நடிகை சரோஜாதேவி தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகையாக இருந்தவர். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் இருந்து சரோஜாதேவிக்கு நல்ல வரவேற்பு இருந்து வந்தது.
அப்போதே பிரபலமாக இருந்ததால் பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார் சரோஜாதேவி. இந்த நிலையில் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து வந்த நடிகைகளில் மிக முக்கியமானவராக சரோஜாதேவி இருந்து வந்தார்.
87 வயதை கடந்த சரோஜாதேவி உடல்நல குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள தனது இல்லத்திலும் காலமானார். தற்சமயம் இவருடைய மறைவு என்பது திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.
மறைவுக்கு முன்பு இன்று காலை முதலே சரோஜாதேவி நல்லபடியாக தான் இருந்தார் என்று கூறப்படுகிறது. காலையில் வழக்கம் போல் பூஜை எல்லாம் செய்துவிட்டு தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டே இருந்திருக்கிறார்.
அப்பொழுது திடீரென அவருது உடலில் பிரச்சனை ஏற்படுவதாக அவருக்கு தோன்றியிருக்கிறது. அதனை தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் ஆனால் அவருக்கு அப்படியும் கூட உயிர் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.