விடாமுயற்சி திரும்பவும் தள்ளி போக இவர்தான் காரணம்.. கடுப்பில் இருக்கும் தயாரிப்பு நிறுவனம்.

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெகு காலங்களாகவே தயாராகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படம் குறித்து அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

ஏனெனில் இந்த திரைப்படம் ப்ரேக் டவுன் என்கிற ஹாலிவுட் படத்தின் தழுவல் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தன. அதனை தொடர்ந்து மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது.

ஆனால் அதில் பிரச்சனை என்னவென்றால் இயக்குனர் மகிழ் திருமேனி தொடர்ந்து இந்த படத்தை தாமதப்படுத்தி வருகிறார் என கூறப்படுகிறது. இதனாலேயே விடாமுயற்சி படம் தாமதம் ஆகி வந்தது.

பொறுத்து பார்த்த லைகா நிறுவனம் தொடர்ந்து பொங்கல் அன்று விடாமுயற்சி வெளியாகும் என தேதியை அறிவித்தது. அப்போதாவது இயக்குனர் வேகமாக முடிப்பார் என அவர்கள் அப்படி செய்தனர்.

ஆனால் அப்படியும் இந்த படம் தாமதமாகி கொண்டுள்ளது. இந்த நிலையில் நேற்று லைகா ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதன்படி பொங்கலுக்கு படம் வெளியாகாது என தெரிவித்துள்ளது லைகா நிறுவனம்.

விடா முயற்சி வருவதற்குள் குட் பேட் அக்லியே வெளியாகிவிடும் என்கின்றனர் ரசிகர்கள்.