பராசக்தி பேர் யாருக்கு..? எஸ்.கேவை ரவுண்ட் கட்டும் விஜய் ஆண்டனி.!

அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் ஒவ்வொரு திரைப்படத்தையுமே பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வருகிறார். இந்த நிலையில் வரிசையாக தமிழில் வெற்றி வாகை சூடிய இயக்குனர்கள் படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

அப்படியாக தற்சமயம் ஏற்கனவே இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து அடுத்து சுதா கொங்காரா இயக்கத்தில் அவர் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியானது.

இந்த படத்திற்கு பராசக்தி என பெயரிடப்பட்டுள்ளது என ஏற்கனவே பேச்சுக்கள் இருந்தது. அதனை டைட்டில் டீசரும் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் படத்திற்கு பராசக்தி என பெயரிடப்பட்டுள்ளது குறித்து ஏற்கனவே சில சர்ச்சைகள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் இந்த டைட்டிலுக்காக போட்டி போட்டு களம் இறங்கி இருக்கிறார். தற்சமயம் விஜய் ஆண்டனி நடித்து இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் சக்தி திருமகன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் தெலுங்கு, கன்னடம் மாதிரியான மற்ற மொழிகளிலும் வெளியாகிறது. ஆனால் மற்ற மொழிகளில் இந்த படத்திற்கு பராசக்தி என்று பெயரிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படமும் மற்ற மொழிகளில் பராசக்தி என்கிற பெயரிலேயே வெளியாக இருக்கிறது.

தமிழில் பராசக்தி என்கிற பெயருக்கான காப்புரிமையை எஸ்.கேவின் படக்குழு வாங்கியுள்ளது. ஆனால் மற்ற மொழிகளில் விஜய் ஆண்டனியின் படக்குழு வாங்கியுள்ளது. இதனால் இப்போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.