2026 வரை சான்ஸ் இல்ல.. இதான் காரணம்.. அஜித் படம் பத்தி வந்த அப்டேட்.!

நடிகர் அஜித் திரைப்படங்களில் நடித்து வரும் அதே சமயம் கார் ரேஸ் மீதும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சிறுவயதிலிருந்து நடிகர் அஜித்துக்கு கார் ரேஸ் மீது அதிக விருப்பம் இருந்து வந்தது.

ஆனால் அப்பொழுது சினிமாவில் அவருக்கு வரவேற்பு அதிகமாக இருந்த காரணத்தினால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து வந்தார். ஆனால் அவருக்கு வயது அதிகமாகிவிட்ட காரணத்தினால் தன்னுடைய கனவை நோக்கி செல்ல துவங்கி இருக்கிறார் அஜித்.

ஆனால் விஜய் மாதிரியும் முழுக்க சினிமாவை விட்டு செல்லாமல் வருடத்திற்கு ஒரு திரைப்படமாவது நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து சென்றிருக்கிறார் அஜித்.

பிஸியாக இருக்கும் அஜித்:

இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு வரையிலுமே தொடர்ந்து அஜித் கார் ரேஸில் கலந்து கொள்ள உள்ளார். அப்படி கார் ரேஸில் பங்கு பெறும்போது எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்க மாட்டேன் என்று அஜித் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் அடுத்து அவர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் நடிக்கும் திரைப்படம் எப்பொழுது துவங்கும் என்று தெரியாமல் இருந்து வருகின்றனர் ரசிகர்கள். இதற்கு நடுவே லோகேஷ் கனகராஜ் ஒருமுறை பேட்டியில் கூறும்போது அஜித் வைத்து படம் பண்ண ஆசை இருக்கு என கூறியுள்ளார். எனவே அதுக்குறித்து அடுத்து பேச்சுவார்த்தை நடக்கலாம் என கூறப்படுகிறது.