புது இயக்குனர்களுக்கு கண்டிப்பா ஹெல்ப் பண்ணும்.. ரவி மோகன் கொடுத்த அப்டேட்.!
தமிழில் அதிக பிரபலமாக இருந்த நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் ரவி மோகன் இருந்து வருகிறார். இவர் நடித்த ஜெயம் திரைப்படத்திலிருந்து ரவி மோகனுக்கு அதிகமான வரவேற்பு என்பது இருந்து வந்தது.
தொடர்ந்து அவர் தேர்ந்தெடுத்த கதைக்களங்களும் வித்தியாசமானதாக இருந்தது. தொடர்ந்து அதனால் மார்க்கெட் குறையாத ஒரு நடிகராக இருந்து வந்தார் ரவி மோகன்.
ஆனால் சமீபகாலமாக அவரது திரைப்படங்கள் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. குடும்ப வாழ்க்கையிலும் கூட ரவி மோகனுக்கு சுமூகமான விஷயமாக அமையவில்லை.
இதனை தொடர்ந்து ரவி மோகன் அடுத்து திரைப்படங்களை தயாரிப்பதன் மீது கவனம் காட்டி வருகிறார். இந்த நிலையில் ரவி மோகன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் கூறிய விஷயங்கள் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கும் விதமாக இருக்கின்றன. தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய உடனே நிறைய திரைப்படங்களுக்கு வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார்.
அதில் அவர் கூறும் பொழுது நல்ல கதையை வைத்திருக்கும் சின்ன சின்ன இயக்குனர்களுக்கு கூட ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம் உதவி செய்யும் என்று கூறியிருக்கிறார்.
மேலும் தற்சமயம் பத்துக்கும் அதிகமான திரைப்படங்களுக்கு வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார். அதே மாதிரி ஆன்லைன் வெப் தொடர்களையும் உருவாக்கி வருகிறார். இது இல்லாமல் நடிகர் யோகி பாபுவை வைத்து திரைப்படங்களை இயக்க இருக்கிறார் ரவி மோகன்.