Tag Archives: SwaRail

எல்லாத்துக்கும் ஒரே ஆப்.. இந்தியன் ரயில்வே வெளியிடும் புது செயலி.. சிறப்பான அம்சங்கள்.!

முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை எடுப்பவர்கள் மட்டுமே பொதுவாக ரயில் நிலையம் சென்று டிக்கெட் எடுக்கின்றனர். மற்றப்படி ரிசர்வேஷன் என வந்துவிட்டாலே IRCTC தளத்தில்தான் அனைவரும் டிக்கெட் புக் செய்து வருகின்றனர்.

ஆனால் தட்கல் புக்கிங்கின் போது சர்வர் ஸ்லோ ஆவது என பல பிரச்சனைகளை கொண்டுள்ளது ஐ.ஆர்.சி.டி.சி தளம். இந்திய மக்கள் தொகைக்கு தகுந்த அளவில் இங்கு இரயில் வசதி இல்லாததால் புக்கிங் சமயங்களில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஐ.ஆர்.சி.டி.சி தளத்தை பயன்படுத்துகின்றனர்.

அதனால் அந்த தளம் ஸ்லோ ஆகிறது. இதனை தொடர்ந்து பல அம்சங்களை உள்ளடக்கிய புது ஆப் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது இந்தியன் ரயில்வே. இதற்கு முன்பு ரயிலை ட்ராக் செய்ய தனி ஆப், முன் பதிவில்லாத டிக்கெட்களுக்கு ஒரு ஆப், ரிசர்வேஷனுக்கு தனி ஆப் என இருந்தது.

இது அனைத்தையும் ஒன்றிணைத்து SwaRail எனும் ஆப் வெளியிடப்பட்டுள்ளது. இதில்

டிக்கெட் முன்பதிவு

முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் மற்றும் ப்ளாட்பார்ம் டிக்கெட்

  • பார்செல் குறித்த விவரங்களை கண்டறிதல்
  • பி.என்.ஆர் விவரங்களை சரிபார்த்தல்
  • உணவு ஆர்டர் செய்தல்
  • ரயிலை ட்ராக் செய்தல்

போன்ற அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் பயனாளர்களுக்கான யூசர் இண்டர்ஃபேசும் இந்த ஆப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த புது ஆப் பயன்படுத்த இன்னமும் எளிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.