Tag Archives: பராசக்தி

சிவகார்த்திகேயனுக்கும் விஜய்க்கும் வந்த போட்டி.. இது என்ன புது கதை..!

அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளது என்றுதான் கூற வேண்டும். கிட்டதட்ட 400 கோடி வரை ஓடி பெரிய வெற்றியை கொடுத்தது சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம்.

அதற்கு பிறகு சிவகார்த்திகேயனின் கதை தேர்ந்தெடுப்புகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இயக்குனர் சுதா கோங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் பராசக்தி.

அதனை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்கிற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில் பராசக்தி திரைப்படம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதைக்களம் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாகும் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தோடு போட்டி போட இருப்பதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது.

சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு அவர் விஜய்யுடன் போட்டியிட முடியுமா? என்கிற ஒரு கேள்வி இருந்து வந்தாலும் கூட பராசக்தி படத்தின் கதை களத்தின் காரணமாக அந்த படம் ஓடுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் கண்டிப்பாக சிவகார்த்திகேயன் விஜய்யுடன் போட்டி போட்டு படத்தை வெளியிட மாட்டார் என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. இது குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறும் பொழுது பொங்கல் விடுமுறையை பொறுத்தவரை இரண்டு திரைப்படங்கள் வெளியாவது என்பது இரண்டு படத்திற்குமே நல்ல வெற்றியை தான் பெற்று தரும் என்று அவர் கூறியிருக்கிறார்.

பராசக்தி படத்தில் இணையும் பிரபல நடிகர்கள்.. பேன் இந்தியா படமா வருதோ?

அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் தொடர்ந்து கமர்சியல் கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இப்பொழுது எல்லாம் பெரிதாக இவர் காமெடி கதைக்களங்களை தேர்ந்தெடுப்பது இல்லை என்று தான் கூற வேண்டும். இந்த நிலையில் தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் பராசக்தி.

இந்த திரைப்படத்தை சுதா கொங்காரா இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் ஒரு பேன் இந்தியா திரைப்படமாக தயாராகி வருவதாக தற்சமயம் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன..

மற்ற மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகர்களுக்கு கேமியோ கதாபாத்திரம் இந்த திரைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனோடு சேர்ந்து மலையாளத்தில் பிரபல நடிகரான பாசில் ஜோசப் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் ரானா டகுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டில் நடந்த அதே சமயத்தில் கர்நாடகா கேரளா போன்ற மாநிலங்களிலும் நடந்தது.

அந்த சமயங்களில் அங்கு போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய போராட்ட வீரர்களாக பாசில் ஜோசப்பும் ராணா டகுபதியும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை பிரச்சனையை கையில் எடுத்த எஸ்.கே… முதல் நாள் படப்பிடிப்பே இப்படியா?

தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றி படங்களாக கொடுத்து வரும் கதாநாயகனாக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார்.  பெரும்பாலும் சீரியஸ் கதாபாத்திரங்களில் நடிக்காமலே இருந்து வந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.

ஏனெனில் காமெடி கதாநாயகனாக இவர் அறிமுகமானார் என்பதால் அவருக்கு சீரியஸ் கதாபாத்திரம் என்பது அதிக வரவேற்பை பெற்று தராமலே இருந்து வந்தது. ஆனால் அமரன் திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைத்துள்ளன.

இனி விஜய் அஜித் மாதிரியான முழு சீரிஸ் படங்களிலும் சிவகார்த்திகேயன் நடிக்கலாம் என்கிற சூழல் உருவாகியுள்ளது. எனவே சிவகார்த்திகேயனும் அதற்கு தகுந்த கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து சுதா கொங்காரா மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் ஆகிய இயக்குனர்கள் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சுதா கொங்காரா இயக்கும் பராசக்தி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்சமயம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பே இலங்கையில் யாழ்பாணத்தில் துவங்கப்பட்டுள்ளது.

1981 ஆம் ஆண்டு சிங்கள வன்முறையாளர்களால் அங்கிருந்த நூலகம் ஒன்று எரிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 95000 நூல்களை கொண்ட அந்த நூலகம் அழிந்தது இன்னமும் இலங்கையின் வரலாற்றில் அழியாத வடுவாக இருந்து வருகிறது. அதை அடிப்படையாக கொண்டுதான் தற்சமயம் படப்பிடிப்புகள் துவங்கியுள்ளதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

ஜனநாயகனுடன் மோதுகிறதா பராசக்தி.. சிவகார்த்திகேயனின் திடீர் முடிவு..!

அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் அதிகரித்து இருக்கிறது. இதுவரை 30 கோடிக்கும் குறைவாக சம்பளம் வாங்கி வந்த சிவகார்த்திகேயன் இப்பொழுது தன்னுடைய சம்பளத்தை 50 கோடிக்கு உயர்த்தி இருக்கிறார்.

அந்த அளவிற்கான ஒரு வெற்றியை அமரன் திரைப்படம் பெற்றுக் கொடுத்திருக்கிறது. அமரன் திரைப்படத்தை தொடர்ந்து தற்சமயம் தமிழில் முக்கிய நடிகர்கள் வரிசையில் சிவகார்த்திகேயனும் ஒருவராக மாறியிருக்கிறார்.

அமரன் திரைப்படம் முழுக்க முழுக்க சீரியஸ் ஆன திரைப்படமாக இருந்தாலும் கூட அது சிவகார்த்திகேயனுக்கு நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதற்கு முன்பு வரை சிவகார்த்திகேயன் தொடர்ந்து காமெடி படங்களாக தான் நடித்து வந்தார்.

இந்த நிலையில் இப்பொழுது அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாமே மிகவும் சீரியசான கதைகளத்தை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது தற்சமயம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

அதனை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் டைட்டில் குறித்து இன்னும் சர்ச்சைகள் சென்று கொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படம் நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படத்துடன் போட்டியிடும் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தன.

இந்த நிலையில் இது குறித்து பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறும் பொழுது சிவகார்த்திகேயன் கண்டிப்பாக ஜனநாயகனுக்கு போட்டியாக பராசக்தி திரைப்படத்தை வெளியிட மாட்டார். ஏனெனில் ஜனநாயகன் விஜயின் கடைசி படம் என்பதால் அதற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனோடு போட்டி போடும் அளவிற்கு சிவகார்த்திகேயன் துணிய மாட்டார் என்று கூறியிருக்கிறார்.

சிவக்குமாருக்கே அனுமதி தரல.. உங்களுக்கு எப்படி தர முடியும்.. பராசக்தி தலைப்புக்கு வழுக்கும் எதிர்ப்புகள்.!

இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் பராசக்தி. இந்த திரைப்படத்தில் ஸ்ரீ லீலா, ரவி மோகன், அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆனால் தற்சமயம் இந்த பராசக்தி திரைப்படத்தின் பெயர்தான் அதிக சர்ச்சையாகியுள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படத்தின் பெயர்தான் பராசக்தி. இந்த பெயர் சிவாஜி கணேசனின் ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறது. அதனாலேயே அந்த பெயரில் யாரும் திரைப்படத்தில் நடிப்பது இல்லை.

ஆனால் வெகு காலங்கள் கழித்து நடிகர் சிவகார்த்திகேயன் அந்த பெயரில் திரைப்படம் நடிக்கிறார். இந்த நிலையில் சிவாஜி சமூக நல பேரவை இதற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு நடிகர் சிவக்குமார் இதே போல பராசக்தி என்கிற பெயரில் ஒரு திரைப்படத்தில் நடித்தார்.

அந்த திரைப்படத்திற்கு அப்போது இதே போல சிவாஜி சமூக நல பேரவை எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனால் அந்த திரைப்படத்தின் பெயர் மீண்டும் பராசக்தி என மாற்றப்பட்டது.

இந்த நிலையில் தற்சமயம் எஸ்.கே நடிக்கும் திரைப்படத்திலும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

பராசக்தி பேர் யாருக்கு..? எஸ்.கேவை ரவுண்ட் கட்டும் விஜய் ஆண்டனி.!

அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் ஒவ்வொரு திரைப்படத்தையுமே பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வருகிறார். இந்த நிலையில் வரிசையாக தமிழில் வெற்றி வாகை சூடிய இயக்குனர்கள் படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

அப்படியாக தற்சமயம் ஏற்கனவே இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து அடுத்து சுதா கொங்காரா இயக்கத்தில் அவர் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியானது.

இந்த படத்திற்கு பராசக்தி என பெயரிடப்பட்டுள்ளது என ஏற்கனவே பேச்சுக்கள் இருந்தது. அதனை டைட்டில் டீசரும் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் படத்திற்கு பராசக்தி என பெயரிடப்பட்டுள்ளது குறித்து ஏற்கனவே சில சர்ச்சைகள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் இந்த டைட்டிலுக்காக போட்டி போட்டு களம் இறங்கி இருக்கிறார். தற்சமயம் விஜய் ஆண்டனி நடித்து இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் சக்தி திருமகன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் தெலுங்கு, கன்னடம் மாதிரியான மற்ற மொழிகளிலும் வெளியாகிறது. ஆனால் மற்ற மொழிகளில் இந்த படத்திற்கு பராசக்தி என்று பெயரிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படமும் மற்ற மொழிகளில் பராசக்தி என்கிற பெயரிலேயே வெளியாக இருக்கிறது.

தமிழில் பராசக்தி என்கிற பெயருக்கான காப்புரிமையை எஸ்.கேவின் படக்குழு வாங்கியுள்ளது. ஆனால் மற்ற மொழிகளில் விஜய் ஆண்டனியின் படக்குழு வாங்கியுள்ளது. இதனால் இப்போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய், அஜித் செய்த சாதனையை முறியடித்த எஸ்.கே.. பராசக்தி படத்தில் செய்த சம்பவம்.!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மக்கள் அனைவரும் தற்சமயம் அதிகமாக எதிர்பார்க்கும் ஒரு திரைப்படமாக பராசக்தி திரைப்படம் மாறியுள்ளது. சமீபத்தில் அந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இணையத்தையே ஒரு கலக்கு கலக்கி வருகிறது.

அதிகமாக காமெடி கதாநாயகனாக நடித்து வந்த சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தின் மூலம் சீரியஸான கதைக்களத்தையும் தன்னால் கையாள முடியும் என நிரூபித்து விட்டார். இந்த நிலையில் தொடர்ந்து அடுத்து சீரியஸான கதைக்களங்களில் இவர் களம் இறங்கியுள்ளார்.

அந்த வகையில் ஏற்கனவே ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு அதனை தொடர்ந்து தன்னுடைய 25 ஆவது திரைப்படத்தை இயக்க இயக்குனர் சுதா கொங்காராவை தேர்ந்தெடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்த திரைப்படத்தை சுதா கொங்காரா இயக்குகிறார் என்பதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை மேலும் தூண்டும் வகையில் படத்தில் ரவி மோகன் மற்றும் அதர்வாவும் முக்கிய நடிகர்களாக களம் இறங்கியிருக்கின்றனர்.

இது போதாது என தெலுங்கில் பிரபலமான டான்ஸ் குயின் ஸ்ரீ லீலாவும் இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு எண்ட்ரி கொடுக்கிறார். மேலும் இந்த படம் ஒரு பிரியாட்டிக் படமாக அமைந்துள்ளது. விடுதலை இந்தியா காலக்கட்டம் அல்லது அதற்கு பிறகு நடக்கும் கதையாக இது இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

பொதுவாக கமர்ஷியல் நடிகர்கள் தங்களுடைய 25, 50 மற்றும் 100ஆவது திரைப்படங்களை ஹிட் படங்களாக கொடுக்க வேண்டும் என நினைப்பார்கள்  அப்படியாக எம்.ஜி.ஆர், சிவாஜி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் எல்லோருமே தங்களுடைய 25 ஆவது படத்தில் நல்ல சக்ஸசை கொடுத்து தங்களை பெரிய ஹீரோக்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.

அதே போல கண்டிப்பாக எஸ்.கேவின் 25 ஆவது படமான பராசக்தியும் நல்ல வரவேற்பை பெறும். இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இந்த முன்னணி நடிகர்கள் லிஸ்ட்டில் சிவகார்த்திகேயன் பெயரும் இடம் பெறும். ஆனால் மற்ற ஹீரோக்கள் யாருமே தங்களுடைய 23 ஆவது படத்திலேயே சிவகார்த்திகேயன் அளவிற்கு வசூலை பெற்று தரவில்லை என்று கூறுகின்றனர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.

உண்மையை கதையை தழுவி எடுத்த படமா? விடுதலை இந்தியா காலக்கட்டத்தில் நடக்கும் கதை.. பராசக்தி டைட்டில் டீசரில் இதை கவனிச்சீங்களா?

அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து நடிக்கும் திரைப்படங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அமரன் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

முக்கால்வாசி படப்பிடிப்புகளே முடிந்த நிலையில் இன்னமும் அந்த படம் குறித்த அப்டேட் இன்னமும் வெளிவராமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்ததாக பிரபல இயக்குனரான சுதா கொங்காரா இயக்கத்தில் களம் இறங்கினார் சிவகார்த்திகேயன்.

இப்போது ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படத்தை விடவும் சுதா கொங்காரா திரைப்படத்தின் மீதுதான் மக்களது ஆர்வமானது திரும்பியுள்ளது. ஏனெனில் சுதா கொங்காராவின் சூரரை போற்று மாதிரியான திரைப்படங்கள் தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த திரைப்படத்தில் ரவி மோகன் மற்றும் அதர்வா ஆகிய இரண்டு நடிகர்களும் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு பராசக்தி என பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் ட்ரைலர் வெளியானது.

தற்சமயம் இந்த டைட்டில் டீசருக்கே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் சர்ப்ரைஸாக இந்த படத்தில் நடிகை ஸ்ரீ லீலா நடித்துள்ளார். படத்தில் அதர்வா கல்லூரி மாணவனாக இருக்கிறார். அதிகப்பட்சம் ஸ்ரீ லீலாதான் அதர்வாவிற்கு ஜோடியாக இருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு யார் ஜோடி என தெரியவில்லை. அது சீக்ரெட்டாக இருக்கலாம். அல்லது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியே இல்லாமலும் இருக்கலாம்.

இந்த நிலையில் விடுதலை இந்தியா காலக்கட்டத்திலும் அதற்கு பிறகு மாணவர் புரட்சி என்பது தமிழக அரசியலில் ஏகப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் துவங்கி மாணவர்களின் பல்வேறு போராட்டங்கள் வரலாற்றில் பதிவாகியுள்ளன.

அப்படியான ஒரு உண்மையாக நடந்த மாணவர் போராட்டத்தை அடிப்படையாக கொண்டுதான் இந்த படத்தின் கதை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் தான் அந்த போராட்டத்தின் தலைமையாக இருப்பார் என தெரிகிறது.

இவன் சரிப்பட்டு வரமாட்டான்!.. பாதி படத்தோட சிவாஜியை தூக்கிய ஏ.வி.எம்!.. வெளி மாநிலம் பயிற்சி பெற்ற நடிகர் திலகம்!.

கருப்பு வெள்ளை காலக்கட்டங்களிலும் சரி. இப்போதும் சரி சினிமாவில் வாய்ப்பை பெறுவது என்பது அவ்வளவு எளிதான ஒரு விஷயம் கிடையாது. அதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டி இருக்கும். முக்கியமாக சினிமாவிற்குள் செல்லும் அனைவருக்குமே அதில் நல்ல வாய்ப்பும் வரவேற்புகளும் கிடைத்துவிடும் என கூறிவிட முடியாது.

சினிமாவில் வாய்ப்பே கிடைக்காமல் காணாமல் போனவர்கள் பலர் உண்டு. கிட்டத்தட்ட சிவாஜி கணேசனுக்கும் அதுதான் நடந்திருக்கும். ஆனால் அவர் தனது விடா முயற்சி மூலமே தனது முதல் திரைப்படமான பராசக்தி திரைப்படத்தின் வாய்ப்பை பெற்றார்.

இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சுவின் இயக்கத்தில் பராசக்தி திரைப்படம் தயாரானப்போது அதில் சிவாஜி கணேசன் தான் நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார் கிருஷ்ணன் பஞ்சு. ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளரான ஏ.வி. மெய்யப்ப செட்டியாருக்கு சிவாஜி கணேசனை பிடிக்கவில்லை.

sivaji-ganesan

அதற்கு சிவாஜி கணேசனின் தோற்றமே காரணமாக இருந்தது. ஏனெனில் அப்போது சிவாஜி கணேசன் அதிக வறுமையில் இருந்தார். எனவே மிகவும் ஒல்லியாக காணப்பட்டார் சிவாஜி. ஆனாலும் கிருஷ்ணன் பஞ்சு உறுதியாக இருந்ததால் பராசக்தியின் படப்பிடிப்பு காட்சிகள் படமாக்கப்பட்டன.

இருந்தாலும் சிவாஜி கணேசனை வைத்து படமெடுத்தால் அது கண்டிப்பாக வெற்றியடையாது என நினைத்தார் ஏ.வி.எம். எனவே மீண்டும் கதாநாயகனை மாற்றுவது குறித்து அவர் பேச துவங்கினார். ஆனால் இயக்குனர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த நிலையில் சிவாஜி கணேசனுக்கு ஒரு டாஸ்க் கொடுத்தார் ஏ.வி.எம்.

அதாவது 3 மாதங்கள் வரை சிவாஜி கணேசனுக்கு கொடுக்கப்படும். அதற்குள் ஒரு ஹீரோ போல அவரது உடலை மாற்ற வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து படத்தில் நடிக்க முடியும். 3 மாதம் என்பது மிக குறைவு என்றாலும் வெளி மாநிலத்திற்கு சென்று உடல் எடையை அதிகரித்து வந்தார் சிவாஜி கணேசன்.

அதன் பிறகுதான் அந்த படத்தை முழுமையாக படமாக்கினார்கள்.

நான் உங்கள் வசனத்தை பேசியதால்தான் அதற்கு பெருமை!.. கருணாநிதி பேச்சுக்கு அப்போதே பதிலடி கொடுத்த சிவாஜி!…

Kalainger M karunanithi and Sivaji ganesan: தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக எல்லா காலங்களிலும் போற்றப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசனின் நடிப்பிற்கு இணையாக இப்போது வரை இன்னொரு நடிகரை தமிழ் சினிமா பிரபலங்களே பார்த்தது கிடையாது என கூறலாம்.

அடுத்து ரஜினி அடுத்த எம்.ஜி.ஆர் என பேச்சுக்கள் தமிழ் சினிமாவில் இருப்பதை போல அடுத்த சிவாஜி கணேசன் என்கிற பேச்சு மட்டும் இருந்ததே கிடையாது. ஆரம்பக்கட்டத்தில் சிவாஜி கணேசன் முதன் முதலாக நடித்த பராசக்தி திரைப்படம்தான் அவரை சினிமாவில் பெரிதாக உயர்த்தியது.

sivaji 1

இந்த திரைப்படத்திற்கு திரைக்கதையை கலைஞர் மு கருணாநிதிதான் எழுதினார். இந்த நிலையில் ஒருமுறை கருணாநிதி பேசும்போது எம்.ஜி.ஆரும் சிவாஜி கணேசனும் என்னுடைய வசனங்களை பேசிதான் வரவேற்பை பெற்றனர் என கூறியிருந்தார்.

அந்த விஷயத்தை கேள்விப்பட்டப்போது சிவாஜிக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. உடனே இதற்கு பதிலடி கொடுத்தார் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசன் பத்திரிக்கைக்கு இதுக்குறித்து பதில் கொடுக்கும்போது கருணாநிதியின் வசனங்களை நான் பேசியதால்தான் அந்த வசனத்திற்கு பெருமை.

பராசக்தி திரைப்படத்தை பொறுத்தவரை அதன் இயக்குனர் மட்டுமே என்னை கதாநாயகனாக்க வேண்டும் என்று பெரும்பாடு பட்டார் மற்றவர்கள் யாரும் அதற்கான பெருமையை பெற்றுக்கொள்ள முடியாது. சொல்ல போனால் கருணாநிதியின் அரசியல் கொள்கைகளை பொது மக்களிடம் கொண்டு சென்றதில் எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் முக்கிய பங்குண்டு என மிக வெளிப்படையாக பேட்டி கொடுத்துள்ளார் சிவாஜி கணேசன்.

அந்த அளவிற்கு எல்லாம் அப்போது சினிமாவில் பிரபலங்களுக்கு மத்தியில் பிரச்சனை இருந்துள்ளது.

சிவாஜி கணேசனுக்கு அப்புறம் அப்படி ஒரு அம்சம் கார்த்திக்குதான் அமைஞ்சது!.. விளக்கம் கொடுத்த பேரரசு!..

Sivaji Ganesan and Actor Karthi : கோலிவுட் சினிமாவில் நடிப்பில் சிறந்தவர் என்றால் அது சிவாஜி கணேசன்தான். தமிழில் 200க்கும் அதிகமான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் சிவாஜி கணேசன் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான கதை அமைப்பையும் சிக்கலான கதாபாத்திரங்களையும் கொண்டவை ஆகும்.

நாட்டுக்கு நல்லது செய்யும் சண்டை போடும் கதாநாயகன் தமிழ் சினிமாவில் அதிகம் உண்டு. ஆனால் சிவாஜி கணேசன் போல வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாநாயகர்கள் சினிமாவில் குறைவுதான்.

முதல் படத்தில் அறிமுகமாகும் பொழுது அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானவர் நடிகர் சிவாஜி கணேசன். அவரது முதல் படமான பராசக்தி திரைப்படத்தில் அவரை கதாநாயகனாக போடுவதற்கே ஏவிஎம் நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லை. அவரால் நன்றாக நடிக்க முடியாது என்று அவர்கள் நினைத்தனர்.

ஆனால் அவர் நடித்து வெளியான பிறகு பராசக்தி (Parasakthi Movie) பெரும் வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் தற்சமயம் நடந்து வரும் அமீர் ஞானவேல் ராஜா பிரச்சனை குறித்து இயக்குனர் பேரரசு ஒரு பேட்டியில் பேசும்பொழுது சிவாஜியை கார்த்தியுடன் இணைத்து பேசியிருந்தார்.

அதாவது தமிழ் சினிமாவிலேயே சிவாஜிக்கு பிறகு முதல் படத்திலேயே பெரிய ஹிட் கொடுத்த நடிகர் என்றால் அது கார்த்தி தான் அப்படி ஒரு வெற்றியை அவருக்கு அளித்தது இயக்குனர் அமீர் தான் எனவே அமீரை ஞானவேல் ராஜா தவறாக பேசுவது எந்த விதத்திலும் சரி கிடையாது என்று பேசியுள்ளார் பேரரசு. இது குறித்து பதிலளித்து வரும் நெட்டிசன்கள் எப்படி இருந்தாலும் கார்த்தியை சிவாஜி கணேசன் உடன் ஒப்பீடு செய்வது என்பது கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்று பேசி வருகின்றனர்.