Tamil Flop Movies 2023 : இந்தியாவிலேயே அதிக திரைப்படம் வெளியாகும் திரை துறையில் முக்கியமான ஒரு இடத்தை பிடித்துள்ளது தமிழ் சினிமா துறை. தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான திரைப்படங்கள் வெளியானாலும் அதில் நிறைய திரைப்படங்கள் பெரும் தோல்வியை காண்கின்றன. அந்த வகையில் பெரும் கதாநாயகர்கள் நடித்தும் பெரிதாக வெற்றி பெறாமல் தோல்வி பெற்ற ஐந்து திரைப்படங்களை தான் இப்போது பார்க்க போகிறோம்
அகிலன், இறைவன்: இந்த வருடம் உண்மையில் நடிகர் ஜெயம் ரவிக்கு அவ்வளவு சிறப்பான வருடமாக இருக்கவில்லை என்று கூறலாம். இந்த வருடம் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 2 திரைப்படங்களும் பெரிதாக வெற்றியை பெறவில்லை. பெரும் தோல்வியை கண்டிருக்கின்றன என்றுதான் கூற வேண்டும்.
துறைமுகத்தில் நடக்கும் கடத்தல்கள் சார்ந்து வெளிவந்த அகிலன் திரைப்படம் மக்கள் மத்தியில் பேசப்படவில்லை அதனை தொடர்ந்து பிறகு வந்த இறைவன் என்கிற சைகோ த்ரில்லர் திரைப்படம் பலரையும் முகம் சுளிக்க வைக்கும் படமாக இருந்தது.
வீரன்: மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் போன்ற வரிசையாக வெற்றி படங்களாக கொடுத்து வந்த ஹிப் ஹாப் ஆதிக்கு இந்த வருடம் பெரும் வரவேற்புடன் வெளியாகி தோல்வியை கண்ட திரைப்படம் வீரன்.
சூப்பர் ஹீரோ கதையை அடிப்படையாகக் கொண்டு அதில் நாட்டார் தெய்வத்தை கலந்து எடுத்த இந்த திரைப்படத்தில் ஏதோ ஒரு சின்ன தவறு நேர்ந்ததால் கதை சுவாரஸ்யமாக இருந்த பொழுதும் படத்தின் மீது பலருக்கும் விருப்பம் இல்லாமல் போய்விட்டது.
ருத்ரன்: கடன் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான திரைப்படம் ருத்ரன் பெரும் எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தினாலும் கூட வெளியான பிறகு பெரிதாக வரவேற்பை பெறவில்லை இந்த திரைப்படத்தை இயக்குனர் கதிரேசன் இயக்கியிருந்தார்
டக்கர்: நடிகர் சித்தார்த் நடிப்பில் இந்த வருடம் இரண்டு திரைப்படங்கள் வந்தன அதில் ஒன்று டக்கர் மற்றொன்று சித்தா. சித்தா திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. ஆனால் டக்கர் திரைப்படம் பெரிதாக வரவேற்பை ஏற்படுத்தவில்லை. வந்த சுவடு தெரியாமல் இந்த திரைப்படம் போய்விட்டது என்று தான் கூற வேண்டும்.
காதர் பாட்ஷா என்னும் முத்துராமலிங்கம்: தென் தமிழக இயக்குனரான முத்தையா இயக்கத்தில் வெளி வந்த திரைப்படம் காதர் பாட்ஷா என்னும் முத்துராமலிங்கம் வழக்கம் போல ஊருக்குள் நடக்கும். பஞ்சாயத்துக்களை இந்த படத்திலும் பாடமாக்கி இருந்தார் முத்தையா ஆனால் அது முந்தைய படங்களில் ஒர்க் அவுட் ஆனது போல ஒர்க் அவுட் ஆகவில்லை.