சர்காருக்கு முன்பு விஜய்க்கு எழுதுன கதை.. உண்மையை கூறிய ஏ.ஆர் முருகதாஸ்..!

நடிகர் விஜய்யை வைத்து தொடர்ந்து மூன்று திரைப்படங்களை வெற்றி படங்களாக கொடுத்தவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். அவர் விஜயை வைத்து முதலில் இயக்கிய துப்பாக்கி திரைப்படம் தீவிரவாதம் குறித்து பேசும் திரைப்படமாக இருந்தது.

அந்த திரைப்படம் வசூலில் பெரும் சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து ஹிந்தியிலும் இந்த திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டது. தொடர்ந்து வெளி வந்த கத்தி திரைப்படம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை பேசக்கூடிய ஒரு திரைப்படமாக இருந்தது.

அரசியல் சார்ந்து இந்த திரைப்படத்தில் மிக குறைவாக தான் பேசி இருப்பார்கள். ஆனால் மூன்றாவதாக வந்த சர்க்கார் திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு அரசியல் திரைப்படமாக அமைந்தது. இந்த நிலையில் சர்க்கார் திரைப்படத்தின் கதை எழுதிய அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ்.

அதில் அவர் கூறும் பொழுது ஆரம்பத்தில் சர்க்கார் திரைப்படத்தின் திரைப்படத்திற்கு கமிட் ஆவதற்கு முன்பு விஜய்க்கு எழுதிய கதை என்பதே வேறு. அந்த படத்தின் கதைப்படி கதாநாயகன் ஒரு அகதியாக இலங்கையில் இருந்து வந்து சில நாடுகளுக்கு பயணம் செய்வான். 

அவன் செய்யும் பயணமே படத்தின் கதையாக இருக்கும். அந்த படத்தில் நகைச்சுவை சண்டை என்று எதுவுமே இருக்காது இந்த கதையை நான் விஜய்யிடம் சொன்ன போது அவர் அதை எடுக்க ஒப்புக்கொண்டார்.

ஆனால் கதை டிஸ்கஷன் போகும் பொழுது பல்வேறு நபர்கள் அந்த கதை வேண்டாம் என்று கூறிவந்தனர் பிறகு விஜய் ரமணா மாதிரி ஒரு படம் பண்ணலாமா என்று கேட்டார். அதற்கு பிறகு தான் சர்க்கார் திரைப்படத்தின் கதையை எழுதினேன் என்று கூறியிருக்கிறார் ஏ.ஆர் முருகதாஸ்.