கடனை அடைக்காத ரவி மோகன்.. வங்கி எடுத்த அவசர முடிவு..!
தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரவி மோகன். ரவி மோகன் நடிக்கும் பெரும்பாலான படங்களுக்கு நல்ல வரவேற்பு என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில் ரவிமோகன் அவருடைய விவாகரத்துக்கு பிறகு பொருளாதார ரீதியாக நிறைய பிரச்சினைகளை சந்தித்து வந்து கொண்டு இருக்கிறார்.
இதற்கு நடுவே திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார் பெரும்பாலும் வெளியில் கடன் வாங்கிதான் இவற்றை செய்து வருவதாக பேச்சுக்கள் இருக்கின்றன.
இந்த நிலையில் அவர் வங்கியில் வாங்கிய கடன் குறித்து சமீபத்தில் சில செய்திகள் வெளியாகி இருக்கின்றன. சென்னையில் ஈசிஆரில் ஜெயம் ரவி தனக்கென்று ஒரு சொகுசுபங்களா வைத்திருக்கிறார்.
வங்கியில் கடன் வாங்கிதான் இந்த பங்களாவை அவர் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபகாலமாக அவர் கடனை சரியாக செலுத்தாத காரணத்தினால் அந்த பங்களாவை ஜப்தி செய்வதற்கான நோட்டீசை ரவிமோகனுக்கு அனுப்பி இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.