சினிமாவில் ஒரு நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் சாதிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே ஒருவர் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும். கிடைக்கும் சின்ன, சின்ன வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தினால் தான் வாழ்க்கையில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அந்த வகையில் சினிமாவில் தனக்கு கிடைத்த சிறிய வாய்ப்புகளை பயன்படுத்தி தற்போது ஒரு முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டு இருக்கும் பிரபல காமெடி நடிகர் தான் சூரி.
தற்போது அவரின் மகளுக்கு அவர் கூறிய அறிவுரை பற்றி பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
நடிகர் சூரி
தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருபவர் நடிகர் சூரி. சினிமாவில் சாதிப்பதற்கு அவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம். சூரி கடந்த 2009 இல் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் மக்களிடையே பிரபலம் அடைந்தார். அதில் வரும் பரோட்டா காமெடியின் மூலம் புகழ்பெற்றதால் இவரை அனைவரும் பரோட்டா சூரி என அழைத்து வந்தார்கள்.
அதன் பிறகு பல படங்களில் காமெடியனாக நடித்து வந்த சூரி சிவகார்த்திகேயனுடன் இணைந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இருவரின் காம்பினேஷனும் ரசிகர்களுக்கு பிடித்துப் போக அடுத்தடுத்த படங்களில் இருவரும் கூட்டு சேர்ந்தார்கள்.
காமெடியனாக பார்த்து வந்த சூரியை திரையில் ஹீரோவாக பார்த்தது விடுதலை பாகம் ஒன்றில். அனைவரும் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதனைத் தொடர்ந்து பல படங்களில் அவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய மகளுக்கு கூறிய அறிவுரை ஒன்றை பற்றி பேசியுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சூரி தன் மகளுக்கு கூறிய அறிவுரை
தன் மகளுக்கு கூறிய அறிவுரை பற்றி நடிகர் சூரி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார், ஒருமுறை அவரின் மகள் அப்பா நீங்கள் ஏவிஎம் பக்கத்தில் இருக்கும் கட்டிடத்தில் வேலை பார்த்ததாக அம்மா கூறினார்கள். அது உண்மையா? என கேட்டுள்ளார். அதற்கு சூரி ஆமாம், அந்த கட்டிடம் மட்டுமல்ல நீயும், அம்மாவும் துணி எடுக்க சென்ற கட்டிடம் எல்லா இடங்களிலும் அப்பா வேலை பார்த்து இருக்கிறேன். அங்கு கூட்டமாக இருக்கும் அந்த கட்டிடத்தின் ஓரத்தில் ஒரு படியில் உட்கார்ந்து நிறைய முறை அப்பா சாப்பிட்டு இருக்கிறேன்.
அங்கெல்லாம் கஷ்டப்பட்டு வேலை பார்த்ததால் தான் இப்பொழுது இந்த இடத்தில் இருக்கிறேன். இதை மற்றவர்களின் கருணைக்காக நான் கூறவில்லை. என்னுடைய மகள் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு கஷ்டப்பட்டதால் தான் நான் இந்த இடத்தில் தற்பொழுது இருக்கிறேன்.
இது என்னுடைய மகளுக்கு தெரிய வேண்டும். அதனால் நான் எவ்வாறு வேலை பார்த்து கஷ்டப்பட்டேன் என்பதை என் மகளுக்கு கூறியுள்ளனேன் என நடிகர் சூரி அந்த பேட்டியில் தெரிவித்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலராலும் பாராட்டை பெற்று வருகிறது.