புத்தகம் படிச்சா உலகத்தையே மறந்துருவார்! – விவேக்கிற்கு சின்ன வயதில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்!

தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் விவேக். நகைச்சுவை வழியாகவே சமூகத்திற்கு தேவையான பல கருத்துக்களை பேசக்கூடியவர் இவர்.

தமிழில் பல படங்களில் கதாநாயகனுக்கு நண்பனாக நடித்து வந்தவர். பல இளம் கதாநாயகர்களோடு கூட இவர் நடித்துள்ளார். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி விவேக் ஒரு சிறந்த வாசிப்பாளர்.

சிறு வயது முதலே விவேக் புத்தகம் படிப்பதில் அதிக நாட்டம் கொண்டவர். புத்தகம் படிக்கும்போது அவருக்கு தன்னை சுற்று நடக்கும் விஷயங்கள் எதுவுமே தெரியாது. அந்த அளவிற்கு ஆழ்ந்து புத்தகம் படிக்க கூடியவர் விவேக்.

ஒருமுறை விவேக் இப்படி புத்தகம் படித்துக்கொண்டிருக்கும்போது அவரது தாய் வெளியே செல்வதாகவும், அதனால் வருவதற்குள் சாப்பிட்டுவிடுமாறும் கூறிவிட்டு சென்றுள்ளனர். புத்தகம் படித்துக்கொண்டிருந்த விவேக் இது எதையுமே காதில் வாங்கி கொள்ளவில்லை.

இந்த நிலையில் அவரது தாய் சென்ற பிறகு ஒரு நாய் அவரது வீட்டிற்குள் வந்துள்ளது. ஆனால் அதையும் கவனிக்காமல் புத்தகத்தில் ஆழ்ந்திருக்கிறார் விவேக். இதை பயன்படுத்திக்கொண்ட நாய் அவருக்கு வைத்திருந்த உணவை உண்டுவிட்டு வெளியே சப்பு கொட்டிக்கொண்டு சென்றுள்ளது.

வீட்டிலிருந்து நாய் வருவதை பார்த்த அவரது தாயார் வேகமாக வீட்டிற்குள் சென்று விவேக்கை அடி பின்னியுள்ளார். இந்த அனுபவத்தை ஒரு பேட்டியில் விவேக் கூறியுள்ளார்

Refresh