Tag Archives: அஜித்

அஜித்தின் அடுத்த படத்தில் இறங்கும் இளம் நடிகை.. வாக்கு தவறினாரா அஜித்?

தமிழ் சினிமாவிலேயே முடி நரைத்த பிறகும் கூட அதை அப்படியே வெளிகாட்டிய ஒரு நடிகராக அஜித் தான் இருந்து வருகிறார். பெரும்பான்மையாக கதாநாயகனாக நடிக்கும் நடிகர்கள் தங்களுடைய உண்மை தோற்றத்தை வெளிக்கொண்டு காட்ட மாட்டார்கள்.

ஆனால் ரஜினிகாந்த் மாதிரியான ஒரு சிலர் திரைக்கு வெளியே விழாக்களுக்கு வரும் பொழுது தங்களுடைய உண்மை தோற்றத்தில் வருவது உண்டு. ஆனாலும் விஜய், மாதவன் போன்ற பல நடிகர்கள் விழாக்களுக்கு வரும் பொழுது கூட முகத்தில் அலங்காரம் செய்து கொண்டு தான் வருவார்கள்.

ஆனால் திரைப்படங்களிலேயே அப்படி இல்லாமல் தனக்கு வயதானதை அப்படியே காட்டி நடிக்கும் நடிகராக அஜித் இருந்து வருகிறார். நரைத்த முடியுடன் நடிக்கும் காரணத்தினால் அவர் வயதுக்கு ஏற்ற நடிகைகளுடன் சேர்ந்ததுதான் நடிப்பேன் என்று அஜித் கூறியிருந்தார்.

ஏனெனில் வீரம் திரைப்படத்தில் அவர் தமன்னாவுடன் சேர்ந்து நடித்த பொழுது அது அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானது. அதனால் தான் துணிவு திரைப்படத்தில் கூட மஞ்சுவாரியரை கதாநாயகியாக வைத்து அந்த திரைப்படத்தில் அஜித் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் அடுத்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அப்படி ஸ்ரீ லீலா நடிக்கும் பட்சத்தில் அது பொருத்தமான விஷயமாக இருக்காதே என்பது பலரது எண்ணமாக இருக்கிறது. ஆனால் ஸ்ரீலீலாவுக்கு தகுந்தார் போல அஜித்துக்கு மேக்கப் செய்யப்படலாம் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.

 

 

அஜித்துக்கு நான் சொன்ன கதை.. லோகேஷ் போட்ட அடுத்த ப்ளான்.!

தமிழில் மிக முக்கியமான நடிகர்கள் பலரையும் வைத்து படத்தை இயக்கிவிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஐந்து படங்களை இயக்குவதற்கு உள்ளாகவே இத்தனை பெரிய வரவேற்பு வேறு எந்த இயக்குனருக்கும் கிடைத்ததில்லை என்று கூறலாம்.

ஏனெனில் ஆக்ஷன் திரைப்படங்களில் வழக்கமான பாணியில் இல்லாமல் வித்தியாசமான பாணியை கடைபிடித்தவர் லோகேஷ் கனகராஜ். அதனால் இப்போது வரை அவர் திரைப்படத்திற்கு இருக்கும் வரவேற்பு என்பது தனியாக இருக்கிறது.

இதனால் அவர் தமிழில் மிக முக்கிய நடிகர்களான விஜய் ரஜினிகாந்த் கமல்ஹாசன் என்று பெரிய நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கி விட்டார் ஆனால் அஜித்தை வைத்து மட்டும் அவர் இன்னும் ஒரு படம் கூட இயக்கவில்லை

இதுக்குறித்து லோகேஷ் ஒரு பேட்டியில் பேசும்போது அஜித்தை வைத்து படம் இயக்கக் கூடாது என்றெல்லாம் எனக்கு எதுவும் இல்லை. அவருக்கும் ஒரு கதை நான் எழுதினேன். பிறகு அஜித்திடம் கதை குறித்து பேசியுள்ளேன்.

ஆனால் நாங்கள் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்று அப்போது எதுவும் முடிவு எடுக்கவில்லை. பிறகு நானும் நிறைய படங்களில் கமிட் ஆகி விட்டதால் பிஸியாகிவிட்டேன். அவரும் கார் ரேஸ் மாதிரியான விஷயங்களுக்கு சென்றதால் பிஸியாகிவிட்டார்.

ஒருவேளை இதெல்லாம் முடிந்து மீண்டும் நாங்கள் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்குவேன் என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

 

 

 

விஜய்யை நேரடியாக தாக்கி அஜித் விட்ட அறிக்கை..!

நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவருமே தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே போட்டி நடிகர்களாக இருந்து வருகின்றனர். பெரும்பாலும் விஜய்யும் அஜித்தும் அவர்கள் நடிக்கும் படங்களை ஒரே நாளில் வெளியிட்டு போட்டி போட்டுக் கொள்வது வழக்கமான விஷயமாக இருந்து வந்தது.

இவர்கள் இப்போது தங்கள் கனவுகளை நோக்கி ஓட துவங்கியிருக்கின்றனர் என்று தான் கூற வேண்டும். விஜயை பொறுத்த வரை அவர் அரசியலை நோக்கி பயணப்பட தொடங்கிவிட்டார். அதேபோல அஜித்தை பொருத்தவரை அவர் கார் ரேஸ் மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இது இல்லாமல் அவ்வப்போது வந்து நடித்துக் கொடுப்பேன் என்று அஜித் கூறியுள்ளார். விஜய்யை பொருத்தவரை இனி திரும்ப அவர் நடித்து கொடுப்பதாக இல்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் சினிமாவிற்கு வந்து 33 வருடம் ஆனதை கொண்டாடும் வகையில் அஜித் சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

அது குறித்த விஷயங்கள்தான் இப்போது சர்ச்சை ஆகி வருகிறது. அந்த பதிவில் அஜித் கூறும்பொழுது என்னுடைய ரசிகர்களை எப்பொழுதுமே சுயநலத்திற்காக பயன்படுத்த மாட்டேன் என்று கூறியிருந்தார்.

இது நடிகர் விஜய்யை தாக்கி பேசிய ஒரு பதிவாக பார்க்கப்படுகிறது ஏனெனில் விஜய் ரசிகர் மன்றம் மூலமாகதான் தனது அரசியல் கட்சியை வளர்த்து எடுத்தார். ரசிகர்கள் மூலமாகதான் இப்பொழுது அந்த கட்சியை கொண்டு சென்று கொண்டும் இருக்கிறார்.

அப்படி இருக்கும் பொழுது அஜித் தன்னுடைய ரசிகர்களை சுயநலத்திற்கு பயன்படுத்த மாட்டேன் என்று கூறியது நேரடியாக விஜய்யை தாக்கிய பதிவாக பார்க்கப்படுகிறது எனவே இது குறித்து இப்பொழுது சர்ச்சை கிளம்ப துவங்கி இருக்கிறது.

அஜித் படம் குறித்து வந்த அடுத்த அப்டேட்.. ரேஸ்க்கு போறதுக்கு முன்னாடி எடுத்த ப்ளான்..

நடிகர் அஜித் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அதே சமயம் தொடர்ந்து கார் பந்தயங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அஜித் ஒரு விதிமுறையை பின்பற்றி வருகிறார்.

கார் ரேஸில் கலந்து கொள்ளும் சமயங்களில் அவர் திரைப்படங்களில் நடிக்க மாட்டார். அதே போல திரைப்படங்களில் நடிக்கும் சமயங்களில் கார் ரேஸ் போன்ற பந்தயங்களில் கலந்து கொள்ள மாட்டார். ஏனெனில் கார் ரேஸில் கலந்து கொள்ளும் பொழுது அவருக்கு விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

அந்த மாதிரி ஏற்பட்டால் படப்பிடிப்புகளில் அது பிரச்சனையை ஏற்படுத்தும் படப்பிடிப்பு முடிவதிலும் தாமதமாகும் என தயாரிப்பாளர் நலனை கருத்தில் கொண்டு அஜித் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இன்னொரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித்.

ஏனெனில் ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து இயக்கிய குட் பேட் அக்லி திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு வாய்ப்பைக் கொடுத்து இருக்கிறார் அஜித்.

இந்த படத்தை எடுப்பதற்கு ஆதிக் ரவிச்சந்திரனுக்கு மூன்று மாதம் அவகாசம் கொடுத்து இருக்கிறார் அஜித். அந்த வகையில் அக்டோபர் மாதம் துவங்கும் படப்பிடிப்பை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அவருக்கு கூறப்பட்டுள்ளது.

எனவே முதலில் அஜித்துக்கான காட்சிகளை மட்டும் மூன்று மாதத்திற்குள் எடுத்துவிட்டு மீத காட்சிகளை தாமதமாக எடுத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருக்கிறாராம் ஆதிக் ரவிச்சந்திரன்.

அஜித்தோடு கூட்டு சேரும் ரஜினி பட இயக்குனர்.. இதுதான் கதையாம்..!

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் மிக முக்கியமானவராக அஜித் இருந்து வருகிறார்.

தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் என்று லிஸ்ட் எடுத்தால் அதில் முதல் ஐந்து நடிகர்களில் முக்கியமானவராக அஜித் இருப்பார் என்று கூறலாம். தொடர்ந்து அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கும் சினிமாவில் வரவேற்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆனாலும் கார் ரேஸ் மாதிரியான மற்ற விஷயங்கள் மீது அஜித் கவனம் செலுத்தி வருவதால் வருடத்திற்கு ஒரு திரைப்படம் தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

கார் ரேஸில் கலந்து கொள்ளும் காலகட்டங்களில் அஜித் திரைப்படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்து இருக்கிறார். இந்த நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் அஜித்.

அதற்குப் பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே ரஜினியை வைத்து பேட்ட என்கிற ஹிட் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார். இதனால் அவருக்கு அஜித்துடன் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் ஜிகர்தண்டா மாதிரியான ஒரு ரவுடி கதாபாத்திரத்தில் அஜித் களமிறங்க இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

300 கோடி பட்ஜெட்டில் அஜித் படம்..! பட்ஜெட் அதிகமாக இதுதான் காரணம்..!

நடிகர் அஜித் தொடர்ந்து கார் ரேஸ் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார். நடிப்பதை விடவும் அவருக்கு அதன் மீதுதான் அதிக ஆர்வமாக இருந்து வருகிறது.

இதனால் அஜித் வருடத்திற்கு ஒரு திரைப்படம்தான் நடிப்பார் என்று கூறப்பட்டு வருகிறது இந்த நிலையில் அஜித்தின் நடிப்பில்  இந்த வருடம் இரண்டு திரைப்படங்கள் வெளியானது. ஜனவரி ஆரம்பத்தில் அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது.

விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களுக்கு ஏற்புடைய திரைப்படமாக அமையவில்லை. அதனால் இந்த திரைப்படம் பெரிய தோல்வியை கண்டது அதனை தொடர்ந்து அஜித் நடித்த திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த குட் பேட் அக்லி.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. நல்ல வசூலையும் பெற்று கொடுத்தது. இதனை தொடர்ந்து அடுத்து அஜித் நடிக்கும் திரைப்படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய் ரஜினிகாந்துக்கு இருக்கும் அளவிலான மார்க்கெட் என்பது இன்னமும் அஜித்துக்கு இல்லை என்று தான் கூற வேண்டும். எனவே விஜய் ரஜினி மாதிரி மிக அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக அஜித் இல்லை.

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவர்கள் இருவருக்கு பிறகுதான் அஜித் இருக்கிறார். இந்த நிலையில் அடுத்து அஜித் நடிக்கும் திரைப்படத்திற்கு அவர் அதிக சம்பளம் கேட்டிருக்கிறார்.

இதனாலேயே இந்த திரைப்படத்தின் பட்ஜெட் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தையுமே ஆதிக்க ரவிச்சந்திரன் தான் இயக்க இருக்கிறார் எனவே இதுவும் கூட பெரிய வெற்றியை கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

 

அமர்களம் 2வில் எண்ட்ரி ஆகும் எஸ்.ஜே சூர்யா.. இது புது காம்போவா இருக்கே..!

சமீப காலங்களாகவே நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் கதைகளை தேர்ந்தெடுத்துதான் நடித்து வருகிறார். அப்படி அவர் நடிக்கும் படங்களில் எல்லா படமுமே வரவேற்பை பெற்று விடுவதில்லை. ஆனால் சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

அஜித்தை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் அவர் அதிக வரவேற்பை பெற மிக உதவியாக இருந்தவர் இயக்குனர் சரண். சரண் இயக்கத்தில் அஜித் நடித்த காதல் மன்னன், அமர்களம் ஆகிய இரு திரைப்படங்களுமே அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை பெற்று தந்தது.

அதனை தொடர்ந்து சரணுக்கு அஜித் மீண்டும் வாய்ப்பளிக்க உள்ளார் என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தன. இந்த நிலையில் அமர்களம் 2 திரைப்படம் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

amarkalam

ஆனால் அமர்களம் 2 வை இயக்குனர் சரண் இயக்கவில்லையாம். மாறாக இயக்குனர் எஸ்.ஜே சூர்யாதான் இந்த படத்தை இயக்க போகிறார் என்பதாக கூறப்படுகிறது.

எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் நடித்த வாலி திரைப்படமும் பெரிய ஹிட் படம் என்பது பலருமே அறிந்த விஷயமே.

மத்தவங்க மாதிரி இவர் இல்ல.. விஜய் குறித்து அஜித்தின் தாயார் உருக்கம்..!

நடிகரும் த.வெ.க கட்சியின் தலைவருமான விஜய் தொடர்ந்து சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். அரசியலில் ஈடுபாடு காட்டி வரும் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு இருந்தே மக்களுக்கு ஆதரவாக நிறைய முறை நின்றுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் திருப்புவனத்தை சேர்ந்த அஜித் என்கிற இளைஞன் தனிப்படை போலீசார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிக சர்ச்சையை கிளப்பி வந்தது. மக்கள் தொடர்ந்து காவலர்கள் மற்றும் அரசுக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கினர்.

இதனையடுத்து மதுரை உயர்நீதிமன்றத்தில் இது சிறப்பு வழக்காக எடுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதற்கு நடுவே த.வெ.க தலைவர் விஜய் நேற்று எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் அஜித்தின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னதுடன் 2 இலட்சம் ரூபாய் இழப்பீடாகவும் கொடுத்துள்ளார் விஜய்.

மாஸ் ஹிட் இயக்குனருடன் இணையும் அஜித்.. பழைய ஏ.கேவை பார்க்கலாம் போல..

தமிழ் சினிமாவில் அதிக கலெக்‌ஷன் கொடுக்கும் முக்கிய நடிகர்களில் நடிகர் அஜித்தும் ஒருவர். ஆனால் சமீப காலங்களாக அஜித் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை கொடுக்கவில்லை. இந்த வருட துவக்கத்தில் அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது.

விடாமுயற்சி திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேணி இயக்கியிருந்தார். இதனாலேயே இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என்றே கூற வேண்டும். இதனால் அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை தரவில்லை.

அதற்கு பிறகு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றாலும் அஜித் ரசிகர்கள் மட்டுமே அதிகம் விரும்பும் திரைப்படமாக இருந்தது. இதனை தொடர்ந்து அஜித் அடுத்து நடிக்க விருக்கும் திரைப்படம் குறித்து புது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது ஏற்கனவே அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்களம் மாதிரியான ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் சரண் இயக்கத்தில் அஜித் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக சினி வட்டாரத்தில் பேச்சுக்கள் இருக்கின்றன. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சினிமாவுக்கு வரலைனா இதுதான் என் கனவு… அஜித்தை பின்பற்றும் கீர்த்தி பாண்டியன்.!

பிரபலங்களின் பிள்ளைகள் சினிமாவிற்குள் அடியெடுத்து வைப்பது என்பது தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் இருந்து இப்படியாக சினிமா பிரபலங்களின் குழந்தைகள் சினிமாவிற்குள் வந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

அந்த வகையில் நடிகர் அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க ஆசைப்பட்டார் தும்பா என்கிற திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார்.

ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. அதனை தொடர்ந்து கீர்த்தி பாண்டியன் நடித்த ப்ளூ ஸ்டார், கண்ணகி மாதிரியான படங்கள் ஓரளவு வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் சமீபத்தில்தான் கீர்த்தி பாண்டியனுக்கும் நடிகர் அசோக் செல்வனுக்கும் இடையே திருமணம் நடந்தது. சமீபத்தில் கீர்த்தி பாண்டியன் ஒரு பேட்டியில் கூறும் பொழுது ஒரு வேலை சினிமாவிற்கு வரவில்லை என்றால் கார் ரேஸ் பக்கம் தான் நான் சென்று இருப்பேன் என்று கூறியிருக்கிறார் கீர்த்தி பாண்டியன்.

நடிகர் அஜித்தை போலவே கீர்த்தி பாண்டியனுக்கும் கார் ரேஸ் மீது தான் அதிக ஈடுபாடு இருந்திருக்கிறது என்று இது குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

அஜித்தால் சன் பிக்சர்ஸ்க்கு வந்த நஷ்டம்… நிறுவனம் எடுத்த முடிவு..!

சமீப காலமாக நடிகர் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் என்பது தமிழ் சினிமாவில் வரவேற்பு பெறாமல் இருந்து வருகிறது. குறிப்பாக விடாமுயற்சி திரைக்கு வந்து பெரும் வெற்றியை அடையவில்லை.

இது பலருக்குமே ஆச்சரியத்தை கொடுத்தது. ஏனெனில் இவ்வளவு காலங்கள் அஜித் நடித்த திரைப்படங்கள் சுமாரான திரைப்படங்களாக இருந்தாலுமே நல்ல வெற்றியை பெற்று வந்தன.

ஆனால் விடாமுயற்சி திரைப்படத்தை பொருத்தவரை அஜித்துக்கான ஹீரோயிசம் விஷயங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் அந்த படம் தோல்வியை கண்டது.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் ஓ.டி.டி உரிமத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியது. ஆனால் ஓடிடியில் வெளியாகியும் விடாமுயற்சி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.

அதனால்தான் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்து அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் வாங்க இருந்தது.

ஆனால் விடாமுயற்சி படத்தால் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக குட் பேட் அக்லி திரைப்படத்தை அவர்கள் வாங்கவில்லை. அதனால்தான் இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.

என் அடுத்த படத்திற்கு காத்திருக்கணும்.. அஜித் கொடுத்த அப்டேட்..!

நடிகர் விஜய்யை தொடர்ந்து நடிகர் அஜித்தின் திரைப்படங்களும் திரைக்கு வருவதில் நிறைய பிரச்சனைகள் இருந்து வருகின்றன. நடிகர் விஜய் அரசியலுக்கு சென்றதால் இனி திரைப்படம் நடிப்பதில்லை என்கிற முடிவை எடுத்திருக்கிறார்.

எனவே அவரது 69 ஆவது திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் பெரிதாக திரைப்படங்கள் வராது. ஆனால் அஜித் நடிப்பில் படங்கள் அதிகமாக வரும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அவரும் கார் ரேஸ் மீது அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கிறார்.

முக்கியமாக கார் ரேசில் கலந்து கொள்ளும் சமயங்களில் திரைப்படங்களில் நடிப்பதில்லை என்றும் முடிவெடுத்து இருக்கிறார் அஜித். இந்த நிலையில் அவரது நடிப்பில் சமீபத்தில் குட் பேட் அக்லி என்கிற திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் அடுத்து ஒரு படத்தில் நடிப்பார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்சமயம் மீண்டும் கார் ரேஸில் கலந்து கொள்ள சென்று விட்டார். அஜித்.

எனவே 2025 நவம்பரில்தான் அடுத்த படத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறி இருக்கிறார் 2026 மே மாதம் இந்த திரைப்படம் திரைக்கு வரும் என்றும் கூறியிருக்கிறார் அஜித்.