01.யுத்தம் செய்
இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வந்து மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் யுத்தம் செய். நடிகர் சேரன் இதில் கதாநாயகனாக நடித்திருந்தார். இதில் கதைப்படி ஜே.கே என்னும் சி.பி.ஐ ஆபிசர் தனது தங்கையை காணவில்லை என தேடி கொண்டிருப்பார்.
அதன் வழியாக அவர் பல குற்றங்களை கண்டறிவதாக கதை செல்லும்.
02.நான்
நான் திரைப்படம் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த முதல் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தின் கதை அம்சமே மிகுந்த சுவாரஸ்யங்கள் நிறைந்தது.
சிறு வயதிலேயே குற்றம் செய்ததால் சிறுவர் சீர்த்திருந்த பள்ளியில் பயின்ற கார்த்திக் என்னும் நபர் தனது வாழ்க்கையை மாற்றி கொள்ள நினைக்கிறான். சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் படித்த ஒரு நபருக்கு கல்லூரியில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காது.
இந்த நிலையில் சாலையில் சலீம் என்னும் மாணவன் இறந்து கிடப்பதை ஒரு நாள் கார்த்திக் பார்க்கிறான். சலீம் ஏற்கனவே மெடிக்கல் காலேஜில் அட்மிஷன் போட்டுள்ளான். எனவே அந்த சலீம் என்கிற பெயரில் கார்த்திக் மெடிக்கல் காலேஜ்க்கு செல்கிறான்.
அங்கு தனது அடையாளத்தை மறைக்க கார்த்திக் செய்யும் விஷயங்களை வைத்து படத்தின் கதை செல்கிறது.
03. தெகிடி
நடிகர் அசோக் செல்வனுக்கு தமிழில் அதிக வரவேற்பை பெற்று தந்த படமாக தெகிடி திரைப்படம் இருந்து வருகிறது. கதையின் நாயகன் வெற்றி குற்றவியல் பயின்றுவிட்டு ஒரு துப்பறியும் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறான்.
அவர்கள் சில நபர்களின் விவரங்களை துப்பறிந்து கண்டறிய சொல்கிறார்கள். வெற்றியும் அவ்வாறே செய்கிறான். ஆனால் எதார்த்தமாக பார்க்கும்போது அவன் துப்பறிந்த நபர்கள் எல்லாமே பிறகு மர்மமான முறையில் இறந்துவிடுகின்றனர்.
பிறகுதான் தெரிகிறது. அது ஒரு துப்பறியும் நிறுவனம் இல்லை. அவர்கள் குற்றங்களை செய்து வருகின்றனர் என்று. இந்த பிரச்சனையில் இருந்து கதாநாயகன் எப்படி வெளிவருகிறார் என்பதாக படத்தின் கதை அமைந்துள்ளது.
04. இமைக்கா நொடிகள்
நடிகை நயன் தாரா அனுராக்காஷேப், அதர்வா, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரமாக நடித்த திரைப்படம் இமைக்கா நொடிகள். படத்தின் கதைப்படி ஒரு சைக்கோ கில்லர் ஒரே மாதிரியான முறையில் தொடர்ந்து கொலைகளை செய்து வருகிறான்.
சி.பி.ஐ ஆபிசரான நயன் தாரா ஏற்கனவே அந்த கில்லரை கொன்ற நிலையில் திரும்பவும் அந்த மாதிரியான கொலைகள் நடந்து வருகின்றன. அதை யார் செய்கிறாரகள் என்பதை நயன் தாரா கண்டறிவதை வைத்து கதை செல்கிறது.
05. உன்னைப்போல் ஒருவன்
நடிகர் மோகன்லால் மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி இந்திய அளவில் கவனத்தை பெற்ற திரைப்படம் உன்னைப்போல் ஒருவன்
சென்னையில் உள்ள போலீஸ் கமிஷனருக்கு திடீரென ஒரு போன் வருகிறது. அதில் பேசும் நபர் சென்னையில் வெவ்வேறு இடங்களில் குண்டுகள் வைத்துள்ளதாகவும் தான் குறிப்பிடும் ஐந்து தீவிரவாதிகளை வெளியிடவில்லை என்றால் அவை வெடிக்கும் எனவும் எச்சரிக்கிறார்.
அதனை தொடர்ந்து அந்த நபருக்கும் கமிஷனருக்கும் நடக்கும் வாக்குவாதங்களை வைத்து திரைப்படம் நகர்கிறது.