நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரையில் வெளியான திரைப்படம் குபேரா. இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கியிருந்தார்.
சேகர் கமுலா இயக்கும் முதல் தமிழ் படம் குபேரா என்று கூறலாம். தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இருவருக்கும் முக்கிய கதாபாத்திரம் இந்த படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு பிச்சைக்காரனுக்கும் ஒரு கார்ப்பரேட் முதலாளிக்கும் இடையே நடக்கும் சண்டைதான் இந்த படத்தின் கருவாக இருந்தது. ட்ரைலர் வெளியான பொழுது இந்த படத்திற்கான வரவேற்பு அதிகமாக இருந்தது.
தற்சமயம் படம் வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில் 130 கோடி வசூல் செய்து இருக்கிறது குபேரா திரைப்படம். தமிழ் மொழியை விடவும் தெலுங்கு மொழியில் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளதாக பேச்சுக்கள் இருக்கின்றன.