சினிமாவில் நாம் பார்த்து ரசிக்கும் நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் என அனைவரும் பிரபலமானவர்களாக இருந்தாலும் அவர்களும் சக மனிதர்கள் போன்றவர்கள் தான்.
இந்நிலையில் நிகழ்ச்சிக்காக பங்கேற்ற நடிகர். நடிகைகளிடம் சில ரசிகர்கள் அத்துமீறி நடப்பதும் ஒரு சில பத்திரிக்கையாளர்கள் அவர்களிடம் கேட்க கூடாத கேள்விகளை கேட்பதும் போன்ற நிகழ்வுகள் அவ்வg;போது அரங்கேறும்.
இதனால் கோபம் அடைந்த நடிகரங, நடிகைகள் அந்த இடத்திலேயே உணர்ச்சிவசப்பட்டு அடித்து விடுவார்கள் அல்லது அவர்களை பேசி விடுவார்கள்.
அந்த வகையில் மூன்று நடிகைகளிடம் அத்துமீறி நடந்து கொண்டதால் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ராக்கி சாவந்த்
இவர் மராத்தி, தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வருபவர். மேலும் இந்திய ரியாலிட்டி ஷோவில் இறுதிப் போட்டியாளராவார். இவர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது அந்த படத்தின் டைரக்டரை இவர் மேடையிலேயே அறைந்திருப்பார். அது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஹாலிவுட் நடிகை சோபியா வெர்கரா
இவர் ஹாலிவுட் பிரபலமான நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளராவார். மேலும் குறுந்தொடர்களிலும் நடித்திருக்கிறார். மேலும் அமெரிக்க நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருக்கிறார். இவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து இருக்கும் பொழுது அவரை கோபப்படுத்த வேண்டும் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதந்த கேள்வியில் ஆத்திரமடைந்த சோபியா, அந்த கேள்வி கேட்ட தொகுப்பாளரை ஓங்கி கன்னத்தில் அறைந்து விட்டு சென்று விடுவார்.
வில் ஸ்மித்
இவர் அமெரிக்க திரைப்பட நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். மேலும் அமெரிக்க திரைப்படங்களின் முக்கிய நட்சத்திரமாகவும் இவர் பார்க்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் 2022 ஆஸ்காரின் போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் கன்னத்தில் அறைந்திருப்பார். இதற்கு காரணம் அந்த விருது விழா நிகழ்ச்சியில் வில் ஸ்மித்தின் மனைவி மொட்டை அடித்து வந்திருப்பார். அவரை கலாய்க்கும் விதத்தில் தொகுப்பாளர் பேசியிருப்பதால் மேடை ஏறிச் சென்று அவரின் கன்னத்தில் அறைந்திருப்பார்.