நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழ் சினிமாவை விடவும் மலையாள சினிமாவில் அதிக பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். இயக்குனரும் தயாரிப்பாளருமான பிரியதர்ஷனின் மகள் தான் கல்யாணி பிரியதர்ஷன்.
தமிழில் ஹீரோ திரைப்படத்தின் மூலமாக இவர் முதன்முதலாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது சின்ன பெண்ணாக இருந்தார் கல்யாணி ப்ரியதர்ஷன்.
மேலும் அவருக்கு நடிப்பு அவ்வளவாக அந்த திரைப்படத்தில் வரவில்லை என்று தான் கூற வேண்டும். ஆனால் அதற்குப் பிறகு நடிப்பின் மீது கவனம் செலுத்தி தற்சமயம் இவரும் முக்கியமான நடிகையாக மாறி இருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.
தமிழில் அதற்குப் பிறகு மாநாடு திரைப்படத்தில் இவர் நடித்தார். தற்சமயம் அவரது நடிப்பில் லோகா என்கிற ஒரு திரைப்படம் வர இருக்கிறது. இந்த திரைப்படத்தில் முதல் பாகமான சந்திரா என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.
இந்த படத்தின் கதைப்படி அதிக சக்திகளை கொண்ட ஒரு பெண்ணாக இவர் இருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் தற்சமயம் வெளியாகி உள்ளது ட்ரைலரே பார்ப்பதற்கு ஹாலிவுட் படத்திற்கு இணையாக இருக்கிறது.
மலையாளத்தில் எப்பொழுதும் குறைந்த பட்ஜெட்டில் தான் திரைப்படங்கள் எடுக்கப்படும் இப்படி இருக்கும் பொழுது இப்படி ஒரு திரைப்படம் உருவாகி இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.