Tag Archives: rajinikanth

ரஜினிக்காக நடிக்க இருந்த படம்.. பாலா நடிக்கிறார். வெளிவந்த அப்டேட்..!

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகர் பாலா. அதற்குப் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரை இன்னும் அதிக பிரபலம் ஆக்கியது அதனை தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

kpy-bala-

சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டே பலருக்கும் நன்மைகளையும் செய்து வந்தார். அதனை தொடர்ந்து சினிமா வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பாலாவிற்கு அதிக வரவேற்பு கிடைத்த துவங்கியது.

சமீபத்தில் கூட இளையராஜா பாலா தொடர்ந்து மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்வதை புகழ்ந்து பேசி இருந்தார். இந்த நிலையில் பாலா கதாநாயகனாக காந்தி கண்ணாடி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலரும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் கூறும் பொழுது முதலில் இந்த கதையை எழுதும்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்காகத்தான் எழுதினேன்.

எந்த ஒரு ஆரம்ப இயக்குனர்களுக்குமே தமிழில் இருக்கும் பெரிய நடிகர்களை வைத்து படம் பண்ண வேண்டும் என்கிற ஆசை இருக்கும் அந்த ஆசையில் தான் நானும் இந்த கதையை எழுதினேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

 

ப்ளாக் பஸ்டர் வெற்றி கொடுத்த கூலி திரைப்படம்… இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் கூலி.

கூலி திரைப்படம் எக்கச்சக்க வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கி இருந்தது. அதனாலேயே படம் வெளியான முதல் நாளிலேயே உலக அளவில் 151 கோடி ரூபாய் ஹிட் கொடுத்தது.

அதனை தொடர்ந்து படம் எப்படியும் ஒரு பெரிய வசூலை கொடுக்கும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கான வசூல் என்பது குறைந்தது.

ஏனெனில் படம் கொஞ்சம் எதிர்மறையான விமர்சனங்களை சந்திக்க தொடங்கியது. இந்த நிலையில் மூன்று நாட்களில் 300 கோடி ரூபாய் வசூல் செய்தது கூலி திரைப்படம்.

அதற்குப் பிறகு அதன் வசூல் என்பது வெகுவாகவே குறைந்துவிட்டது. அதற்குப் பிறகு இத்தனை நாட்கள் ஆன பிறகு கூட 500 கோடிக்கு மேல் மட்டுமே வசூல் செய்திருக்கிறது கூலி திரைப்படம்.

ஆனால் எப்படி பார்த்தாலும் ரஜினியின் திரைப்படத்தில் கூலியும் ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்து இருக்கிறது.

 

 

 

முதல் நாள் வசூலில் விஜய்யை முந்த முடியலை.. கூலி படத்தின் தமிழ்நாட்டு வசூல் ரிப்போர்ட்..!

தமிழ் சினிமாவில் இன்னமும் இளம் நடிகர்களுக்கு போட்டி நடிகராக இருந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் திரைப்படங்கள் என்றாலே பெரும்பாலும் வசூலில் சாதனை படைத்துவிடும் என்று கூறலாம்.

அப்படியாக தற்சமயம் வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் கூலி. கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் இந்த படத்தை பேன் இந்தியா திரைப்படமாக வெளியிட்டதால் இதில் அமீர்கான், நாகார்ஜுனா என்று பல முக்கிய பிரபலங்களை நடிக்க வைத்து இருக்கின்றனர். இந்த நிலையில் கூலி திரைப்படம் தமிழ்நாடு அளவில் முதல் நாள் செய்த வசூல் என்பது விஜய் படத்தின் வசூலை முறியடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கூலி திரைப்படம் முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டும் 27 கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கிறது. இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் 20 கோடி தான் வசூல் செய்து இருந்தது.

அந்த வகையில் கூலி திரைப்படம் அதிகமாக வசூல் செய்துள்ளது என்றாலும் கூட விஜய் நடித்த கோட் திரைப்படம் முதல் நாள் 31 கோடியும் அதற்கு முன்பு வெளியான பீஸ்ட் திரைப்படம் 36 கோடியும் வசூல் செய்துள்ளது.

எனவே தமிழக வசூலை பொருத்தவரை இன்னமும் விஜய் திரைப்படத்தை மிஞ்சிய ஒரு வசூலை கூலி திரைப்படம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ரெண்டு நாடுகளில் செம ஹிட்.. கூலி செய்த சாதனை. எந்த நாடுகள் தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்று வருகிறது கூலி திரைப்படம். இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார்.

பெரும்பாலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் போதை பொருள் கடத்தல் தொடர்பான படங்களாகதான் இருக்கும். ஆனால் எந்த திரைப்படம் கொஞ்சம் மாற்றாக பொருட்களை கடத்துதல் மற்றும் உடல் உறுப்புகளை கடத்தலை அடிப்படையாகக் கொண்டு செல்கிறது.

இந்த திரைப்படம் வெளியான உடனே அதிக வரவேற்பை பெற்றது. முதல் நாளை பொறுத்தவரை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஏற்கனவே திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் ஆகி இருந்தன.

இதனை அடுத்து உலக அளவிலும் இப்பொழுது கூலி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் கூலி திரைப்படம் ஆஸ்திரேலியா மற்றும் நார்வே நாடுகளில் அதிக வரவேற்பு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அந்த நாட்டு திரையரங்குகளில் கூலி திரைப்படம் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி வருகிறதாம்.

3 நாளில் வசூலை வாரி குவித்த கூலி திரைப்படம்.. வசூல் ரிப்போர்ட்.!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த ஆக்ஸ்ட் 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்திற்கு ஏற்கனவே அதிக வரவேற்பு இருந்து வந்தது.

இந்த நிலையில் வெளியான உடனேயே கூலி திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகமாக கிடைக்க துவங்கியது. இந்த நிலையில் வெளியான கூலி திரைப்படம் அமோகமான வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த 3 நாட்களில் இந்த படம் 151 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படம் அதிகமாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

கூலி படம் எப்படி இருக்கு.. திரைப்பட விமர்சனம்..

கூலி திரைப்படம் தற்சமயம் வெளியான நிலையில் அதிகமான வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் கதையானது இதுவரை இருந்த லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களிலிருந்து வித்தியாசமான கதைக்களமாக இருக்கிறது.

கதைப்படி ரஜினிகாந்தின் நெடுநாள் நண்பராக சத்யராஜ் இருந்து வருகிறார் இந்த நிலையில் திடீரென்று ஒரு நாள் சத்யராஜ் கொலை செய்யப்படுகிறார். அதை யார் செய்தார் என யாருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில் சுருதிஹாசன் இந்த செய்தியை ரஜினிகாந்திடம் கொண்டு வருகிறார்.

யார் இதை செய்தது என்று ரஜினிகாந்த் தேடுவதில் இருந்து கதைகளம் துவங்குகிறது. சத்யராஜை கொன்றவர்கள் யார் என தேடும்போதுதான் அவர்கள் உண்மையில் தேடி வந்தது ரஜினிகாந்தை என தெரிகிறது அப்படி என்றால் ரஜினிகாந்த் யார் அவருடைய பின்புலம் என்ன என பல விஷயங்களை பேசி கதைகளும் செல்கிறது.

படத்தில் நாகார்ஜுனாவின் கதாபாத்திரம் மிக சிறப்பானதாக அமைந்து இருக்கிறது. அதே மாதிரி இதுவரை லோகேஷ் கனகராட்சி எடுத்த திரைப்படங்களில் இருந்து கூலி சில விஷயங்களில் மாறுபட்டு இருக்கிறது தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் என்றால் அவரது திரைப்படத்தில் சில விஷயங்களை பயன்படுத்துவார் என்று பேச்சுக்கள் உண்டு .

போதை பொருட்கள் மாதிரியான விஷயங்கள் குறித்த காட்சிகள் இருக்கும் என்று பேச்சுக்கள் இருந்தன ஆனால் அதையெல்லாம் தவிர்த்து இந்த திரைப்படத்தில் வித்தியாசமாக ஒன்றை முயற்சி செய்கிறார் லோகேஷ் கனகராஜ்.

ரஜினிகாந்தின் இளமை கால கதைகள் மிக சிறப்பாக அமைந்திருக்கின்றன ரஜினிகாந்த் வயதை குறைத்து காட்டுவதை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதுவும் மக்கள் மத்தியில் நல்ல பாராட்டுகளை பெற்று வருகிறது கூலி திரைப்படம்.

 

 

 

கூலி திரைப்படத்தில் நடிகர்களின் சம்பள விவரம்..! ரஜினி சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ரஜினி நடிப்பில் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் தற்சமயம் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படம் வருகிற ஆக்ஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் குறித்து அதிக வரவேற்பு இருப்பதற்கு முக்கிய காரணமே இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதுவரை வந்த ஆக்‌ஷன் திரைப்படங்கள் எல்லாமே பெருமளவில் வசூலை கொடுத்துள்ளன. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படமானது மற்ற லோகேஷ் படங்களை விடவுமே சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு தகுந்தாற் போல ஏற்கனவே கூலி படத்தை பார்த்த படத்தின் தயாரிப்பாளர் படம் குறித்து திருப்தி அடைந்துள்ளார். இந்த நிலையில் படம் பேன் இந்தியா படம் என்பதால் நிறைய நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். அவர்களின் சம்பள விவரம் இப்போது வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்திற்கு இந்த படத்திற்கான சம்பளமாக 200 கோடி பேசப்பட்டுள்ளது. 150 கோடி ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. பாக்கி 50 கோடி படத்தின் வெற்றிக்கு பிறகு கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரூபாய் 50 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

அதே போல நடிகர் அமீர்கான் இந்த படத்திற்கு 20 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். நடிகர் நாகர்ஜுனா 10 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்

நடிகர் சோபின் 1 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார். ஸ்ருதிஹாசன் மற்றும் பூஜா ஹெக்தே ரூபாய் 3 கோடி சம்பளமாக பெற்றுள்ளனர். உப்பேந்திரா ராவ் 2 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என பேச்சுக்கள் இருக்கின்றன.

பல வருஷத்துக்கு அப்புறம் அதை நான் லோகேஷ் படத்துல செஞ்சேன்.. ஓப்பன் டாக் கொடுத்த அமீர்கான்..!

பாலிவுட்டில் தொடர்ந்து ஆக்கபூர்வமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர் நடிகர் அமீர்கான். சமீபத்தில் அவரது நடிப்பில் வந்த சித்தாரே சமீபர் என்கிற திரைப்படம் கூட நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

வெறும் சண்டை காட்சிகள் கொண்ட படங்கள் என்று இல்லாமல் அமீர்கானின் கதை தேர்ந்தெடுப்புகள் என்பது மிக வித்தியாசமானதாக இருக்கும்.

அவர் நடித்த தங்கல், சீக்ரெட் சூப்பர் ஸ்டார் மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே பெண்கள் முன்னேற்றம் குறித்த கதைகளத்தை கொண்டு இருந்தது.

இந்த நிலையில் தமிழில் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தை தேர்ந்தெடுத்தது குறித்து அவர் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது கூலி திரைப்படம் குறித்து என்னிடம் லோகேஷ் கனகராஜ் பேச வந்த பொழுது படத்தின் கதையை கூட நான் கேட்கவில்லை.

ரஜினி சாரின் படம் என்று கூறியதுமே நான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். வெகு வருடங்களுக்குப் பிறகு படத்தின் கதையை கூட கேட்காமல் ஒரு திரைப்படத்தை ஒப்புக்கொண்டேன் என்றால் அது கூலி திரைப்படம்தான்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு தினமும் படப்பிடிப்புக்கு காலை நான்கு மணிக்கே வந்து விடுவாராம் அமீர்கான். இது குறித்து அவரிடம் கேட்ட பொழுது பொதுவாக படப்பிடிப்பதற்கு நான் ஒன்பது மணிக்கு தான் செல்வேன்.

ஆனால் எனது கையில் டாட்டூ குத்தப்பட்டு இருக்கும் அதனால் எனக்கு மேக்கப் போடுவதற்கு அதிக நேரம் எடுக்கும். மேலும் ரஜினி சார் எப்பொழுதும் டைமிங் இல் படபிடிப்பில் இருப்பார். எனவே அவருக்குப் பிறகு படப்பிடிப்புக்கு வருவது என்பது எனக்கு பெரிய ரிஸ்க்.

எனவேதான் நான் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு நான்கு மணிக்கு வந்து விடுவேன் என்று கூறியிருக்கிறார் அமீர்கான்.

 

 

 

ஒரு தாடிக்காக இவ்வளவு வேலையா? கூலி படத்தில் நடந்த சம்பவம்..!

கூலி திரைப்படத்தில் பாட்ஷா படத்தை போலவே ஃபிளாஷ்பேக் கதைக்களம் ஒன்று இருக்கிறது. முப்பது வருடங்களாக தேவா கதாபாத்திரம் எந்த ஒரு தவறும் செய்யாமல் கூலியாக வாழ்ந்து வந்ததாக கதைக்களம் இருக்கிறது.

அப்படி என்றால் 30 வருடத்திற்கு முன்பு அவர் என்ன செய்தார் என்கிற ஒரு கேள்வி கதையில் இன்டர்வல் வரை இருந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதற்கு பிறகு தான் தேவாவின் பழைய கதை என்பது வர இருக்கிறது. இந்த நிலையில் பழைய கதையில் தாடி எதுவும் இல்லாமல் வரும் கதாபாத்திரமாக ரஜினியின் கதாபாத்திரம் இருக்கிறதாம். ஏனெனில் இளமை காலங்களில் திரைப்படங்களில் நடிக்கும் போது ரஜினிகாந்த் தாடி வைக்காமல் வருவது போல கதாபாத்திரம் அமைந்துள்ளது .

இந்த நிலையில் இந்த பிளாஷ்பேக் கதைகளத்தில் நடிப்பதற்கு ரஜினிக்கு சிக்கலான ஒரு விஷயம் ஏற்பட்டது. அது என்னவென்றால் கூலி திரைப்படத்தில் நடித்து வரும் அதே சமயம் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் ரஜினி நடித்து வந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் தாடி வைத்ததால் ரஜினியின் ப்ளாஸ்பேக் கதாபாத்திரத்தில் நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.  இப்படி இருக்கும் பொழுது எப்படி தாடியை எடுக்க முடியும் என்று ரஜினி அதற்கு மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் தாடியோடு படப்பிடிப்பை எடுத்து அதற்குப் பிறகு கிராபிக்ஸ் முறையில் அவரது முகத்தில் இருந்த தாடியை நீக்கி இருக்கின்றனர். இதற்காக பெரிய பொருள் செலவு ஆகி இருந்தாலும் கூட திரும்ப தாடி வளர்ந்து ஜெயிலர் 2 படபிடிப்பை நடத்துவது கடினம் என்பதால் இப்படியான ஒரு முடிவை எடுத்து இருக்கின்றனர்.

இப்படி பண்ணுனா யார் படம் பார்க்க வருவாங்க.. கூலி படத்தால் மனம் நொந்த திரைப்பட ரசிகர்கள்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்சமயம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் கூலி. கூலி திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் ஏற்கனவே நிறைய எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன.

இந்த படத்திற்கு தொடர்ந்து அதிகப்படியான டிக்கெடுகள் புக்கிங் ஆகி வருகின்றன. இந்த நிலையில் கூலி திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருப்பதால் அதன் டிக்கெட் விலை அதிகமாக இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

பெரும்பாலும் பெரிய நடிகர்கள் திரைப்படங்கள் என்றாலே அவற்றின் டிக்கெட் விலையை அதிகரித்து விற்பனை செய்வது திரையரங்குகளின் வேலையாக இருக்கிறது.

அரசு நிர்ணயித்த திரையரங்க டிக்கெட் விலை என்பது 200 ரூபாய்க்கும் குறைவு தான். ஆனால் திரையரங்குகள் அந்த விதிமுறையை பின்பற்றுவது கிடையாது. அதிகாரப்பூர்வமாக டிக்கெட் விலையை 3000, 4000 என்ற விலைக்கு விற்க முடியாது.

தமிழ்நாட்டில் இந்த கட்டுப்பாடு இருப்பதால் பெங்களூர் திரையரங்குகள் அந்த மாதிரி அதிக விலைக்கு விற்பதை பார்க்க முடியும். தமிழ்நாடு திரையரங்குகளை பொருத்தவரை அதிகாரப்பூர்வமாக இல்லாமல் தான் இந்த விலைக்கு விற்கிறார்கள்.

கூலி திரைப்படத்தைப் பொறுத்தவரை நிறைய திரையரங்கங்கள் ஆன்லைன் புக்கிங் இல் ஏற்கனவே முழுமை அடைந்து விட்டதாக போட்டுவிட்டு தனியாக 3000 ரூபாய்க்கு டிக்கெட்களை விற்பனை செய்வதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

இது திரை ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது இது குறித்து அரசும் கவனம் செலுத்தாமல் இருக்கிறது என்பது அவர்களுக்கு கவலையாக இருக்கிறது.

கூலி படத்தில் பா.ஜ.க செய்த சதி..! ரஜினி சும்மா இருக்க மாட்டார்.. பத்திரிக்கையாளர் கொடுத்த அப்டேட்.!

ரஜினி நடித்து தற்சமயம் வெளியாக இருக்கும் திரைப்படமான கூலி திரைப்படம் தணிக்கை குழுவால் ஏ சான்றிதழ் பெற்று இருக்கிறது பொதுவாக ஏ சான்றிதழ் பெரும் திரைப்படங்களை 18 வயதிற்கு மேலானவர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்ற தகுதி பெற்ற படமாக பார்க்கப்படும்.

அதற்கு கீழே வயது உள்ளவர்கள் அந்த படத்திற்கு போக முடியாது இந்தியாவில் கூட இந்த விதிமுறை பெரிதாக பின்பற்றப்படவில்லை என்றாலும் கூட அமெரிக்கா மாதிரியான நாடுகளில் இந்த விதிமுறைகள் பரவலாக பயன்பாட்டில் இருக்கின்றன.

இந்த நிலையில் எதற்காக கூலி திரைப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது குறித்து பிஸ்மி பேசி இருக்கிறார் அதில் அவர் கூறும் பொழுது ஒன்றிய அரசுதான் தொடர்ந்து திமுகவிற்கு எதிராக இருக்கிறது.

இந்த நிலையில் கூலி திரைப்படத்தை தயாரித்தது திமுக குழுமம் தான் என்பதுஅவர்களுக்கு தெரியும். எனவே தான் அவர்களை பழி வாங்குவதற்காகவே ஏ சான்றிதழை வழங்கி இருக்கின்றனர்.

ஆனால் இந்த விஷயத்திற்காக எல்லாம் ரஜினிகாந்த் வந்து பேச மாட்டார் அவருக்கு இதெல்லாம் சின்ன விஷயம். ஒரு வேலை இந்த படத்தையே தணிக்கை குழு தடை செய்து வைத்திருந்தால் அப்பொழுது ரஜினிகாந்த் கண்டிப்பாக களத்தில் இறங்கி இருப்பார் என்று கூறியிருக்கிறார் பிஸ்மி.

 

 

ரிலீஸ்க்கு முன்னாடியே லியோவை மிஞ்சிய கூலி.. இதுதான் விஷயம்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்சமயம் உருவாகியிருக்கும் திரைப்படம் கூலி. வருகிற 14-ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

கூலி திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏனெனில் முதன்முதலாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படமாக கூலி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் எப்போது ஆக்சன் திரைப்படங்களை இயக்க துவங்கினாரோ அப்போது முதலே ரஜினியை வைத்து அவர் ஒரு திரைப்படம் இயக்கினால் நன்றாக இருக்கும் என்பது மக்களது ஆசையாக இருந்தது.

அதனை நிவர்த்தி செய்யும் வகையில்தான் கூலி படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புக்கிங் ஓபன் ஆன நிலையில் தற்சமயம் முக்கால்வாசி திரையரங்குகளில் காட்சிகள் முழு புக்கிங் ஆகி இருக்கின்றன.

வெளிநாடுகளை பொறுத்தவரை அங்கும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது கூலி திரைப்படம். லியோ படம் முன்பதிவில் அமெரிக்காவில் மொத்தமாக 1.80 மில்லியன் டாலர் வசூல் செய்து இருந்தது.

ஆனால் கூலி திரைப்படம் 1.86 மில்லியன் டாலர் வசூல் செய்து அந்த சாதனையை முறியடித்து இருக்கிறது. தொடர்ந்து வசூல் சாதனையிலும் கூட லியோ படத்தை கூலி முறியடிக்கலாம் என பேச்சுக்கள் இருக்கின்றன.