தமிழ் சினிமாவில் இன்னமும் இளம் நடிகர்களுக்கு போட்டி நடிகராக இருந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் திரைப்படங்கள் என்றாலே பெரும்பாலும் வசூலில் சாதனை படைத்துவிடும் என்று கூறலாம்.
அப்படியாக தற்சமயம் வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் கூலி. கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மேலும் இந்த படத்தை பேன் இந்தியா திரைப்படமாக வெளியிட்டதால் இதில் அமீர்கான், நாகார்ஜுனா என்று பல முக்கிய பிரபலங்களை நடிக்க வைத்து இருக்கின்றனர். இந்த நிலையில் கூலி திரைப்படம் தமிழ்நாடு அளவில் முதல் நாள் செய்த வசூல் என்பது விஜய் படத்தின் வசூலை முறியடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கூலி திரைப்படம் முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டும் 27 கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கிறது. இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் 20 கோடி தான் வசூல் செய்து இருந்தது.
அந்த வகையில் கூலி திரைப்படம் அதிகமாக வசூல் செய்துள்ளது என்றாலும் கூட விஜய் நடித்த கோட் திரைப்படம் முதல் நாள் 31 கோடியும் அதற்கு முன்பு வெளியான பீஸ்ட் திரைப்படம் 36 கோடியும் வசூல் செய்துள்ளது.
எனவே தமிழக வசூலை பொருத்தவரை இன்னமும் விஜய் திரைப்படத்தை மிஞ்சிய ஒரு வசூலை கூலி திரைப்படம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.