வில்லன்களின் கூட்டணியில் மார்வெல்லின் அடுத்த படம்.. வெளியான Thunderbolts ட்ரைலர்.!

தொடர்ந்து சூப்பர் ஹீரோ திரைப்படங்களாக தயாரித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிறுவனமாக மார்வெல் நிறுவனம் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் காமிக்ஸ் மட்டுமே போட்டு வந்த மார்வெல் நிறுவனம் பட தயாரிப்பில் இறங்கியது.

அதில் வெற்றியும் கண்டு வருகிறது. ஏற்கனவே அவெஞ்சர்ஸ் டீம் ஒன்றை உருவாக்கி அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தோடு அவர்களுக்கு கதையை முடித்துவிட்டது மார்வெல்.

அடுத்ததாக புது அவெஞ்சர் டீமை உருவாக்கி வருகிறது. இந்த டீமில் உள்ளவர்களை வைத்துதான் அவெஞ்சர்ஸ் டூம்ஸ் டே மற்றும் அவெஞ்சர் சீக்ரெட் வார் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வர இருக்கின்றன.

இந்த நிலையில் ஏற்கனவே ஃபெண்டாஸ்டிக் போர் திரைப்படம் வெளியான நிலையில் அடுத்ததாக தண்டர்போல்ட் என்கிற திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதற்கு முன்பு அவெஞ்சர்ஸ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களாக இருந்த சூப்பர் பவர் எதுவும் இல்லாத கூட்டம் ஒன்று இதில் களம் இறங்குகிறது.

டாஸ்க் மாஸ்டர் என்கிற வில்லனுக்கு எதிராக இவர்கள் செய்ய போகும் சாகசங்களே பட கதையாக இருக்கிறது. இதற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.