது.

உள்ளுக்குள்ள அழுதுக்கிட்டு இருக்கேன்.. ஆனால் காட்டிக்க முடியலை.. விஜய் படம் குறித்து பேசிய ஸ்ரீ காந்த்..

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக இருந்து வந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு கல்லூரி பெண்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருந்தது.

கிட்டத்தட்ட கமல்ஹாசனை போல இவரும் ஒரு காதல் மன்னனாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில நாட்களிலேயே ஸ்ரீகாந்த் வாய்ப்புகளை இழக்க தொடங்கினார்.

தமிழில் வரவேற்பு:

அவர் நடித்த ரோஜா கூட்டம் மாதிரியான திரைப்படங்கள் அப்போது வெகுவான வரவேற்பை பெற்றது. ஆனால் போக போக பம்பர கண்ணாலே மாதிரியான திரைப்படங்களில் நடிக்கும் பொழுது கதைகளை தேர்ந்தெடுப்பதில் நிறைய தவறவிட்டார் ஸ்ரீகாந்த்.

மேலும் அவரது உடல் எடை அதிகரித்ததும் பார்ப்பதற்கு வயதான தோற்றத்தில் தோன்ற துவங்கினார். அதனை தொடர்ந்து அவர்கள் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இருந்தாலும் அவருக்கு ஒரு கம்பேக்காக வந்த திரைப்படம் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த நண்பன்.

ரீ எண்ட்ரிக்கு பிறகும் வாய்ப்பில்லை:

நண்பன் திரைப்படம் வந்த பொழுது மீண்டும் உடல் எடையை குறைத்து அழகான சின்ன பையன் போலவே அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படத்திற்கு பிறகும் அவருக்கு வாய்ப்புகளோ அல்லது வரவேற்புகளோ கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் இது குறித்த அவரிடம் கேட்ட பொழுது எனக்கும் அதுதான் தெரியவில்லை நண்பன் திரைப்படத்திற்கு பிறகும் கூட ஏன் என்னை யாருமே அழைக்கவில்லை. நான் நன்றாக தானே நடித்து இருந்தேன் வெளியில் நாங்கள் எல்லாம் சிரித்துக் கொண்டிருந்தாலும் கூட உள்ளுக்குள் அழுது கொண்டுதான் இருக்கிறோம்.

எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் ஏன் எங்களுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்று எங்களுக்கே தெரியவில்லை என்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த்.

பரீச்சைக்கு கூட அப்படி மனப்பாடம் பண்ணுனது இல்ல!.. பட வசனத்தை இரண்டு நாளாக மனப்பாடம் செய்த விஜய்!..

தமிழ் சினிமாவில் சிறு வயது முதலே பல வேடங்களில் நடித்து வந்து பிறகு கதாநாயகன் ஆனவர் நடிகர் விஜய். திரை உலகிற்கு வந்த காலம் முதலே கடுமையாக உழைத்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர் விஜய்.

விஜய் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் மிகவும் கேளிக்கு உள்ளாக்கப்பட்டார். அவரைப் பார்த்த பலரும் அவரை உருவ கேலி செய்தனர். ஆனால் அதை எதையுமே கண்டு கொள்ளாது அப்போதைய இளம் வயதிலும் கூட தொடர்ந்து சினிமாவில் முயற்சித்து போராடி வந்தார்.

அந்த சமயத்தில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் பூவே உனக்காக, பூவே உனக்காக திரைப்படத்திற்கு பிறகுதான் காதல் தொடர்பான திரைப்படங்கள் விஜய்க்கு வர துவங்கின. காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், நினைத்தேன் வந்தாய் போன்ற திரைப்படங்கள் எல்லாம் அவரது மார்க்கெட்டை இன்னும் அதிகப்படுத்தியது.

பிறகு திருமலை திரைப்படம் மூலமாக ஒரு ஆக்ஷன் கதாநாயகனாக மீண்டும் சினிமாவிற்குள் களம் இறங்கினார் விஜய். அப்போது துவங்கி இப்போது வரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவே வளம் வந்து கொண்டுள்ளார் விஜய்.

விஜய்யை ஒரு டெடிகேஷன் ஆன நடிகர் என்று கூறலாம் எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்கும் பொழுதும் முழு ஈடுபட்டோடு அந்த படத்தில் நடிக்க கூடியவர். இப்படி நண்பன் படத்தில் நடந்த ஒரு நிகழ்வை விஜய் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

நண்பன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஒரு புத்தகத்தின் பெயரை கூறுவதற்கு பெரிய விரிவான வசனம் ஒன்றை கூறுவார். அதை ஒரே டேக்கில் செய்து முடித்தார் விஜய். இது குறித்து அவர் அந்த பேட்டியில் கூறும் பொழுது இரண்டு நாட்கள் முன்பே அந்த வசனம் வரும் என்று எனக்கு தெரியும்.

எனவே நான் வசனத்தை வீட்டுக்கு கொண்டு சென்று இரண்டு நாட்கள் உட்கார்ந்து மனப்பாடம் செய்தேன். என்று கூறியிருக்கிறார் அப்பொழுது அவரிடம் பேசிய தொகுப்பாளர் பள்ளி படிக்கும் காலங்களில் இப்படி ஏதாவது விஷயங்களை மனப்பாடம் செய்திருக்கிறீர்களா என்று கேட்ட பொழுது விஜய் அதற்கு இல்லை பள்ளி காலங்களில் கூட அப்படி எதுவும் நான் மனப்பாடம் செய்ததில்லை என்று கூறியுள்ளார்.