பராசக்தி படத்திற்கு வந்த சிக்கல்.! வெளியாவதில் புது பிரச்சனை.!
இயக்குனர் சுதாகொங்காரா இயக்கத்தில் தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் பராசக்தி. இந்த திரைப்படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன.
படத்தில் அதர்வா, ஜெயம் ரவி மற்றும் ஸ்ரீ லீலா இன்னும் சில பிரபலங்கள் நடித்திருக்கின்றனர் இந்த படத்திற்கு வரவேற்பு அதிகமாகவே இருக்கிறது. ஏனெனில் சுதா கொங்காரா இயக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் தமிழ் சினிமாவில் நல்ல வெற்றியை கொடுத்திருக்கின்றன.
மேலும் அரசியல் சார்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இருக்கும் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

பராசக்தி திரைப்படம்:
எனவே படத்தின் டீசர் வெளியானது முதலே அதற்கான வரவேற்பும் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் பராசக்தி திரைப்படம் வெளியாவதில் சில சிக்கல்கள் உருவாகி இருக்கின்றன. பராசக்தி திரைப்படத்தை இன்னும் எந்த ஓடிடி நிறுவனமும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இப்போதைய காலக்கட்டத்தில் ஓ.டி.டி நிறுவனங்கள் நிறைய விதிமுறைகளை இடுகின்றன. அதனை பின்பற்றாத பட்சத்தில் திரைப்படங்களை ஓ.டி.டி நிறுவனங்கள் வாங்குவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில் முன்னணி நடிகராக இருந்தாலும் கூட சிவகார்த்திகேயனின் படத்திற்கு இப்படி ஒரு பிரச்சனை வந்திருப்பது படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.