துவங்கும் கல்கி படத்தின் இரண்டாம் பாகம்.. சிக்கலில் சிக்கிய கமல்ஹாசன்..!

விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடிக்க துவங்கி இருக்கிறார்.

இப்படியாக அவர் நடித்த பேன் இந்தியா திரைப்படம்தான் கல்கி 2898 AD. கல்கி 2898 AD திரைப்படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.

முதல் பாகத்தை பொருத்தவரை கமல்ஹாசனுக்கு பெரிதாக காட்சிகள் என்று எதுவும் இல்லை. குறைவான அளவில் தான் காட்சிகள் இருந்தது ஆனால் இரண்டாம் பாகத்தில் இவருக்கு அதிக காட்சிகள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏனெனில் கல்கி அவதாரத்திற்கும் கமல்ஹாசனுக்கும் இடையே நேரடி யுத்தம் இந்த படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அக்டோபர் மாத துவக்கத்தில் கல்கி 2898 AD இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் துவங்க இருக்கின்றன.

இதற்கு நடுவே அன்பறிவு இயக்கத்தில் கமல்ஹாசன் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அந்த படத்தின் படப்பிடிப்பும் துவங்க இருக்கிறது எனவே இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடிக்கக்கூடிய சிக்கலில் இப்பொழுது சிக்கி இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.