Tag Archives: ரவி மோகன்

மனைவியை கலாய்ச்சு முதல் படம்.. ரவி மோகன் செய்த சம்பவம்..!

நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே விவாகரத்து ஆன பிறகு ரவி மோகன் துவங்கிய நிறுவனம்தான் அவருடைய தயாரிப்பு நிறுவனம்.

இந்த நிலையில் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் படமாக ப்ரோ கோட் என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் ரவி மோகன் எஸ்.ஜே சூர்யா அர்ஜுன் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

கார்த்திக் யோகி இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் படத்தின் கதையின் சாரா அம்சமானது கணவர்களை கொடுமைப்படுத்தும் மனைவிகளை அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது.

இப்போதைய காலகட்டங்களில் நிறைய பெண்கள் ஆண்களை அதிக அடக்குமுறைக்கு உள்ளாக்குகின்றனர். அப்படியான அடக்குமுறைகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் மூன்று ஆண்கள் அந்த திருமண வாழ்க்கையை விட்டு வெளிவருவதற்கு செய்யும் விஷயங்களை அடிப்படையாக வைத்து பாடத்தின் கதைகளம் செல்வதாக தெரிகிறது.

இந்த படத்தின் ப்ரோமோ தற்சமயம் வெளியாகி இருக்கிறது ரவி மோகனுக்கும் ஆர்த்திக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு தான் அவர்கள் பிரிவை சந்தித்தனர். எனவே ஆர்த்தியை குறிப்பிடும் விதத்தில் தான் இந்த படத்தின் கதை அம்சத்தை அமைத்திருக்கிறார் ஜெயம் ரவி என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

புது இயக்குனர்களுக்கு கண்டிப்பா ஹெல்ப் பண்ணும்.. ரவி மோகன் கொடுத்த அப்டேட்.!

தமிழில் அதிக பிரபலமாக இருந்த நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் ரவி மோகன் இருந்து வருகிறார். இவர் நடித்த ஜெயம் திரைப்படத்திலிருந்து ரவி மோகனுக்கு அதிகமான வரவேற்பு என்பது இருந்து வந்தது.

தொடர்ந்து அவர் தேர்ந்தெடுத்த கதைக்களங்களும் வித்தியாசமானதாக இருந்தது. தொடர்ந்து அதனால் மார்க்கெட் குறையாத ஒரு நடிகராக இருந்து வந்தார் ரவி மோகன்.

ஆனால் சமீபகாலமாக அவரது திரைப்படங்கள் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. குடும்ப வாழ்க்கையிலும் கூட ரவி மோகனுக்கு சுமூகமான விஷயமாக அமையவில்லை.

இதனை தொடர்ந்து ரவி மோகன் அடுத்து திரைப்படங்களை தயாரிப்பதன் மீது கவனம் காட்டி வருகிறார். இந்த நிலையில் ரவி மோகன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் அவர் கூறிய விஷயங்கள் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கும் விதமாக இருக்கின்றன. தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய உடனே நிறைய திரைப்படங்களுக்கு வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது நல்ல கதையை வைத்திருக்கும் சின்ன சின்ன இயக்குனர்களுக்கு கூட ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம் உதவி செய்யும் என்று கூறியிருக்கிறார்.

மேலும் தற்சமயம் பத்துக்கும் அதிகமான திரைப்படங்களுக்கு வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார். அதே மாதிரி ஆன்லைன் வெப் தொடர்களையும் உருவாக்கி வருகிறார். இது இல்லாமல் நடிகர் யோகி பாபுவை வைத்து திரைப்படங்களை இயக்க இருக்கிறார் ரவி மோகன்.

ரவி மோகன் உதவிக்கு வந்த கார்ப்பரேட்டுகள்.. சொந்த காலில் நிற்க இதுதான் காரணம்..!

தனது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து ஆன பிறகு ரவி மோகன் கோவாவிற்கு சென்று செட்டில் ஆகிவிட்டார்.

திரைப்படங்கள் நடிப்பதற்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வந்தவண்ணம் இருக்கிறார். இந்த நிலையில் அதற்குப் பிறகு ரவி மோகனின் கதை தேர்ந்தெடுப்புகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.

முக்கியமாக கதை அம்சங்கள் நன்றாக இருந்தால் மட்டுமே பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ரவி மோகன். இந்த நிலையில் அடுத்த திரைப்படங்களை தயாரிக்கவும் இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து ரவி மோகன் ஒரு திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மனைவியுடன் பிரிவு ஏற்பட்ட பிறகு ரவி மோகனிடம் அதிகமாக காசு இல்லை என்று தான் பேச்சுக்கள் இருந்தன.

அப்படி இருக்கும்பொழுது எப்படி படம் தயாரிக்கிறார் என்று பலருக்குமே கேள்விகள் இருந்தது. அதற்கு காரணம் என்னவென்றால் ரவி மோகனுக்கு நிறைய கார்ப்பரேட் நண்பர்கள் இருக்கின்றனர். அவர்கள் தான் இப்பொழுது திரைப்படங்களை தயாரிப்பதற்கு முன் வந்து இருக்கின்றனர்.

அவர்களுடன் பார்ட்னர்ஷிப் போட்டுதான் ரவி மோகன் திரைப்படங்களை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

வி ஷேப்பில் ரசிகர்களை கிறங்கடிக்கும் கெனிஷா.. லேட்டஸ்ட் பிக்ஸ்

நடிகர் ரவி மோகனின் காதலி என்று பரவலாக பத்திரிகைகளில் பேசப்படுபவர் தான் கெனிஷாவும் ரவி மோகனும், வெகு காலங்களாக காதலில் இருந்து வந்ததாகவும் அதனால் தான் அவர் விவாகரத்து பெற்றதாகவும் இப்பொழுதும் ஒரு பேச்சு வந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் இதை ஜெயம் ரவி ஏற்கவில்லை. கெனிஷாவும் அவரும் நண்பர்களாக பழகுவதாகதான் அவர் கூறியுள்ளார். இருந்தாலும் கூட சமீபத்தில் ஐசரி கணேஷ் வீட்டு திருமணத்திற்கு வரும்பொழுது ரவி மோகன் கெனிஷாவுடன் வந்தது அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதற்கு தகுந்தார் போல ஜெயம் ரவியும் தற்சமயம் கோவாவில் தான் செட்டில் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் கெனிஷா இப்பொழுது நடிகைகள் மாதிரி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அப்படியாக அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இப்பொழுது அதிக வைரல் ஆகி வருகிறது.

 

 

ஜெயம் ரவி இயக்கத்தில் யோகி பாபு அடுத்து வர இருக்கும் காம்போ..!

விவாகரத்துக்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி நிறைய புது முயற்சிகளை எடுக்கத் தொடங்கி இருக்கிறார். கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்க ஒப்பு கொண்டிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் பராசக்தி திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக ஜெயம் ரவி நடிக்கிறார். அதே மாதிரி அவருடைய தயாரிப்பிலும் இயக்கத்திலும் படங்கள் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஜெயம் ரவியின் தயாரிப்பில் இரண்டு திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வருமென்று பேச்சுக்கள் இருக்கின்றன. அதேபோல யோகி பாபுவை வைத்து ஒரு திரைப்படத்தை ஜெயம் ரவியே இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை இருந்த ஜெயம் ரவியில் இருந்து மொத்தமாக மாறுபட்ட ஒரு ஜெயம் ரவியை இனி திரையில் பார்க்கலாம் என்றும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் இருக்கின்றன.

குழந்தைகள் மீது இருவருக்குமே அக்கறையில்லை.. ஜெயம் ரவி ஆர்த்தி குறித்து சாடிய பிரபலம்.!

சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வீட்டின் திருமண விழாவில் ஜெயம் ரவி பாடகி கெனிஷாவுடன் வந்திருந்தார். இது ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து குறித்த பேச்சுக்களை மீண்டும் துவக்கி வைத்து இருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி பேசியிருந்தார். அதில் அவர் கூறும்பொழுது பிரபலங்கள் என்றாலே அவர்களுக்கு குடும்பத்தை பார்த்துக் கொள்வதில் சிரமங்கள் இருக்க தான் செய்யும். எல்லா பிரபலங்களுமே இந்த சிக்கலை சந்திக்கின்றனர்.

இந்த நிலையில் விவாகரத்து என்பதும் நடந்து விடுகிறது. விவாகரத்து என்பதே அவர்கள் இரண்டு பேருக்கும் உள்ளே மட்டும் நடக்கக் கூடிய ஒரு விஷயம் திரையுலகை சேர்ந்தவர்களுக்கு அந்த திரையுலகம் என்பதே மிகப் பெரிய போராட்டமாக இருக்கிறது.

jayam ravi

குடும்பம் தூக்கம் என பலவற்றையும் மறந்து தங்களுக்கான இடத்தை சினிமாவில் பிடிப்பதற்காக அவர்கள் அதிகமாக போராட வேண்டி இருக்கிறது. இதனால் அவர்களால் குடும்பத்தை கவனிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இதுதான் ஜெயம் ரவி ஆர்த்தி விஷயத்திலும் நடந்தது.

அதன் பிறகு சமூக ஊடகங்கள் இதை பெரிதாக பேச துவங்கியது. ஜெயம் ரவி ஆர்த்தி இருவருமே இப்படி சண்டை போட்டுக் கொள்வது அவர்களது குழந்தைகளை தான் மிகவும் பாதிக்கும். இவர்கள் இருவருமே படித்தவர்கள் தான் அவர்களது துறையில் வளர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு சொல்லிக் கொண்டே இருக்கின்றனர் என்று இது குறித்து பேசி இருக்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி.

கெனிஷாவுக்காக ரவி மோகன் செஞ்ச அந்த விஷயம்.. இவ்வளவு நாள் தெரியலையே..!

ஒரு காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக இருந்தவர் நடிகர் ரவி மோகன். பெரும்பாலும் இவர் நடிக்கும் படங்கள் என்றாலே பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்கிற அளவில் இருந்தார் ரவி மோகன்.

ஆனால் சமீப காலங்களாக அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் ஒன்றும் அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை. தொடர்ந்து அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் பெரிதாக வரவேற்பை பெறாத சூழல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்து கதைகளங்களை தேர்ந்தெடுப்பதில் இவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கு நடுவே ரவி மோகனின் சொந்த வாழ்க்கை குறித்த விஷயங்கள் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன. அந்த வகையில் ஆர்த்தி மற்றும் ரவி மோகனின் விவாகரத்து குறித்த விஷயங்கள் அதிகமாக பேசப்பட்டு வந்தது.

அதற்கு பிறகு பாடகி கெனிஷாவுக்கும் ரவி மோகனுக்கும் இடையே உறவு இருப்பதாக பேச்சுக்கள் இருந்தன. இதனை தொடர்ந்து ரவி மோகன் இதற்கு விளக்கம் கொடுத்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வீட்டு திருமணத்திற்கு ரவி மோகன் கெனிஷாவுடன் ஜோடியாகவே வந்திருந்தார்.

இதுக்குறித்து பத்திரிக்கையாளர் அந்தணன் கூறும்போது கெனிஷாவுக்காக ரவி மோகன் கோவாவில் ஒரு வீடே கட்டி கொடுத்துள்ளார் என அவர் கூறியிருப்பது இப்போது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ரவி மோகன் விவாகரத்துக்கு இந்த படம்தான் காரணமா.. வெளியான விஜய் சேதுபதி பட அப்டேட்.!

தமிழ் சினிமாவில் நிறைய நல்ல நல்ல திரைப்படங்கள் பெரிய நடிகர்களின் கைக்கு போய் பிறகு சில காரணங்களால் கை மாறி உள்ளது. அப்படியாக ரவி மோகன் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருந்தார்.

அந்த திரைப்படத்தின் கதைக்கூட அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாக அப்போது பேச்சுக்கள் இருந்தன. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் அவருக்கு அதிக சம்பளத்தை பேசினாராம் அவரது மாமியார். அது தயாரிப்பாளருக்கு ஒத்து வரவில்லை என அவர்கள் ஹீரோவை மாற்றிவிட்டனர்.

இதுக்குறித்து அப்போதே பேச்சுக்கள் இருந்தன. இதனால் ஜெயம் ரவி தனது மாமியாருடன் சண்டையில் இருந்தார் என்றும் பேச்சுக்கள் இருந்தன. தற்சமயம் அந்த திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. அந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு தலைவன் தலைவி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இயக்குனராக களம் இறங்கும் ரவி மோகன்.. ஹீரோ யார் தெரியுமா?.

நடிகர் ரவி மோகன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சில காலங்களாகவே அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிகமாக வரவேற்புகளே கிடைக்காமல் இருந்து வருகின்றன

பெரும்பாலும் இவரது நடிப்பில் வரும் திரைப்படங்களில் கதைதான் சரியில்லை என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. இதனை தொடர்ந்து அவர் நடித்த ப்ரதர், சைரன் போன்ற எந்த திரைப்படமும் பெரிய வெற்றி என்று எதையும் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் அடுத்து சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் நடிகர் ரவி மோகன். அதற்கு பிறகு அவர் தேர்ந்தெடுத்திற்கும் திரைப்படங்களும் முக்கியமான கதை அம்சத்தை கொண்டவை என கூறப்படுகிறது.

இதற்கு நடுவே ரவி மோகனுக்கு திரைப்படங்களை இயக்குவதிலும் ஆர்வம் இருந்து வருகிறது. அடுத்து ஒரு திரைப்படத்தையும் இவர் இயக்க போகிறார் என பேச்சுக்கள் இருந்து வந்தன. அதனை தொடர்ந்து அடுத்து நடிகர் யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து ஜெயம் ரவி ஒரு திரைப்படத்தை இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்சமயம் யோகி பாபு பிஸியாக இருப்பதால் தாமதமாகதான் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என பேச்சுக்கள் இருக்கின்றன.

டாடா இயக்குனரின் அடுத்த படைப்பு.. ஆளுங்கட்சியை சாடும் ரவி மோகனின் கராத்தே பாபு.!

சமீப காலங்களாகவே நடிகர் ரவி மோகனுக்கு பெரிதாக வெற்றி படங்கள் என்று எதுவுமே அமையவில்லை. இறுதியாக அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படம் என்றால் அது பொன்னியின் செல்வன் திரைப்படம்தான். அதுவும் பல நட்சத்திரங்கள் நடித்த திரைப்படம் என்பதால் அதை ரவி மோகனின் வெற்றி படமாக எடுத்துக்கொள்ள முடியாது.

ஆனால் அதற்கு பிறகு வெளிவந்த அகிலன், இறைவன்,சைரன் மாதிரியான படங்கள் எல்லாம் அவருக்கு வெகுவாக தோல்வியை ஏற்படுத்தி கொடுத்தன. சமீபத்தில் வெளியான ப்ரதர் திரைப்படம் கூட பெரிய வெற்றியை பெற்று தரவில்லை.

அதனை தொடர்ந்து இனி நடிக்கும் திரைப்படங்களின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார் ரவி மோகன். அந்த வகையில் அடுத்து சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார்.

தற்சமயம் இவர் தனது பெயரை ரவி மோகன் என மாற்றிய நிலையில் டாடா திரைப்படத்தை இயக்கி வெற்றி கொடுத்த இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கராத்தே பாபு என்கிற திரைப்படத்தில் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தின் டீசர் தற்சமயம் வெளியானது. அதனை வைத்து பார்க்கும்போது ஆர்.கே நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக ரவி மோகன் இருக்கிறார். அவரது பெயர் முன்பு கராத்தே பாபு என இருந்துள்ளது. பிறகு அரசியலுக்கு வந்த பிறகு அவர் பெயரை மாற்றி வைத்துள்ளார்.

இதில் வரும் முதலமைச்சர் கதாபாத்திரம் தமிழ் மீது பற்றுள்ளதாக இருக்கிறது. எனவே படத்தில் ஆளுங்கட்சியைதான் வம்பிழுத்து உள்ளனர் என்கின்றனர் ரசிகர்கள்.

மேலும் நான் என் பெயரை மாற்றியுள்ளேன் என கூறும் போது ஜெயம் ரவி என்கிற பெயர் ரவி மோகன் என மாறுகிறது. இதன் மூலம் தனது பெயர் மாறியதையும் ரவி மோகன் சூசகமாக உணர்த்தியுள்ளார்.

 

 

 

இந்த படமாச்சும் ரவி மோகனை காப்பாத்துச்சா.. காதலிக்க நேரமில்லை முதல் நாள் வசூல் ரிப்போர்ட்.!

கடந்த சில வருடங்களாகவே நடிகர் ரவி மோகனுக்கு தொடர்ந்து சொல்லி கொள்ளும் வகையில் வெற்றி படங்கள் என எதுவும் அமையவில்லை.

அவர் சமீப காலமாக நடித்த அகிலன், இறைவன், சைரன் மாதிரியான எந்த படங்களுமே அவருக்கு வரவேற்பை பெற்று தரவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ப்ரதர் என்கிற திரைப்படத்தில் நடித்தார் ரவி மோகன்.

பொதுவாக ராஜேஷ் நன்றாக காமெடி திரைப்படங்கள் எடுக்க கூடியவர்தான். அவர் இயக்கும் படங்களுமே நல்ல வெற்றியைதான் கொடுக்கும். ஆனால் ப்ரதர் திரைப்படத்தை பொறுத்தவரை அதில் காமெடி காட்சிகளே பெரிதாக இல்லை. முழுக்க முழுக்க சீரியஸான கதையாக இருந்தது.

இதனால் இந்த படத்திற்கு பெரிதாக வரவேற்புகள் கிடைக்கவில்லை.இந்த நிலையில் அடுத்து இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன் நடித்த திரைப்படம் காதலிக்க நேரமில்லை.

இந்த திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இதற்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன. இதற்கு நடுவே பொங்கல் என்பதால் கண்டிப்பாக படத்திற்கு அதிக வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் நேற்று 2.35 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

வசூல் ரீதியாக இது குறைவு என்றாலும் கூட இந்த மாதம் விடுமுறை நாட்கள் அதிகமாக இருப்பதால் இந்த படத்திற்கு நிறைய வரவேற்புகள் கிடைக்கலாம் என பேச்சுக்கள் இருக்கின்றன.