தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் மிக முக்கியமானவராக அஜித் இருந்து வருகிறார்.
தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் என்று லிஸ்ட் எடுத்தால் அதில் முதல் ஐந்து நடிகர்களில் முக்கியமானவராக அஜித் இருப்பார் என்று கூறலாம். தொடர்ந்து அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கும் சினிமாவில் வரவேற்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனாலும் கார் ரேஸ் மாதிரியான மற்ற விஷயங்கள் மீது அஜித் கவனம் செலுத்தி வருவதால் வருடத்திற்கு ஒரு திரைப்படம் தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
கார் ரேஸில் கலந்து கொள்ளும் காலகட்டங்களில் அஜித் திரைப்படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்து இருக்கிறார். இந்த நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் அஜித்.
அதற்குப் பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே ரஜினியை வைத்து பேட்ட என்கிற ஹிட் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார். இதனால் அவருக்கு அஜித்துடன் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் ஜிகர்தண்டா மாதிரியான ஒரு ரவுடி கதாபாத்திரத்தில் அஜித் களமிறங்க இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.