தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜி கணேசனின் மகனாக ஒரு காலக்கட்டத்தில் அறிமுகமானவர் நடிகர் பிரபு. பெரும்பாலும் பிரபு நடிக்கும் திரைப்படங்கள் அந்த சமயங்களில் ஓரளவு வரவேற்புகள் இருந்தன.
ஆனால் ரஜினி,கமல் மாதிரியான நடிகர்களின் வருகைக்கு பிறகு பிரபுவிற்கு வாய்ப்புகள் என்பது குறைய துவங்கியது. அதற்கு பிறகு கமல், ரஜினி மாதிரியான நடிகர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு துணை நடிகராக பிரபி நடித்து வந்தார்,
ஆனால் என்ன இருந்தாலும் எப்போதும் தமிழ் சினிமா பிரபுவை கை விட்டதில்லை. எல்லா காலங்களிலும் வாய்ப்புகளை பெற்று நடித்து வந்துக்கொண்டிருந்தார் பிரபு. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் பிரபுவிற்கு உடல் உபாதை ஏற்பட்டது.
கடந்த ஜனவரி 3 ஆம் தேதி உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் பிரபு. பிறகு அவருக்கு மூளையில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அவரது மூளையில் உள்ள கட்டியானது நீக்கப்பட்டது. இந்த நிலையில் தற்சமயம் அவர் உடல்நிலை சரியாகி வீடு திரும்பியுள்ளார். நடிகர் பிரபுவிற்கு இருக்கும் அதிக உடல் எடையே இதற்கு காரணம் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.