Tag Archives: actor ajith

அஜித் பேரை சொல்லிதான் என் மனசை புண்படுத்துனாங்க.. பப்லு ஓப்பன் டாக்..!

ஆரம்பத்தில் கதாநாயகனாக வேண்டும் என்கிற ஆசையில் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தவர் நடிகர் பப்லு. அதற்கு பிறகு அவருக்கு துணை கதாபாத்திரங்களில் தான் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது.

நிறைய திரைப்படங்களில் மக்களை ஈர்க்கும் வகையிலான கதாபாத்திரம் அவருக்கு கிடைத்தது. ஆனாலும் கூட அவரால் கதாநாயகனாக ஆகவே முடியவில்லை.

இப்பொழுது வரையிலும் அது கை கூடாத விஷயமாக தான் இருந்து வருகிறது சமீப காலங்களாக பப்லு நிறைய சமூக வலைதளங்களில் பேசி வருகிறார். அப்படியாக சமீபத்தில் ஒரு வீடியோவில் அவர் பேசும்பொழுது ஆரம்பகால சினிமா வாழ்க்கை குறித்து பேசி இருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட நிலையில் எல்லாம் நான் இருந்து கொண்டு சினிமாவிற்கு வரவில்லை எனது அப்பா காவலாளியாக இருந்தார் எனவே சினிமாவிற்கு வரும்பொழுது பொருளாதார ரீதியாக எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

எனக்கு இருந்த பிரச்சனை எல்லாம் பார்ப்பதற்கு அஜித் மாதிரி இருக்க ஏன் ஹீரோ ஆகவில்லை என்று தொடர்ந்து அனைவரும் கேட்டதுதான் என்று கூறியிருக்கிறார் பப்லு.

முந்தைய படங்களில் நான் செய்த தவறுகள்.. மனம் உடைந்த நடிகர் அஜித்.!

தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். தமிழ் சினிமாவில் அஜித்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அஜித்தும் அவர்களுக்கு பிடித்தாற் மாதிரி ஆக்‌ஷன் திரைப்படங்களாக நடித்து வருகிறார்.

ஆனால் அஜித் பொதுவாக மக்கள் மத்தியில் தோன்றவே மாட்டார். இசை வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா, பேட்டிகள் என எதிலுமே அஜித்தை பார்க்க முடியாது. இந்த நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பிறகு வெகு வருடங்கள் கழித்து பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார் அஜித்.

அதில் அவர் கூறிய விஷயங்கள் அனைத்து நடிகர்களும் பின்பற்ற வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. இத்தனை ஆக்‌ஷன் திரைப்படங்களில் நடித்தாலும் அதற்கு தொடர்பு இல்லாமல் அஜித் நடித்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த திரைப்படத்தில் நடித்தது குறித்து அஜித் முக்கியமான விஷயம் ஒன்றை கூறியுள்ளார்.

ajith

அதில் அவர் கூறும்போது நான் குற்றவுணர்ச்சியின் காரணமாகவே நேர்க்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்தேன். இதற்கு முன்பு நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளேன். அவற்றில் சிலவற்றில் பெண்களை தவறாக சித்தரித்த காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.

அந்த குற்றவுணர்ச்சி எனக்கு இருந்துக்கொண்டே இருந்தது. அதனால்தான் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தேன் என அஜித் கூறியிருக்கிறார். இப்போதும் திரைப்படங்களில் பெண்களை தவறாக சித்தரிக்கும் இயக்குனர்களுக்கும் நடிகர்களுக்கும் பதிலடியாக உள்ளது அஜித்தின் இந்த பதில்.

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித்.. இதுதான் காரணமாம்.!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் அதிகமாக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார். பெரும்பாலும் நடிகர் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே ஹிட் படங்களாகதான் இருந்து வந்துள்ளது. திரைப்படங்களில் கொடுக்கும் வெற்றியை தாண்டி அஜித்தின் நிஜ வாழ்க்கை குறித்து பல நல்ல விஷயங்கள் எப்போதும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் உலாவி வருகிறது.

அதுதான் அஜித்துக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதற்கு காரணமாக இருக்கிறது. நடிகர் அஜித் சினிமாவில் மட்டுமில்லாமல் கார் ரேஸ் போன்ற பல விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். அதனாலேயே பலரும் நிஜ வாழ்க்கையிலேயே அஜித்தை ஒரு கதாநாயகனாகதான் பார்க்கின்றனர்.

ajith

இந்த நிலையில் சமீபத்தில் பத்ம விபூஷன் விருதை பெற்றார் அஜித். அதை தனது மனைவிக்கும் குடும்பத்தாருக்கும் சமர்பித்தார். இந்த நிலையில் திடீரென இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அஜித்.

இது ரசிகர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் 6 மாதங்களுக்கு ஒருமுறை உடல்நிலையை பரிசோதித்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார் அஜித். அதற்காகதான் அவர் மருத்துவமனை சென்றுள்ளார் என கூறப்படுகிறது.

ஆனால் கார் ரேஸில் ஏற்பட்ட விபத்தினால் அவருக்கு உடல் பிரச்சனை ஏற்பட்டிருக்குமோ என இதுக்குறித்து ரசிகர்கள் வருந்தி வருகின்றனர்.

அஜித்துக்கு விஜய் அளவு வசூல் வராதாதுக்கு இதுதான் காரணம்.. புட்டு புட்டு வைத்த பிரபலம்..!

நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம்தான் குட் பேட் அக்லி. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏற்கனவே வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம்.

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்துதான் இவருக்கு நடிகர் அஜித் வாய்ப்பை கொடுத்தார். இந்த நிலையில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் 10 நாட்களை கடந்த நிலையில் தற்சமயம் 200 கோடிக்கும் அதிகமாக ஓடி வெற்றியை கொடுத்துள்ளது.

ஆனால் விஜய் படத்தோடு ஒப்பிடும்போது எப்போதுமே அந்த அளவிற்கான வெற்றியை அஜித் திரைப்படங்கள் கொடுப்பதில்லை. அந்த வகையில் குட் பேட் அக்லி திரைப்படமும் பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை. இந்த நிலையில் இதுக்குறித்து சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

அவர் கூறும்போது உண்மையில் விஜய்யை விட அஜித்துக்கு ரசிகர்கள் குறைவுதான். தமிழ் நாட்டில் வேண்டுமானால் அஜித் ரசிகர்கள் அதிகமாக இருக்கலாம். ஆனால் ஆந்திரா கேரளாவில் கூட விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர்.

அதே போல வெளிநாடுகளிலும் விஜய்க்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனால்தான் விஜய் படம் வெளியான உடனேயே பெரும் வெற்றியை கொடுத்து விடுகிறது என்கிறார் பிஸ்மி.

மேடையில் சென்று தல அஜித் கொடுத்த டாக்.. ஆடிப்போன கலைஞர் கருணாநிதி.. அதுதான் அஜித் வெளியில் வராமல் போனதுக்கு காரணம்.!

நடிகர் அஜித் இப்போதெல்லாம் எந்த ஒரு பத்திரிகை மீட்டிங்கிலும் கலந்து கொள்வது கிடையாது. இசை வெளியீட்டு விழாவிற்கு வருவது கிடையாது எந்த ஒரு சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பேட்டி கொடுப்பது கிடையாது.

இதனால் அஜித்தை பலரும் பலவாறு விமர்சித்து வாழ்ந்தாலும் கூட நடிகர் அஜித்துக்கான வரவேற்பு என்பது குறையவே இல்லை. தொடர்ந்து அஜித்துக்கான ரசிகர்களும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

இத்தனைக்கும் விஜய் மாதிரி வருடத்திற்கு ஒரு திரைப்படம் கூட அஜித் கொடுப்பது கிடையாது. இரண்டு வருடத்திற்கு ஒரு திரைப்படம் என்கிற ரீதியில் தான் இப்பொழுது அவருடைய படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ajith

அஜித் கொடுத்த ஸ்பீச்:

ஆனால் ஒரு காலகட்டத்தில் மேடையில் அஜித் ஏறினாலே சர்ச்சையாக பேசுவார் என்று அஜித் குறித்து ஒரு ஒரு வாதம் இருந்து வந்தது. அதற்கு தகுந்தார் போல முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை வாழ்த்துவதற்கு ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர் அந்த சமயத்தில் அஜித் அதில் கலந்து கொண்டிருப்பார். அப்பொழுது மேடையில் ஏறி அஜித் பேசும்பொழுது சினிமா நடிகர்கள் வர விருப்பம் இருந்தால் வரவிடுங்கள்.

அவர்களை மிரட்டி எல்லாம் நிகழ்ச்சிக்கு அழைக்காதீர்கள் என நேரடியாக கேட்டிருந்தார் அதனை கேட்டு அப்பொழுது அங்கு அமர்ந்திருந்த கருணாநிதியே வியந்து போனார் இந்த மாதிரியான நெத்தியடி பேச்சுகளால் தான் அஜித் அதிக விமர்சனத்திற்கு உள்ளானார். அதனால்தான் பிறகு அவர் இந்த மாதிரியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் நிறுத்திக் கொண்டார்.

மனைவியின் உடலில் ஒரு பாகத்தை எடுத்துட்டாங்க.. கவலையில் தவிக்கும் அஜித்..! என்ன மாதிரி ஆபரேஷன் நடந்தது..?

Actor Ajith: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். மேலும் நடிகர் அஜித் ரசிகர் மன்றங்களை கலைத்த பிறகும் இவருக்கு இருக்கும் ரசிகர்களின் அளவு இன்னும் குறைந்தபாடில்லை.

தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் அஜித் குமார் தற்பொழுது விடா முயற்சி படப்பிடிப்பிற்காக அஜர்பைஜானுக்கு சென்று இருக்கிறார்.

மேலும் ரசிகர்கள் “விடாமுயற்சி” திரைப்படம் எப்பொழுது திரைக்கு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் படத்தைப் பற்றிய அப்டேட் ஏதேனும் ஒன்று கிடைத்து விடாதா என்ற ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வருடம் விடாமுயற்சி திரைக்கு வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கும் வேலையில், தற்பொழுது அஜித்தை பற்றி வெளிவந்துள்ள தகவல் அவரின் ரசிகர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அஜர்பைஜானில் இருந்து விரைந்த நடிகர் அஜித்

தமிழ் சினிமாவில் யாருடைய துணையும் இன்றி தனி ஒரு ஆளாக சினிமாவிற்குள் நுழைந்து தற்பொழுது வரை ரசிகர்களின் மத்தியில் ஒரு பெரிய இடத்தை பிடித்திருப்பவர் அஜித்.

இவரின் பெயரை சொன்னால் இவரின் ரசிகர்களுக்கு முதலில் நினைவிற்கு வருவது தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான். ஒரு நடிகராக மட்டும் இவரை பார்க்காமல் தன்னம்பிக்கையின் நாயகனாகவும் இவரை பார்க்கிறார்கள்.

அஜித்குமாருக்கு ரேஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு படத்தை முடித்து கொடுத்த பிறகு இவர் அவருடைய பைக் எடுத்துக்கொண்டு ரேஸ் சென்று விடுவார்.

அஜித் மனைவி ஷாலினியின் நிலைமை

விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக அஜர்பைஜானுக்கு சென்ற அஜித் அங்கிருந்து அவசர அவசரமாக சென்னை விரைந்து இருக்கிறார்.

தற்பொழுதும் ஒரு ஜோடி எவ்வாறாக இருக்க வேண்டும் என்று கேட்டால் அஜித் ஷாலினி என்று கூறுவார்கள். அஜித் அவரின் மனைவி ஷாலினியை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார்.

மனைவி மீது இவ்வளவு பாசம் கொண்ட அஜித் தற்பொழுது ஷாலினிக்கு மருத்துவர்களின் அறிவுரைப்படி ஆபரேஷன் செய்ய வேண்டும் என கூறியதால் படப்பிடிப்பிலிருந்து அவசரமாக கிளம்பி வந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் இவர் “விடாமுயற்சி” படப்பிடிப்பிற்காக அஜர்பைஜானுக்கு செல்வதற்கு முன்பே ஆபரேஷன் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் ஷாலினியின் மீது கொண்ட பாசத்தின் காரணமாக அவர் படப்பிடிப்பிலிருந்து வந்ததாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் ஷாலினிக்கு நடந்தது ஒரு மைனர் ஆப்ரேஷன் என்றும், அதில் சிறிய அளவிலான அவரின் உடல் பகுதி ஒன்று எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

1000 கோடி பட்ஜெட் படத்தில் அஜித் கதாநாயகனா? அடுத்த சம்பவத்துக்கு தயாரான ஷங்கர்..

2018 ஆம் ஆண்டு வந்த 2.0 திரைப்படத்திற்கு பிறகு சங்கர் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் திரைப்படங்களே வரவில்லை. கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக ஷங்கர் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வந்து கொண்டிருக்கிறார்.

அதனால் அவரது இயக்கத்தில் திரைப்படங்கள் எதுவும் வராமல் இருக்கிறது. இதனை தொடர்ந்து ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களை இயக்கி வருகிறார் சங்கர். இந்தியன் 2 திரைப்படத்தோடு சேர்த்து ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

பெரும் பட்ஜெட் படம்:

எனவே இந்த வருடம் சங்கர் இயக்கத்தில் இரண்டு திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படங்களுக்கு பிறகு சு.வெங்கடேசன் எழுதிய விகடனில் தொடராக வந்த வேள்பாரி தொடரை திரைப்படமாக இருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

velpari

இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 1000 கோடி பட்ஜெட்டில் தயாராக இருப்பதாக ஏற்கனவே பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் அஜித்தை நடிக்க வைப்பது குறித்து பேச்சு வார்த்தைகள் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இதுவரை சங்கரின் இயக்கத்தில் அஜித் எந்த ஒரு திரைப்படத்திலும் நடித்ததில்லை என்பதால் இந்த செய்தி குறித்து வரவேற்புகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் கண்டிப்பாக அது வேள்பாரி கதாபாத்திரமாக இருக்காது கதையில் வரும் வேறு ஒரு முக்கிய கதாபாத்திரமாகதான் இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி என்றால் வேள்பாரி கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

இங்க அஜித் மட்டும் ரிஸ்க் எடுத்து வேலை பார்க்கலை!.. ஓப்பன் டாக் கொடுத்த விஜய் ஆண்டனி!..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக விஜய் ஆண்டனி இருந்து வருகிறார். பெரும்பாலும் விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படங்கள் பெரிய கதை அம்சத்தை கொண்ட திரைப்படங்களாக இருக்கும்.

இதனாலேயே அவரது திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சமீப காலமாக பேட்டிகளில் பேசும்போது மிகவும் ஜாலியாக பேசி வருகிறார் விஜய் ஆண்டனி. மிகவும் ஓப்பனாக அவர் பேசுவது அதிக வரவேற்பை ஏற்படுத்தி வருகிறது.

vijay-antony

ரோமியோ ஜூலியட் திரைப்படத்திற்காக அவர் ஒரு பேட்டியில் கலந்துக்கொண்டப்போது அவரிடம் பேசிய பத்திரிக்கையாளர் சமீபத்தில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பில் அஜித்திற்கு பெரும் விபத்து உண்டானது.

வாழ்க்கையே ரிஸ்க்தான்

இவ்வளவு வயதான பிறகும் கூட அவர் உயிரை கொடுத்து இப்படி ரிஸ்க் எடுத்து நடிப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் ஆண்டனி எல்லோரது வாழ்க்கையிலும் ரிஸ்க் இருக்கிறது. நீங்கள் பத்திரிக்கையாளராக பணிப்புரிகிறீர்கள் ஒருவேளை அலுவலகத்திற்கு நீங்கள் வரும்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அல்லவா?

எனவே இந்த உலகில் எல்லோருமே அவர்கள் செய்யும் வேலைக்காக ரிஸ்க் எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றனர் என கூறியுள்ளார் விஜய் ஆண்டனி.

அஜித் ஒண்ணுமே செய்யாமல் எல்லாருக்கும் நல்லது செய்யக்கூடியவர்!. டாக்டருக்கு நடந்த நிகழ்வு!.. வெளிப்படுத்திய ஹெச்.வினோத்!.

தொடர்ந்து சினிமாவில் வெற்றி படங்களாகவே கொடுத்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். பொதுவாக நடிகர்கள் தங்கள் ரசிகர்களை தக்க வைத்துக்கொள்வதற்காக நிறைய விஷயங்களை செய்ய வேண்டி இருக்கும். பல பேட்டிகள், விருது வழங்கும் விழாக்களில் எல்லாம் கலந்துக்கொண்டு பேசினால்தான் அவர்களால் ட்ரெண்டில் இருக்க முடியும்.

ஆனால் இது எதையுமே செய்யாவிட்டாலும் கூட அஜித்திற்கான ரசிக பட்டாளம் இன்னமும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் அஜித் நிஜ வாழ்க்கையில் பலருக்கும் செய்யும் உதவிகளே.

இதுக்குறித்து இயக்குனர் ஹெச்.வினோத்திடம் ஒரு பேட்டியில் கேட்கும்போது அவர் ஒரு கதை கூறினார். ஒரு இளைஞன் மருத்துவர் ஆக வேண்டும் என்கிற கனவோடு சென்னைக்கு வருகிறான். அவனது கையில் 2000 ரூபாய்தான் பணம் இருக்கிறது.

மிகவும் பயத்துடன் அவன் வரும்போது அங்கு அஜித்தின் புகைப்படம் இருக்கிறது. எந்த பொருளாதார செல்வாக்கும் இல்லாமல் சினிமா பின்புலமும் இல்லாமல் அஜித்தால் இவ்வளவு பெரிய உயரத்தை தொட முடியும் என்றால் நம்மாளும் முடியும் என அவன் நினைக்கிறேன்.

எனவே அஜித் எதுவும் செய்ய தேவையில்லை. அவர் அவரது வேலையை செய்துக்கொண்டிருந்தாலே போதும். அதுவே பலருக்கும் முன்னுதாரணமாக அமைந்து நன்மை பயக்கிறது என்கிறார் ஹெச்.வினோத்.

இயக்குனர்கள் எல்லாம் அஜித்தை கை விட்டப்ப கூட நான் அவருக்காக நின்னேன்!. இயக்குனர்களுக்கு எதிரியாக தல மாற இதுதான் காரணம்!

Actor Ajith: விஜய்யை போலவே தமிழ் சினிமாவில் அதிகமான ரசிக பட்டாளத்தை கொண்ட ஒரு நடிகராக அஜித் இருந்து வருகிறார். தனது திரைப்படங்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கும்போதும் கூட குறைவான அளவிலேயே திரைப்படங்களில் நடித்து வருகிறார் அஜித்.

துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நிறைய இடைவெளி விட்டுதான் தற்சமயம் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பும் வெகுநாட்களாக நடந்து வருகிறது. விஜய்யை வைத்து படமெடுக்கும் இயக்குனர்கள் எல்லாம் குறிப்பிட்ட நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிடுகின்றனர்.

ajithkumar

ஆனால் அஜித் ரஜினி மாதிரியான நடிகர்களுக்கு மட்டும் படப்பிடிப்பு நீண்டுக்கொண்டே செல்கிறது. அஜித் பிரபலமாக இருந்த காலக்கட்டத்திலேயே நிறைய திரைப்படங்களில் சிறப்பு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

ஆதரவு கொடுத்த இயக்குனர்:

அப்போது பிரபலமாக இருந்த மற்ற நடிகர்கள் யாரும் அப்படி சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதில்லை. நடிகர் விக்ரமன் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்கிற திரைப்படத்தை இயக்கி வந்தப்போது அந்த திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரம் ஒன்று இருந்தது.

unnidathil-ennai-koduthen

அந்த கதாபாத்திரத்தில் அஜித் நடித்தால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளர் நினைத்தார். இந்த நிலையில் இயக்குனர்கள் தங்களுக்கென்று ஒரு சங்கம் துவங்கியிருந்தனர். அஜித் அந்த சங்கத்திற்கு எதிராக இருந்தார்.

இதனால் அவரை வைத்து படம் இயக்க கூடாது என சங்கத்தில் முடிவு செய்திருந்தனர். இதனால் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார் அஜித். இந்த நிலையில் அஜித்தை சந்தித்து அவருக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறார் விக்ரமன். ஏற்கனவே புதிய மன்னர்கள் படத்திலேயே அஜித்தை விக்ரமின் நண்பனாக நடிக்க வைக்க இருந்ததாகவும் ஆனால் அப்போது அஜித் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறுகிறார் விக்ரமன்.

அட்வைஸ் பண்றதுக்கு முன்னாடி, சொன்ன சொல்லில் நீங்கள் முதல்ல கரெக்டா இருக்கீங்களா!.. வெளிப்படையாக கேட்ட பத்திரிக்கையாளர்!..

Actor Ajith: நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகளை பெற்று வரும் நடிகர்களில் முக்கியமானவர் என கூறலாம். அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே ஒரு பெரும் ரசிக பட்டாளம் பார்ப்பதற்கு காத்திருப்பதால் மார்க்கெட் குறையாமல் இருக்கிறார் அஜித்.

மேலும் மற்ற நடிகர்களில் அஜித் தனித்து தெரிவதற்கு அவரது ரசிகர்களே காரணம் எனலாம். ஏனெனில் எம்.ஜி.ஆரில் துவங்கி இப்போது உள்ள நடிகர்கள் வரை ஒவ்வொருவரும் தமிழ் சினிமாவில் தங்களை நிலை நிறுத்தி கொள்வதற்காக மக்கள் மத்தியில் தொடர்ந்து அவர்களை பிரபலப்படுத்திக்கொள்வதை பார்க்க முடியும்.

ஆனால் அப்படியான எந்த விளம்பரமும் செய்யாமலே மிகவும் பிரபலமாக இருப்பவர் நடிகர் அஜித் என கூறலாம். இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது. இந்த நிலையில் இதுக்குறித்து பேசிய பத்திரிக்கையாளர் அந்தணன் அஜித் குறித்து சில சர்ச்சைக்குரிய தகவல்களை கூறியிருந்தார்.

ajith1

அஜித் மக்களுக்காக பேட்டி எல்லாம் அளித்து வந்த காலத்தில் அவர் ஜெயா டிவியில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து அஜித் கூறியிருந்த கருத்து பிரபலமாகி வந்தது. நடிகர்கள் அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்றில்லை.

ஒரு சாதரண மனிதனாக அவர்களது கடமைகளை சரியாக செய்தாலே போதும் என கூறியிருந்தார் அஜித். இந்த நிலையில் அஜித் முதலில் அவரது கடமைகளை சரியாக செய்கிறாரா என கேள்வி எழுப்புகிறார் அந்தணன். ரசிகர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலே அவரது திரைப்படங்களுக்கு வரவேற்பு கொடுத்தாலும் தங்களது ரசிகர்களை மகிழ்விக்க அஜித் என்ன செய்திருக்கிறார்.

தனது ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதும் அவரது கடமைதானே என இதுக்குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் அந்தணன்.

தயாரிப்பாளருக்காகதான் அந்த முடிவை எடுத்தேன்!.. அஜித் பத்திரிக்கைகள் முன்னாடி வராததுக்கு இதுதான் காரணம்!..

Actor Ajith : தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருந்தாலும் கூட அவர் ஒரு வருடத்திற்கு ஒரு திரைப்படம் நடிப்பது என்பதே கடினமான விஷயமாக இருக்கிறது.

ஏனெனில் சினிமாவை தாண்டி தற்சமயம் உலகைச் சுற்றி வருவதிலையே அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அஜித். இதற்காக சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை பெற்று பல நாடுகளுக்கு தனது இரு சக்கர வாகனத்திலேயே பயணம் செய்து வருகிறார். அஜித்.

இதற்கு நடுவில்தான் தற்சமயம் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அஜித் பல வருடங்களாக எந்த ஒரு பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுப்பது கிடையாது. எந்த ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கோ விருது வழங்கும் விழாவிற்கோ அவர் வந்ததே கிடையாது.

ajith-1

இதனாலேயே அவரது திரைப்படங்களுக்கு எந்த வித விருதுகளும் வழங்கப்படுவதும் கிடையாது இது குறித்து அஜித்துடன் பணிபுரிந்த இயக்குனர் சரண் கூறும் பொழுது எப்படி ஒரு மனிதன் சினிமாவில் இப்படி வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு பிரபலமாக இருக்க முடியும் என்று முதலில் நான் யோசித்தேன்.

பிறகு இது குறித்து நான் அஜித்திடம் கேட்ட பொழுது ஒரு தயாரிப்பாளருக்கு விசுவாசமாகத்தான் இதை நான் செய்கிறேன் என்று அஜித் கூறினார். ஏனெனில் எந்த ஒரு பொதுவெளிக்கும் வராமல் திரையில் நான் வெளிப்படும் பொழுது மக்களுக்கு அது ஆரவாரமான விஷயமாக இருக்கும் அதனால் தயாரிப்பாளருக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.

என்னை எப்போதும் மக்களால் பார்க்க முடிந்தால் திரைப்படங்களில் அவர்களுக்கு எதிர்பார்ப்பு குறைந்து விடும் எனவேதான் நான் வெளியில் வருவதில்லை என்று அஜித் கூறியதாக இயக்குனர் சரண் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ஆனால் பத்திரிகைகள் தொடர்ந்து அஜித்தை விமர்சித்து எழுதியதால்தான் அஜித் அவர்களுக்கு முன்பு தோன்றுவதில்லை என்பது மக்கள் கருத்தாக இருக்கிறது.