ஜனநாயகன் படத்தின் முதல் பாடல்.. வெளியான ரிலீஸ் அப்டேட்.!
தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் திரைப்படங்களில் முக்கியமான திரைப்படமாக ஜனநாயகன் இருந்து வருகிறது. நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம்தான் சினிமாவில் அவர் நடிக்கும் கடைசி திரைப்படம் ஆகும்.
இந்த திரைப்படம் தெலுங்கு திரைப்படமான பகவந்த் கேசரி திரைப்படத்தின் ரீமேக் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தாலும் இப்போது வரை படக் குழு அதற்கு அதிகாரபூர்வமாய் எந்த ஒரு தகவலையும் கொடுக்கவில்லை.
ஆனாலும் படத்தின் டீசர் வெளியான பொழுதும் அது பகவத் கேசரி படத்தோடு ஒத்துப் போவதாக பேச்சுக்கள் இருந்தன. இந்த நிலையில் இந்த படம் எப்படியும் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய வசூல் கொடுக்கும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் எல்லா திரைப்படங்களிலும் நடிகர் விஜய் ஒரு பாடலை மட்டும் அவர் பாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் ஜனநாயகன் திரைப்படத்திலும் ஒரு பாடல் விஜய் பாடி இருக்கிறார்.
இந்த பாடல் ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது தீபாவளியை டார்கெட் செய்து இந்த பாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது எனவே தீபாவளியை முன்னிட்டு அடுத்த மாதத்தில் கண்டிப்பாக ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் சிங்கள் பாடல் வெளியாகும் என்று ஒரு சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.