All posts by Sakthi

சோபிதா நாக சைதன்யா திருமணம் நடக்காது.. இது என்ன புது பிரச்சனை

சமீப காலங்களாக சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கும் ஜோடி நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா ஜோடி. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இருவரின் நிச்சயதார்த்தம் நடைபெற்று புகைப்படங்கள் வெளிவந்த நிலையில் இவர்களைப் பற்றிய சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் சுற்றிக்கொண்டு இருக்கிறது.

நிச்சயதார்த்தம் நடைபெற்று சில நாட்கள் ஆனாலும் இவர்களைப் பற்றிய சர்ச்சை இன்னும் ஓயவில்லை. இந்நிலையில் சோபிதாவும், நாக சைதன்யாவும் பிரிந்து விடுவார்கள் என ஒருவர் கூறியது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நாக சைதன்யா சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம்

நாக சைதன்யா முன்னதாக நடிகை சமந்தாவை 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டு பிரிந்து விட்டார்கள்.

அதன் பிறகு நாக சைதன்யா சோபிதா உடன் டேட்டிங் செய்து வந்த நிலையில் இருவரும் காதலித்து தற்போது இரு வீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது. இவர்களின் புகைப்படங்களை நாக சைதன்யாவின் அப்பா நாகார்ஜுனா அவரின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட, அது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், சினிமா வட்டாரங்களையும் திரும்பி பார்க்க வைத்தது.

இந்நிலையில் பலரும் சமந்தாவுக்கு ஆதரவாகவும், நாக சைதன்யாவுக்கு எதிராகவும் பல கருத்துகளைப் பேசி வந்தார்கள். தற்போது ஒரு ஜோதிடர் ஒருவர் நாக சைதன்யா மற்றும் துலிபாபா பற்றி கூறியிருக்கும் கருத்து ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா பிரிந்து விடுவார்கள்

சமீபத்தில் பிரபல ஜோசியர் ஒருவர் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா வரும் 2027 ஆம் ஆண்டில் பிரிந்து விடுவார்கள். அதன் பிறகு நாக சைதன்யாவிற்கு மற்றொரு பெண் மேல் காதல் ஏற்படும் என தெரிவித்திருந்தார். இந்த விஷயம் இணையத்தில் பேசுபொருளானது.

இதைப் பற்றி பேசிய பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சுபைர் பிரபலங்கள் மீது விமர்சனம் வைத்தால் தன்னை அனைவரும் திரும்பி பார்ப்பார்கள், என்று பலரும் பேசி வருகிறார்கள். இது வழக்கமான ஒன்று தான். ஆனால் பல ஜோதிடர்கள் சொல்வதெல்லாம் நடந்திருக்கிறதா என்ன என அவர் கேட்டுள்ளார்.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் ஆகுவார் என்றும், சென்னையில் வெள்ளம் வந்த பொழுது இந்த வருடம் நல்ல வருடமாக அமையும் என பல ஜோசியர்கள் கூறினார்கள். அதெல்லாம் நடந்ததா என்ன அது போல தான் இந்த விஷயமும் என கூறியிருக்கிறார்.

ட்ரைவரிடம் தாய் பால் கொடுத்த காஜல் அகர்வால்.. கேரவனில் அவசரமாக நடந்த சம்பவம்!..

பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை காஜல் அகர்வால். முதலில் தன்னுடைய சினிமா பயணத்தை ஹிந்தியில் ஆரம்பித்த இவர் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த ஹேக் காயா நாகா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

நடிகை காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் கடந்த 2008 ஆம் ஆண்டு பரத், குஷ்பூ நடிப்பில் வெளிவந்த பழனி திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். மேலும் அதன் பிறகு தமிழில் பல படங்கள் அவருக்கு குவிந்தன.

பிறகு 2001 ஆம் ஆண்டு மகதீரா என்ற திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை பதிவு செய்தார். இந்த படம் வணிக ரீதியாக நல்ல வெற்றியை கொடுத்ததால் காஜல் அகர்வாலுக்கு மேலும் பட வாய்ப்புகள் குவிந்தது.

தமிழில் முன்னணி நடிகரான விஜயுடன் ஜில்லா, மெர்சல், துப்பாக்கி திரைப்படத்திலும் அஜித்துடன் விவேகம் திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.

கார்த்தியுடன் நடித்த ஆல் இன் ஆல் அழகு ராஜா திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. இந்நிலையில் இவர் கௌதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இவருக்கு நீல் என்ற ஒரு மகனும் இருக்கிறான்.

ஓப்பனாக பேசிய நடிகை காஜல் அகர்வால்

குழந்தை பிறந்த பிறகும் நான் திரைப்படங்களில் நடிக்கிறேன். மேலும் நான் ஷூட்டிங் செல்லும் பொழுது என்னுடைய மகனையும் அழைத்து செல்வேன். என்னுடைய கேரவன் படப்பிடிப்பு தளத்திலிருந்து தூரமாக நின்று கொண்டிருக்கும்.

நான் என்னுடைய மகனுக்காக தாய்ப்பால் கறந்து என்னுடைய டிரைவரிடம் கொடுத்து அனுப்புவேன். இவ்வாறு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என்னுடைய டிரைவர் தாய்ப்பாலை கொண்டு போய் என்னுடைய மகனுக்கு கொடுத்துவிட்டு வருவார்.

இவ்வாறாகத்தான் நான் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் ஷூட்டிங் நடித்து வந்தேன். மேலும் தாய்ப்பால் ஒரு குழந்தைக்கு அவ்வளவு முக்கியம் என காஜல் கூறியிருக்கிறார்.

தங்கலான் படத்தில் இதை பண்ணாதீங்க!.. ஆடியன்ஸ் தெளிவாயிட்டாங்க.. விமர்சனம் கொடுத்த இயக்குனர்!.

தற்போது தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதைகள் படமாக பட்டு வரும் வேளையில், இயக்குனர்களும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை காண்பிக்கும் வகையிலும், அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையும் படமாக எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமீப காலங்களாக குறிப்பிட்ட இயக்குநர்களும் ஒவ்வொரு சமூகத்தில் நடக்கும் பல விஷயங்களை வெளிப்படுத்தி வரும் வேளையில். அது சில சமயம் விமர்சனமாகவும் அல்லது சர்ச்சையாகவும் மாறிவிடுகிறது.

ஏனென்றால் சினிமா என்பது அனைவருக்கும் பொதுவான விஷயமாகும். சொந்த கருத்துக்காக சினிமா எடுப்பது என்பது மக்களைச் சென்றடையாது என பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தற்போது தயாரிப்பாளர் வெங்கடேசன் அவரின் கருத்தை பற்றி கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தங்கலான் திரைப்படம்

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த படம் தங்கலான் . இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்க விக்ரம், மாளவிகா மோகன், பார்வதி, பசுபதி என அனைவரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் கதை கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க சுரங்கம் அதாவது கே ஜி எஃப் இல் கதாநாயகன் விக்ரம் மற்றும் அவரின் ஆட்களுடன் தங்கம் தேடும் பணியில் ஈடுபடுகிறார். அப்போது நடக்கும் சில அமானுஷ்யமான விஷயங்கள் போன்ற சம்பவங்களை படமாக்கி உள்ளார்கள் என அப்போது தகவல் வெளியானது.

இந்நிலையில் தயாரிப்பாளர் வெங்கடேசன் தங்கலான் படத்தின் இயக்குனர் பற்றியும், படத்தைப் பற்றியும் கூறியிருக்கும் தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

தயாரிப்பாளர் வெங்கடேசன் கூறியது

தயாரிப்பாளர் வெங்கடேசன் கூறும் பொழுது நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படம் ஒரு பட்டியலின சமூகத்தை வைத்து எடுக்கப்பட்ட படம் அனைவராலும் பாராட்டை பெற்றது. மேலும் வெற்றிமாறன் இயக்கிய மற்றொரு படமான விடுதலையும் குறிப்பிட்டு ஒரு ஜாதியின் பெயரை கூறாமல் ஒரு வாத்தியாரை வைத்து படம் நகர்ந்தது அதுவும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் பழைய படங்களில் கதாபாத்திரத்தின் பெயர் ஜாதி பெயரை வைத்து இருந்தாலும், எந்த இடத்திலும் இவர்கள் உயர்ந்த ஜாதி, இவர்கள் தாழ்ந்த ஜாதி என்று எங்கேயும் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள்.

ஆனால் தற்போது அவரவர்களின் வலிகளை கூறுகிறோம் என ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ மதத்தையும் மட்டும் வைத்து படம் எடுக்கும் பொழுது அது மற்ற சமூகத்தினரால் வெறுக்கப்படும். சினிமா என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. இந்நிலையில் மேலும் அவர் பேசும் பொழுது தற்போது ரஞ்சித் இயக்கும் தங்கலான் திரைப்படம் சமீபத்தில் இறந்த ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முன்பாக இருந்த தங்கலான் படம் வேறு. அவரின் கொலைக்குப் பிறகு இருக்கும் தங்கலான் படம் வேறு என அவர் கூறியிருக்கிறார்.

மேலும் அவர் பேசும் போது சினிமாவிலும் அரசியலிலும் நல்லவர்களை சம்பாதிக்கிறோமோ இல்லையோ எதிரிகளை யாரும் சம்பாதிக்க கூடாது என கூறினார். இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் டிஜிட்டல் மீடியா இருக்கு. படத்தைப் பார்த்துவிட்டு அவர்கள் சொந்த கருத்துக்களை எழுதுவார்கள்.

மேலும் இன்றைய காலகட்டத்தில் ஒருவருடைய படம் வெற்றி பெற வேண்டும் என்றால் சொந்த கருத்தை மட்டும் கொண்டு படத்தை எடுத்தால் அது மக்களிடையே வெற்றி பெறாது என அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் தங்கலான் படத்தின் கதைக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். படத்தில் தங்களின் சொந்த கருத்துகளை கொண்டு வர வேண்டாம் ஒரு ஜாலியான என்டர்டைன்மெண்ட் ஆன படம் வரும்போது அனைவரிடத்திலும் வெற்றி அடையும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

முதல் படத்துல துவண்டு போன அஜித்க்கு ஆறுதல் சொன்ன நபர்… வளர்ந்த பிறகு அஜித் செய்த கைமாறு.. யாருமே பண்ணியிருக்க முடியாது!.

தமிழ் சினிமாவில் தற்போது கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் முன்னணி நடிகர் அஜித். இவர் தன்னுடைய ரசிகர் மன்றங்களை கலைத்த போதும் இவரின் படம் வெளியாகிறது என்றால் அது அவரின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையும்.

அந்த வகையில் நடிகர் அஜித் சினிமாவில் பல கஷ்டங்களைக் கடந்து தற்பொழுது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவிற்குள் நடிக்க வரும் போது நடந்த சம்பவம் பற்றி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்

தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் அஜித்.
மெக்கானிக்காக வாழக்கையை தொடங்கிய அஜித், விளம்பர படங்களில் நடித்து வந்தார். இவரின் ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் ஏகே என்று அன்போடு அழைத்து வருவார்கள். இவருக்கு நடிப்பதை விடவும் கார், பைக் பந்தயங்களில் பங்கு பெற்றுக் கொள்ள அதிகம் விரும்புவார்.

ஆரம்பத்தில் சினிமாவில் நிலைத்து நிற்க பல கஷ்டங்களை அனுபவித்த அஜித், அதன் பிறகு நடித்த படங்களின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். இவர் நடித்த காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, வில்லன், அட்டகாசம், பூவெல்லாம் உன் வாசம், மங்காத்தா, பில்லா போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் ஃபேவரைட் திரைப்படங்களாகும்.

ஆரம்ப காலகட்டத்தில் இவரை யாரும் கண்டு கொள்ளாத நிலையில் தன்னுடைய நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஒரு நடிகர் என்றால் அது அஜித் குமார் தான்.

நடிகர் அஜித் செய்த உதவி

நடிகர் அஜித் கல்லூரி வாசல் என்ற திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்தார். அந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் பிரசாந்த் நடித்தார். பிரசாந்த் அப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், வெற்றி படங்களை கொடுத்தவராகவும் இருந்தார். இதனால் அந்த படப்பிடிப்பின் போது கல்லூரி பெண்கள் அனைவரும் நடிகர் பிரஷாந்திடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள்.

ஆனால் அந்தப் படத்தில் நடித்த அஜித் தனியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தார். அவரை யாருக்கும் அப்பொழுது தெரியவில்லை. ஆனால் அங்கு வந்த ஒரு நபர் மட்டும் உங்களிடம் யாரும் ஆட்டோகிராப் வாங்கவில்லையா என கேட்டுள்ளார். அதற்கு அஜித் என்ன எல்லாம் யாருக்கும் தெரியாது சார். அவர் சினிமாவில் பெரிய ஆள். பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். என்னை எல்லாம் யார் கண்டு கொள்வார்கள் என கூறியுள்ளார். அதற்கு அந்த நபரோ நீங்கள் ஒன்னும் கவலைப்படாதீங்க சார், நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் நீங்கள் நிச்சயம் இடம் பெறுவீர்கள் நம்புங்கள் எனக் கூறிவிட்டு சென்றுவிட்டார்.

அதன் பிறகு ஆசை திரைப்படம் வெளிவருகிறது. அஜித்தை அனைவரும் கொண்டாடினார்கள். மேலும் பல ரசிகர், ரசிகைகள் அவருக்கு உருவானார்கள். இந்நிலையில் அஜித் கூறும் போது என்னை அந்த நபர் கண்டிப்பாக ஒரு நல்ல நடிகனாக வருவேன் என கூறினார். அவர் யார் என்று தெரியவில்லை என சொன்னார்.

அதன் பிறகு அந்த நபரை அஜித் கண்டுபிடித்து, தன்னுடன் மேனேஜராக வைத்திருக்கிறார் என சமூக வலைதளங்களில் தற்போது அஜித்தை பற்றி வைரலாகி வருகிறது.

ஜடை போட்டு குட்டி பொண்ணு மாதிரி மாறிய கீர்த்தி சுரேஷ்.. ட்ரெண்டாகும் பிக்ஸ்!..

பிரபல முன்னணி நடிகையாக தற்போது அனைவராலும் அறியப்படுபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சினிமா பின்புலத்தைக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தாலும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய திறமையான நடிப்பின் மூலம் தற்பொழுது வரை ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்திருக்கிறார்.

தற்பொழுது தென்னிந்தியா மட்டும் அல்லாமல் பாலிவுட்டிலும் கால் பதித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் சற்று கவர்ச்சி காட்ட தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் அவர் பல புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் தற்பொழுது வெளிவந்திருக்குமட் புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ்

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட கீர்த்தி சுரேஷ் மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார். மேலும் இவருடைய தந்தை பிரபல தயாரிப்பாளரும், இவருடைய தாய் பிரபல நடிகையும் ஆவார். தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.

முதல் படத்தில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை என்றாலும் அடுத்தடுத்து படங்கள் நடித்தார் மேலும் சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் பெருமளவில் அவருக்கு வரவேற்பு பெற்று கொடுத்தது. அந்த படத்தில் இருந்து ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட நடிகை என்ற பெயர் கிடைத்ததோடு மட்டுமல்லாமல், தற்போது முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன் பைரவா, சர்க்கார் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகருடன் நடித்திருக்கிறார். மகாநதி படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இதனிடையில் தமிழில் வெளிவந்த தெறி படத்தின் ஹிந்தி ரீ-மேக்கில் சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட்டில் நடித்து வருகிறார். இதன் மூலம் பாலிவுட்டிலும் தன்னுடைய காலடியை பதித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

சமூக வலைத்தளங்களில் கீர்த்தி சுரேஷ்

பல வித்தியாசமான உடைகளுடன் புகைப்படங்களை வெளியிடும் கீர்த்தி சுரேஷ் சமீப காலங்களாக மாடலாக பிளவுஸ் போட்டு புடவை அணிந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும், ஸ்டைலான உடை அணிந்து பலவிதமான புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

அந்த வகையில் இவர் தற்பொழுது பதிவிட்டிருக்கும் புகைப்படத்தில் ஜடை போட்டு குட்டி பெண் போல புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதைப் பார்த்து அவரின் ரசிகர்கள் இதில் கீர்த்தி சுரேஷை பார்ப்பதற்கு சின்ன குழந்தை போல இருப்பதாகவும், அழகாகவும் உள்ளார் என கமெண்ட் செய்தும் அவரது புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்கள்.

அம்மாவுக்கு வந்த விபரீத ஆசை.. ஆடிப்போன முதலமைச்சர்.. பேட்டியில் கூறிய உதயநிதி!.

தமிழ் சினிமாவில் பல முக்கிய நடிகர்களும் அரசியலில் களம் கண்டு வரும் வேளையில், அரசியல் மற்றும் சினிமாவை பின்புலமாகக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர் நடிகர் மற்றும் தற்போது அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின்.

இவர் அரசியலில் பணிகளை செய்து வருவதால் தற்பொழுது சினிமாவில் நடிப்பதை குறைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் குடும்பத்துடன் ஒரு படத்தை பார்த்துவிட்டு நடந்த சம்பவத்தை பற்றி தெரிவித்திருப்பது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் உதயநிதி

இவர் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகராவார். தற்பொழுது அரசியலிலும் தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருக்கிறார்.

விஜய், திரிஷா நடித்த குருவி என்னும் திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் ஆகும்.

அதன் பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நடிகராக வரவேற்பு பெற்றார். அதன் பிறகு இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன்,நெஞ்சுக்கு நீதி, மாமன்னன் போன்ற படங்களில் நடித்து நடிகராக மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றிருக்கும் உதயநிதி, சமீபத்தில் தன் குடும்பத்துடன் பார்த்த திரைப்படத்தைப் பற்றி பகிர்ந்து இருக்கிறார்.

லவ் டுடே திரைப்படம்

கடந்த 2022 ஆம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த திரைப்படம் லவ் டுடே. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. உதயநிதி பேசும் போது, என் அப்பா இப்பொழுது என்ன படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது என கேட்டார். நான் லவ் டுடே திரைப்படம் வெளியாகி நல்ல ஹிட் கொடுத்திருக்கிறது என கூறினேன். அவரை பார்க்கவும் சொன்னேன்.

ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. இந்த திரைப்படம் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா என நினைத்தேன். காரணம் இந்த திரைப்படத்தில் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைக்கலங்களை பற்றி கூறியிருப்பார்கள். இது எல்லாம் இவர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியுமா என்று தெரியாமல், நான் படம் பார்க்க சொன்னேன். நாங்கள் அனைவரும் படத்தை பார்த்தோம். படம் பார்த்த பிறகு படம் நன்றாக இருக்கிறது என எங்க அப்பா கூறினார். உடனே என்னுடைய அம்மா அப்படியானால் நாம் நம்முடைய மொபைலை மாற்றிக் கொள்ளலாமா என கேட்டார்.

நானும் எங்க அப்பாவும் அய்யய்யோ வேண்டாம் என கூறினோம். எல்லாரும் பேசிக் கொண்டிருக்கும் போது நான், என் மனைவி, எங்க அப்பா, என் தங்கை அனைவரும் இருந்தோம். என்னுடைய அம்மா படம் நல்லா இருக்கு இல்லையா எல்லாரும் ஃபோன்களை மாற்றிக் கொள்ளலாம் என கூறி காலாய்த்தார் என அவர் பேசிய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

ஹிந்திக்கு போயும் இவ்வளவுதான் சம்பளமா? கீர்த்தி சுரேஷை ஏமாற்றும் பாலிவுட்!..

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ், தற்பொழுது பாலிவுட்டிலும் தன்னுடைய காலடியை பதித்துள்ளார். தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக விளங்கிய கீர்த்தி சுரேஷ் ரஜினி முருகன் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல இடம் பிடித்தார்.

இந்நிலையில் பாலிவுட் பக்கம் சென்று இருக்கும் கீர்த்தி சுரேஷ் ஹிந்தி படங்களில் நடிப்பதற்கு வாங்கும் சம்பளத்தை பற்றி தற்போது சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். தற்பொழுது பாலிவுட்டிலும் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் 4 சைமா விருதுகள் மற்றும் 2 ஃபிலிம் ஃபேர் விருதுகள் பெற்றிருக்கிறார்.

மேலும் இவர் தயாரிப்பாளர் ஜி சுரேஷ் குமார் மற்றும் மேனகா ஜி ஆகியோரின் மகள் ஆவார். குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய வாழ்க்கை தொடங்கிய கீர்த்தி சுரேஷ் மலையாள திரைப்படமான கீதாஞ்சலியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்காக அவர் சிறந்த பெண் அறிமுகத்திற்கான சைமா விருதை பெற்றார்.

இதன்பிறகு இது என்ன மாயம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் அதன் பிறகு பல படங்களில் நடித்த அவருக்கு ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு பெற்ற படம் என்றால் அது சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன்.

இந்த படத்திற்குப் பிறகு இவர் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாகவே மாறிவிட்டார்.

ஹிந்தியில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்

தற்போது இவர் ஹிந்தியில் பேபி ஜான் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழில் வெளியான தெறி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும். இந்த படத்தை அட்லீ தயாரிக்கிறார். மேலும் கலீஸ் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் வருண் தவான், வாமிகா கேபி ஆகியோர் நடித்து வருகிறார்கள். தெறி படத்தில் சமந்தா நடித்திருந்த கதாபாத்திரத்தில் தற்போது ஹிந்தியில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷ் 4 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

துணை நடிகைகளை வைத்து வி**ச்சாரம்.. கோடம்பாக்கத்தை தோலூரிக்கும் பிரபலம்!..

சமீப காலங்களாக சினிமா வட்டாரங்களில் பல சர்ச்சையான சம்பவங்கள் நடந்து வருகிறது. சினிமாவில் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் போன்ற பிரச்சனைகள் சந்திக்கும் வேலையில் தற்போது சினிமாவில் நடிக்கும் துணை நடிகைகள் துபாய் வரை சென்று பல விபச்சார சிக்கல்களில் மாட்டியிருக்கிறார்கள்.

அதைப் பற்றிய தகவல் வெளிவந்து சமீபத்தில் கோலிவுட் வட்டாரங்களை அதிர செய்த நிலையில் இந்த விவகாரத்தில் பிரபல முன்னணி நடிகைக்கும் சம்பந்தம் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் கோலிவுட்டில் இருந்து பல துணை நடிகைகள் துபாயில் விபச்சாரத்தில் மாட்டியதைப் பற்றி பிரபல சினிமா பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறி இருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிக்கலில் மாட்டிய துணை நடிகைகள்

சினிமாவில் முன்னணி நடிகையாக பல நடிகைகள் நடத்து வரும் வேளையில் அதே சினிமாவில் துணை நடிகைகளாக சில நடிகைகள் நடித்து வருகிறார்கள். அவர்கள் வாய்ப்புகாக காத்துக் கொண்டிருக்கும், அவர்களை டார்கெட் செய்யும் விதமாக பல விளம்பரங்கள் whatsapp மூலம் அனுப்பி அதில் இருந்து குறிப்பிட்ட சில நடிகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை ஏமாற்றி துபாய் அழைத்து செல்கிறார்கள்.

துபாயில் பிரபல நடன நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கூறி அழைத்துச் செல்லும் அந்த நடிகைகள் அங்கு சென்று சட்ட விரோதமாக அவர்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் தள்ளி விடுகிறார்கள். அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் மற்ற ஆவணங்களை வாங்கிக் கொள்ளும் அந்த கும்பல் அவர்களை குறிப்பிட்ட நாட்களுக்கு அந்த தொழிலில் ஈடுபடுத்தி விடுகிறார்கள்.

அவர்கள் சம்மதிக்காத பட்சத்தில் அவர்கள் வாங்கிய தொகையை விட இரண்டு மூன்று மடங்காக தொகை வாங்கி இருப்பதாக கூறி அதற்கான பொய்யான கையெழுத்தை பெறப்பட்டு அவர்களை மிரட்டி, இது போன்ற செயல்களில் அவர்களை ஈடுபடுத்தி வருதாக சமீபத்தில் ஒரு பெண் புகார் அளித்தார். கோலிவுட்டில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக புகார் அளித்திருந்தார்.

இது தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் இது குறித்து தமிழா தமிழா பாண்டியன் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

தமிழா தமிழா பாண்டியனின் கருத்து

வாட்ஸ் அப்பில் துபாயில் பிரபல நடன நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதற்கு பெண்கள் தேவை என விளம்பரங்கள் வந்து அதை நம்பி பல பெண்கள் துபாயில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதைக் குறித்து உங்களின் கருத்து என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தமிழா தமிழா பாண்டியன் இந்த சம்பவம் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

விபச்சார தடுப்பு பிரிவு ஒத்துழைப்போடு தான் இது நடந்து கொண்டிருக்கிறது என அவர் தெரிவித்தார். இவர்களின் இலக்கு கோடம்பாக்கத்தில் துணை நடிகைகள் தான்.

இந்த துணை நடிகைகள் மூலம் தெலுங்கு, மலையாளம் படத்தில் நடிக்கச் செல்லும் போது இவர்கள் மூலம் அங்கு உள்ளவர்களையும் இந்த வலையில் சிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் இதில் தெலுங்கு மலையாளத்தில் உள்ள நடிகைகள் தப்பித்து விடுகிறார்கள். ஆனால் கோடம்பாக்கத்தில் உள்ள துணை நடிகைகள் இதில் சிக்கிக் கொள்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.

மேலும் நடன கலைஞர்கள் என்ற பெயரில் இவர்கள் விபச்சார தரகர்களாக இங்கு பல பெண்களை துபாய்க்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு சென்றதும் அவர்களின் ஆவணங்களை வாங்கி வைத்துக்கொண்டு இதுபோன்ற தொழிலில் ஈடுப்படுத்துகிறார்கள். மேலும் ஒரு சில நடிகைகளுக்கு இது பழக்கமாகி இந்த தொழிலை செய்து வருகிறார்கள்.ஒரு சிலர் அதிலிருந்து தப்பித்து இது போன்ற புகாரகளை அளிக்கிறார்கள் என தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.

படுக்கையில் வேறு ஆணுடன் இருந்த மனைவி!.. படம்பிடித்து வெளியிட்ட நடிகர்!.

தமிழ் சினிமாவில் தற்பொழுது அறிமுகமாகும் நடிகைகள் எந்த காட்சிகளாக இருந்தாலும் தைரியமாக நடிக்க தொடங்கி விடுகிறார்கள்.

மேலும் அவர்கள் கவர்ச்சி, ஆபாச என எந்த ஒரு காட்சிகளிலும் நடிப்பதற்கு மறுப்பும் தெரிவிக்காத வகையில் பல டிவி நிகழ்ச்சிகள், சமூக வலைத்தளங்கள் என கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஒரு சில நடிகைகள் ஆரம்பத்தில் சற்று கறாராக இருந்தாலும் அவர்களுக்கு பட வாய்ப்புகள் குவிய குவிய கவர்ச்சியான காட்சிகளின் நடிக்க தொடங்கி விடுவார்கள்.

அந்த வகையில் தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர் படுக்கையறை காட்சிகளில் நடித்து தற்பொழுது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறார். அந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பாலிவுட்ல கலக்கும் முன்னணி நடிகை

சில படங்கள் நல்ல வெற்றி கொடுத்த பிறகு அடுத்ததாக நடிக்கும் படங்களில் எப்படிப்பட்ட காட்சிகளில் வேண்டுமானாலும் நடித்து விடலாம் என்ற எண்ணத்தில் தற்பொழுது உள்ள நடிகைகள் தைரியமாக பல காட்சிகளில் நடித்து வருகிறார்கள்.

மேலும் பணம் சம்பாதிக்கும் ஆசையில் படுக்கையறை காட்சிகள் என்றாலும் பரவாயில்லை என்று நினைத்து அவர்கள் தைரியமாக நடிக்கிறார்கள். மேலும் ஒரு சில நடிகைகள் திருமணம் ஆனாலும் அவர்களின் கணவரை இதற்கு சம்மதிக்க வைத்து அவர்களின் கணவருக்கும் பணத்தாசையை காட்டி இது போன்ற காட்சிகளில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தான் தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்த அந்த நடிகை பாலிவுட் பக்கம் சென்று தற்பொழுது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

பாலிவுட் மட்டுமல்லாமல் அப்படியே ஹாலிவுட் வரை சென்று தற்போது ஹாலிவுட் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

தன்னைவிட குறைந்த நடிகரை திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை

இந்த நடிகை தன்னைவிட குறைந்த வயது உடைய நடிகரை திருமணம் செய்து கொண்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றார்.

தற்பொழுது பல படங்களில் நடித்து வரும் இந்த நடிகை பல படுக்கையறை காட்சிகளிலும் தைரியமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் இதனைக் குறித்து எல்லாம் அவரின் கணவர் எந்த ஒரு கேள்வியும் இவரை கேட்க மாட்டார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த பிரபல நடிகை கூறி இருக்கிறார். மேலும் அவர் கூறும் பொழுது நடிப்பு வேறு என்னுடைய வாழ்க்கை வேறு. எனவே சினிமாவில் நடிக்கும் காட்சிகளை என்னுடைய கணவர் என்னுடைய வேலையாக மட்டும் தான் பார்க்கிறார் என அந்த நடிகை தெரிவித்திருக்கிறார்.

தற்பொழுது அந்த நடிகை மற்றொரு ஆணுடன் படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் நடித்திருக்கிறார். அதுவும் உள்ளாடையோடு நடிக்கும் அந்த காட்சியை அவரின் கணவர் தான் படமாக்கி உள்ளார் என்பது தற்பொழுது தெரிய வந்திருக்கிறது.

இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் இந்த பிரபல நடிகையை சமூக வலைத்தளங்களில் கமெண்ட்களால் வசைப்பாடி வருகிறார்கள்.

சர்தார் நடிகையின் மாடர்ன் லுக்!..

Rajisha Vijayan: தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பிற மொழிகளில் நடிக்கும் நடிகைகளையும் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருவது வழக்கமான ஒன்றுதான். மற்ற மொழிகளில் நடிக்கும் நடிகைகள் அவர்கள் நடித்த படத்தின் மூலம் பல மொழி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விடுவார்கள்.

அந்த வகையில் குறிப்பிட்ட நடிகைகளுக்கு மற்ற மொழியில் உள்ள ரசிகர்களின் வரவேற்பை பொறுத்து அந்த மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்து வரும். அந்த வகையில் தற்போது தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருப்பவர் ரஜிஷா விஜயன்.

இவர் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது இவர் பதிவிட்டுள்ள புகைப்படமானது அவரின் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகை ரஜிஷா விஜயன்

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமான ரஜிஷா விஜயன் கடந்த 2016 ஆம் ஆண்டு அனுராகா கரிக்கின் வெள்ளம் என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும் இந்த திரைப்படத்திற்காக இவர் சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்படத்தை விருதை வென்றார்.

அதன் பிறகு அடுத்தடுத்து ஒரு சினிமாக்காரன், பைனல், ஸ்டாண்ட் அப், லவ் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பேராம்பிரை என்ற ஊரில் பிறந்தார்.

மலையாள தொலைக்காட்களில் பல பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் மலையாள திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். இவ்வாறு பிரபலமாக இருந்த ஜிஷா விஜயன் மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் திரைப்படத்தில் தனுசுடன் சேர்ந்து நடித்திருந்தார். இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

சமூக வலைத்தளங்களில் ரஜிஷா விஜயன்

ரஜிஷா விஜயன் தற்போது கைவசம் பல படங்கள் வைத்துள்ள நிலையில், அவர் இணையதளங்களில் அவரின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

தற்பொழுது அவர் பதிவிட்டிருக்கும் புகைப்படமானது ரசிகர்களின் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது. மாடன் உடையில் பார்ப்பதற்கு கவர்ச்சியாக தோற்றமளிக்கும் ரஜிஷா விஜயன் அவரின் ரசிகர்களால் தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

இந்த உடையில் அவர் பார்ப்பதற்கு இளவரசி போன்றும், மிக ஸ்டைலாகவும் இருப்பதாக அவரின் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு, புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்கள்.

இயக்குனருடன் தொடர்ந்து அட்ஜெஸ்ட்மெண்ட்!.. தோல்வி படம் கொடுத்தாலும் வாய்ப்பு.. லீலை நடிகையின் வேலைகள்!..

சினிமா என்றாலே எப்பொழுதும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சினிமாவில் நடிக்கும் பல நடிகைகளை பற்றிய வதந்திகள் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டு தான் இருக்கும்.

இந்நிலையில் சினிமாவில் ஒரு நடிகைகள் சாதிப்பது என்பது கடினமான ஒன்று. காரணம் நடிகர்களுக்கு இருப்பது போலவே நடிகைகளுக்கு எப்பொழுதும் ரசிகர் கூட்டங்கள் இருப்பதில்லை. மேலும் நடிகர்களுக்கு படத்தில் கொடுக்கும் முக்கியத்துவம் நடிகைகளுக்கு கொடுப்பதில்லை.

சில நடிகர்கள் தோல்வி படங்கள் கொடுத்தாலும் அடுத்தடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் நடிகைகள் ஒன்று அல்லது இரண்டு படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தால், அவர்கள் சினிமாவில் ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தி விடுவார்கள்.

அந்த வகையில் தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஒரு லீலை நடிகை தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்தாலும், தற்போது வரை முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரைப் பற்றிய சர்ச்சை தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரசிகர்களின் கனவு கன்னி

தொடர்ந்து சமீப காலங்களாக இவருடைய புயல் சமூக வலைதளங்களில் அடித்துக் கொண்டிருக்கிறது. ரசிகர்களின் கனவுகளில் தற்பொழுது இந்த லீலை நடிகை தான் வந்து கொண்டிருக்கிறார். அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர் பட்டாளங்கள் உள்ளன.

லீலை நடிகை தென்னிந்திய சினிமாவில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நடிகையாக கருதப்படுகிறார். மேலும் சினிமா பிரபலங்களே இந்த லீலை நடிகைக்கு ரசிகர் ஆவார்கள். அந்த அளவிற்கு தன்னுடைய அழகாலும், நடிப்பாலும், நடனத்தாலும் பிரபலமாகி உள்ளார் இந்த லீலை நடிகை.

சமீப காலங்களாக தமிழ் சினிமாவில் இவரின் பேச்சுகள் பேசப்பட்டு வருகிறது. லீலை நடிகை தற்பொழுது எந்த படம் நடித்தாலும் அவரை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் தவமாக தவம் கிடக்கிறார்கள். அந்த அளவிற்கு இணையத்திலும் மற்ற சமூக வலைதளங்களிலும் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

தற்போது பல முன்னணி நடிகருடன் நடித்து வரும் லீலை நடிகை பல லீலை வேலைகளை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

லீலை நடிகை செய்த வேலைகள்

தொடர்ந்து பத்து படங்களுக்கு மேல் நடித்து வந்த லீலை நடிகை சொல்லிக் கொள்ளும் படியாக ஒரு படமும் அவருக்கு வெற்றி பெறவில்லை. பத்து படங்களுக்கு மேலும் நடித்தாலும் இந்த லீலை நடிகையின் நடிப்பு வெளிப்பட்டது அந்த ஒரு படத்தில் மட்டும் தான்.

மேலும் பல தோல்வி படங்களை கொடுத்து வந்த லீலை நடிகை. தற்போது பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்தால் அவர்களை ராசியில்லாத நடிகைகள் என்று முத்திரை குத்தி விடுவார்கள். தென்னிந்திய சினிமாவில் இந்த வழக்கம் இருந்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இவ்வாறு சினிமாவில் நடந்து கொண்டிருக்கும் பொழுது, லீலை நடிகை நடித்த 10 படங்களும் தொடர் தோல்வியை கொடுத்திருந்த நிலையிலும், அவர் மட்டும் எவ்வாறு பல முன்னணி நடிகருடன் நடித்துக் கொண்டிருக்கிறார் என சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. தற்போது அவர் பல இயக்குனருடன் தொடர்ந்து லீலைகளில் ஈடுபட்டு வந்ததும், அதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறன.

இதனால் அவர் தோல்வி படங்களை கொடுத்தாலும் இயக்குனர்கள் அதை பற்றி கவலை கொள்ளாமல், லீலை நடிகை கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் இயக்குனர்களும் அவருக்கு வாய்ப்பு கொடுப்பதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறதாம்.

12 ஹீரோக்களால் தமிழில் உதாசீனப்படுத்தப்பட்ட படம்..ரீமேக்கில் 100 கோடி ஹிட் எந்த படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் வெளிவந்து ரசிகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். தற்போது வரை அந்த திரைப்படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.

அந்தப் படத்தின் கதை, அந்த படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் என அனைத்துமே அந்த படத்திற்கு ஒரு நல்ல வெற்றியை கொடுத்திருக்கும். மேலும் அந்தப் படத்தை பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் தெரிய வரும் பொழுது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் தமிழில் வெளிவந்த ஒரு திரைப்படம் அதன் பிறகு ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு பல கோடி வசூல் செய்தது. தற்போது அந்த திரைப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த கஜினி திரைப்படம்.

கஜினி திரைப்படத்தை தற்போது வரை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். ஏனென்றால் நடிகர் சூர்யாவிற்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம். மேலும் இந்த திரைப்படம் வெளிவந்து பிளாக் பாஸ்டர் வெற்றி பெற்றது.

மேலும் இந்த திரைப்படத்திற்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்கள் அஜித், மாதவன், மகேஷ் பாபு உள்ளிட்ட 12 நடிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் இந்த படத்தை நிராகரித்ததால் 13-வதாக சூர்யா இந்த படத்தில் நடித்தார்.

தமிழில் இந்த படம் வெளியாகி 50 கோடிக்கு மேல் வசூல் செய்தது. மேலும் இந்த படத்தின் பட்ஜெட் 7 கோடி.

ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட கஜினி

கடந்த 2008 ஆம் ஆண்டு கஜினி ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தில் நடிகர் அமீர்கான் நடித்திருப்பார். ஆனால் அமீர்கானுக்கு முன்பாக இந்த படத்தில் நடிகர் சல்மான்கான் நடிக்க இருந்தது. ஆனால் இந்த படத்தின் ஸ்கிரிப்டை அவர் விரும்பாததால் நடிகர் அமீர்கான் நடித்தார். மேலும் இந்தத் திரைப்படம் ஹிந்தியில் 100 கோடிக்கு அதிகமாக வசூல் செய்தது.

ஹிந்தியில் 100 கோடி வசூலை ஈட்டிய முதல் ஹிந்தி ரீமேக் திரைப்படம் என்ற சாதனையை கஜினி படம் பெற்றது.