இயக்குனர் ஆவரதுலாம் ஒரு விஷயமே இல்லை.. சினிமால வேற ஒன்னுதான் முக்கியம்.. லோகேஷ் ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிவாகை சூடிவரும் இயக்குனராக இருந்தாலும் கூட தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்பு என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் முன்பு எடுத்த திரைப்படத்தை விட அதிக வசூல் கொடுக்கும் இன்னொரு திரைப்படத்தை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு லோகேஷ் கனகராஜ் தள்ளப்படுகிறார். இந்த நிலையில் அடுத்தது கைதி 2 மற்றும் விக்ரம் 3 ஆகிய திரைப்படங்களை இயக்க வேண்டிய பொறுப்பும் லோகேஷ் கனகராஜுக்கு இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஒரு இயக்குனராவது எப்படி என்பது பற்றி லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவர் கூறும்பொழுது ஒரு இயக்குனராவது என்பது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது.

இரண்டு நிமிடமோ மூன்று நிமிடமோ அல்லது மூன்று மணி நேரமோ ஒரு கதையை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று நினைத்து படமாக்கி அதை மக்களிடம் ஒப்படைத்து விட்டாலே நீங்கள் ஒரு இயக்குனர் தான். அந்த படம் எப்படி இருக்கிறது அது நிறைய வசூல்களை கொடுத்ததா? இதெல்லாம் விஷயமே கிடையாது.

நீங்கள் எதை சொல்ல நினைத்தீர்களோ? அதை மக்களிடம் சொல்லி விட்டீர்கள் அதை செய்து விட்டாலே ஒரு நபர் இயக்குனர்தான் ஆனால் அதையெல்லாம் தாண்டி பொறுப்புகள் என்று சில விஷயங்கள் ஒரு இயக்குனருக்கு உண்டு. இந்த பொறுப்புகளையும் கடமைகளையும் அவர்கள் படமெடுக்கும் பொழுது பின்பற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.