ஏற்கனவே பிரச்சனையில் இருக்கும் தயாரிப்பாளர்… அஜித் கேட்ட சம்பளத்தால் ஆடிப்போன சம்பவம்.!

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் அஜித் இருந்து வருகிறார். பெரும்பாலும் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே அதற்கு என்று தனிப்பட்ட ஒரு ரசிக்கப்பட்டாளம் இருக்க தான் செய்கிறது.

அதனால் அஜித்தின் சம்பளம் என்பதும் தமிழ் சினிமாவில் அதிகமாக இருக்கிறது. தற்சமயம் தமிழில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகர்கள் என்ற லிஸ்ட் எடுத்தால் அதில் ஒருவராக அஜித் இருப்பார்.

இந்த நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் திரைப்படத்திலேயே அடுத்து நடிக்க இருக்கிறார் நடிகர் அஜித். இதற்கு நடுவே தெலுங்கு இயக்குனரான தில்ராஜ் ஒரு திரைப்படம் தயாரிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்.

ஆனால் அதில் பிரச்சனை என்னவென்றால் தொடர்ந்து இரண்டு திரைப்படங்கள் தில்ராஜ்க்கு பெரிய வெற்றியை கொடுக்காமல் போய்விட்டது. விஜய் நடிப்பில் தில்ராஜ் தயாரித்த திரைப்படம் வாரிசு இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான ஒரு வெற்றியை கொடுக்கவில்லை.

அதே மாதிரி இயக்குனர் சங்கர் இயக்கத்தில் தில்ராஜ் தயாரித்த திரைப்படம் கேம் சேஞ்சர் அந்த திரைப்படமும் நல்ல வெற்றியைப் பெற்று கொடுக்கவில்லை.

இந்த நிலையில் நடிகர் அஜித் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் அந்த சம்பளத்தை கொடுத்தால் தான் அவரை வைத்து படம் தயாரிக்க முடியும் என்கிற நிலை தில் ராஜ்க்கு ஏற்பட்டுள்ளது எனவே அது குறித்து இப்போது அவர் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.