Tag Archives: மலையாள சினிமா

ஹாலிவுட்டுக்கு இணையா ஒரு சூப்பர் ஹீரோ படம்.. வெளிவந்த LOKAH CHAPTER 1: CHANDRA – Tamil Trailer

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழ் சினிமாவை விடவும் மலையாள சினிமாவில் அதிக பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். இயக்குனரும் தயாரிப்பாளருமான பிரியதர்ஷனின் மகள் தான் கல்யாணி பிரியதர்ஷன்.

தமிழில் ஹீரோ திரைப்படத்தின் மூலமாக இவர் முதன்முதலாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது சின்ன பெண்ணாக இருந்தார் கல்யாணி ப்ரியதர்ஷன்.

மேலும் அவருக்கு நடிப்பு அவ்வளவாக அந்த திரைப்படத்தில் வரவில்லை என்று தான் கூற வேண்டும். ஆனால் அதற்குப் பிறகு நடிப்பின் மீது கவனம் செலுத்தி தற்சமயம் இவரும் முக்கியமான நடிகையாக மாறி இருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.

தமிழில் அதற்குப் பிறகு மாநாடு திரைப்படத்தில் இவர் நடித்தார். தற்சமயம் அவரது நடிப்பில் லோகா என்கிற ஒரு திரைப்படம் வர இருக்கிறது. இந்த திரைப்படத்தில் முதல் பாகமான சந்திரா என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.

இந்த படத்தின் கதைப்படி அதிக சக்திகளை கொண்ட ஒரு பெண்ணாக இவர் இருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் தற்சமயம் வெளியாகி உள்ளது ட்ரைலரே பார்ப்பதற்கு ஹாலிவுட் படத்திற்கு இணையாக இருக்கிறது.

மலையாளத்தில் எப்பொழுதும் குறைந்த பட்ஜெட்டில் தான் திரைப்படங்கள் எடுக்கப்படும் இப்படி இருக்கும் பொழுது இப்படி ஒரு திரைப்படம் உருவாகி இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.

மலையாளத்தில் ஒரு வித்தியாசமான நடிகர்.. டொவினோ தாமஸின் தமிழ் டப்பிங் படங்கள்..!

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி, மணிகண்டன் மாதிரியான நடிகர்கள் எல்லாம் எப்படி வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு நடிக்கிறார்களோ அதே போல மலையாள சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பர் நடிகர் டொவினோ தாமஸ்.

பெரும்பாலும் டொவினோ தாமஸ் நடிக்கும் திரைப்படங்களின் கதைகளங்கள் என்பது மாறுப்பட்டதாக இருக்கும். அந்த வகையில் வந்த சில திரைப்படங்களை இப்போது பார்க்கலாம்.

மாரி 2:

டொவினோ தாமஸ் வில்லனாக நடித்து தமிழில் வந்த திரைப்படம் மாரி 2. இந்த திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் டொவினோ தாமஸ்.

ஆனாலும் அதற்கு பிறகும் தமிழில் இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

மின்னல் முரளி:

மின்னல் முரளி ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். மலையாளத்தில் பிரபல நடிகரான பாசில் ஜோசப் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஒரு கிராமத்தில் இடி இடித்த காரணத்தினால் குரு சோமசுந்தரம் மற்றும் டொவினோ தாமஸ் ஆகிய இருவருக்கும் சக்திகள் கிடைக்கிறது.

குரு சோமசுந்தரம் அந்த சக்திகளை தவறான வழிகளில் பயன்படுத்துகிறார். ஆனால் டொவினோ தாமஸ் அதை நல்ல விதத்தில் பயன்படுத்துகிறார். இப்படியாக அந்த கிராமத்தின் சூப்பர் ஹீரோவாக மின்னல் முரளி என்கிற பெயரில் உருவாகிறார் டொவினோ.

அவர் வில்லனை எப்படி அழிக்க போகிறார் என்பதே கதை..

தள்ளுமாலா:

தள்ளுமாலா ஒரு எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமாகும். படத்தில் பெரிதாக கதைக்களம் என எதுவும் கிடையாது. ஜாலியாக ஊர் சுற்றி கொண்டிருக்கும் ஒரு இளைஞன். எதற்கெடுத்தாலும் அவன் சண்டைக்கு சென்றுவிடுவான். இந்த நிலையில் ஒரு பெண்ணை அவன் காதலிக்கிறான். அதை வைத்து படத்தின் கதை செல்கிறது.

ஏ.ஆர்.எம்

ஏ.ஆர்.எம்  ஒரு சுவாரஸ்யமான கதைகளத்தை கொண்ட திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் வருகிறார் டொவினோ தாமஸ். முதல் தலைமுறையில் களரி வீரனாக குஞ்சிகேலு நாயனார் என்கிற கதாபாத்திரம் வருகிறது.

இந்த வீரன் ஒரு பெரிய அரசனின் மகனை காப்பாற்றுகிறான். அதற்கு ஈடாக விண்வெளியில் இருந்து எடுத்த கல்லினால் செய்யப்பட்ட அதிசய விளக்கை கேட்கிறான்.

அது இவனது கிராமத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் அவனது வம்சத்தில் வரும் மணியன் என்னும் திருடன் கதாபாத்திரத்திலும் டொவினோவே நடித்துள்ளார்.

மணியன் கிராமத்தின் ஆக சிறந்த திருடனாக இருக்கிறான். இவன் அந்த கிராமத்தில் இருக்கும் சிறப்பு விளக்கு சிலையை திருட பார்க்கிறான். அவனது பேரனாக அடுத்து அஜயன் வருகிறான்.

அஜயன் தன் தாத்தாவால் தனது தலைமுறைக்கு ஏற்பட்ட கலங்கத்தை துடைப்பதற்காக அந்த சிறப்பு விளக்கு சிலையை தேடி செல்கிறான். அந்த விளக்கின் சக்திகள் மற்றும் அதனுள் இருக்கும் புதிர்களை அடிப்படையாக கொண்டு கதை செல்கிறது.

2018

மலையாள சினிமாவில் அதிக வசூல் கொடுத்த திரைப்படங்களில் 2018 முக்கிய திரைப்படமாகும். 26 கோடிக்கு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 177 கோடி வசூல் செய்தது. 2018 ஆம் ஆண்டு கேரளாவில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தியது.

அப்போது பக்கத்து மாநிலங்கள் எல்லாம் கேரளாவுக்கு உதவி செய்தன. இந்த நிலையில் கேரளாவில் உள்ள அருவிக்குளம் என்னும் கிராமத்தில் நடக்கும் கதைதான் 2018 திரைப்படத்தின் கதை.

அனூப் என்கிற இளைஞன் இராணுவத்தில் பணிப்புரிந்துவிட்டு ஊருக்கு வருகிறான். அப்போது ஊருக்குள் வெள்ள பேரிடர் ஏற்படுகிறது. இந்நிலையில் அனூப் ஒரு சிறிய தெப்பத்தை உருவாக்கி அந்த கிராம மக்களை காப்பாற்றுகிறான்.

அதை வைத்து படத்தின் கதை செல்கிறது.

இவை எல்லாம் டொவினோ தாமஸின் நடிப்பில் நல்ல கதை அம்சத்தை கொண்ட திரைப்படங்களாக இருக்கின்றன.

ரெண்டாம் நாளே பெரும் வசூல் சாதனை.. பட்டையை கிளப்பிய எம்புரான்.!

நடிகர் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் எம்புரான். வெளியாகி 2 நாட்களே ஆகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் பெரும் வசூலை பெற்று இருக்கிறது.

ஏற்கனவே ப்ரித்திவிராஜ் இயக்கத்தில் லூசிபர் என்கிற ஒரு திரைப்படம் வெளியானது. இதில் ஸ்டீபன் என்கிற கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்திருந்தார். அதிக வரவேற்பை பெற்ற அந்த படம் பெரும் வெற்றியை கொடுத்தது.

அதனை தொடர்ந்துதான் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் திரைப்படத்தை அதிக பட்ஜெட்டில் படமாக்கினர். மலையாள சினிமாவை பொருத்தவரை அதிக பட்ஜெட்டில் திரைப்படங்கள் வருவது மிகவும் குறைவு.

ஏனெனில் மலையாள சினிமா இன்னும் தமிழ் அல்லது தெலுங்கு சினிமா அளவிற்கான வசூல் வேட்டையை பெறவில்லை. மலையாள சினிமாவில் 100 கோடி வசூல் படைத்த திரைப்படங்கள் குறைவாகதான் இருக்கின்றன.

இந்த நிலையில் படம் வெளியாகி இரண்டு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது எம்புரான் திரைப்படம். முதல் நாள் இந்த திரைப்படம் 67.5 கோடி வசூல் செய்து இருந்தது.

மொத்தமாக 100 கோடி வசூல் செய்த மலையாள படங்கள் 9 இருக்கின்றன தற்சமயம் அதில் பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது எம்புரான் திரைப்படம்.

நடிகைகளை வேட்டையாடும் 10 கேரள பிரபலங்கள்.. வெளிவந்த பகீர் உண்மைகள்!.

தென்னிந்திய சினிமாவில் இந்த அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது பல நடிகைகளும் தங்களுக்கு ஏற்பட்ட இந்த பிரச்சினையை பற்றி பேட்டியில் வெளிப்படையாக கூறி வரும் நிலையில், ஒரு சில நடிகைகள் இது போன்ற பல இக்கட்டான நிலைகளை தாண்டி தான் தற்போது சினிமாவில் பெண்கள் சாதிக்கும் படியாக இருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள்.

மேலும் சினிமா ஆரம்பித்த காலத்தில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. தற்போது மலையாள சினிமாவில் அரங்கேறி இருக்கும் இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை பற்றி தற்போது வெளிவந்திருக்கிறது. இந்த தகவல் தற்போது தென்னிந்திய சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் நடிகைகளுக்கு ஏற்படும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை

இதுபோன்ற பிரச்சனைகள் தமிழ், தெலுங்கு சினிமாவில் அதிகம் இருப்பதாக பேசப்பட்ட வந்த நிலையில், மலையாள சினிமாவில் இதுகுறித்து அவ்வளவாக யாரும் பேசி கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.

இந்நிலையில் தான் ஒரு சிலர் கேரளா சினிமாவில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவதில்லை என நினைத்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் செய்தி ஒன்று கேரளா சினிமா மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமாவையும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.

நடிகைகளின் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் பற்றிய பாலியல் துன்புறுத்தலுக்கு தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்வதற்காக ஹேமா கமிட்டி என்ற ஒரு கமிட்டியை கேரள சினிமா அமைத்திருந்தது.

இந்த கமிட்டி கொடுத்த செய்திகள் தான் தற்போது கேரளா சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமா வரை சர்ச்சையாக இருக்கிறது.

கேரளா சினிமாவின் பிரபல 10 நடிகர்கள்

இந்த தகவலின் படி மலையாள சினிமாவில் அதிகபட்சமாக பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது. இதையெல்லாம் விட பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் செய்தியாக மலையாள சினிமாவில் இருக்கிற முக்கியமான பத்து நடிகர்கள் தான் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகளுக்கு முக்கிய மூல காரணமாக இருப்பதாகவும், இந்த அட்ஜஸ்ட்மெண்டுக்கு தலைமை தாங்குபவர்களே அந்த முக்கிய 10 பிரபல நடிகர்கள்தான் என்ற தகவல் ஹேமா கமிட்டியின் மூலம் வெளிவந்திருக்கிறது.

இந்நிலையில் மலையாள சினிமாவில் இப்படி ஒரு சர்ச்சை நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், இன்னும் பல சர்ச்சைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் நெடிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

1000 நாளைக்கு ஆயிரம் பொண்ணு.. கதாநாயகிகள் வாழ்க்கையில் விளையாடும் நடிகர்..

பொதுவாக தெலுங்கு நடிகர்கள் சிலரைதான் பெண்களிடம் சில்மிஷம் செய்வதில் வரிசை கட்டி கூறுவார்கள். ஆனால் மலையாளத்திலும் அப்படி சிலர் இருக்கதான் செய்கின்றனர்.

சமீபத்தில் ஒரு வாரிசு நடிகை ஆடிய ஆட்டத்தை பார்த்து அவர் மேல் ஆசை கொண்டுள்ளார் இந்த மலையாள நடிகர். அதனை அடுத்து அவரது செய்கை பரபரப்பாகவே இப்போது கொஞ்சம் அமைதியாக உள்ளார்.

1000 பேர் டார்கெட்:

வயதான காலத்திலும் கூட இவர் 1000 பெண்களை அடைய வேண்டும் என்கிற ஆசையில்தான் இருந்து வருகிறாராம். ஒரு நாளைக்கு ஒரு பெண் என கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு லிஸ்டை தயாரித்துள்ளார் இந்த மலையாள நடிகர்.

மேலும் ஏற்கனவே அதில் சில நூறு பெண்களை தேர்ந்தெடுத்து டைரியில் அவர் குறித்து வைத்துள்ளாராம். ஒவ்வொருவருடனும் தனது ஆசை நிறைவடைந்த பிறகு டிக் செய்து வைத்துக்கொள்கிறாராம்.

தனியாக ஒரு பங்களா:

மேலும் இதற்காகவே இவர் ஒரு தனியார் சொகுசு பங்களாவை வாடகைக்கு எடுத்து வைத்துள்ளார். எந்த படத்திற்கும் படப்பிடிப்பு துவங்கும்போதே அதில் எந்தெந்த நடிகைகள் வேண்டும் என்று லிஸ்ட் போட்டு அவர்களை சொகுசு பங்களாவிற்கு அழைத்து சென்று வருகிறார் இந்த நடிகர்.

இவரும் பிரபலமான நடிகர் என்பதால் பெரும்பாலும் நடிகைகள் மறுப்பு சொல்வதில்லையாம். ஆனால் சில நடிகைகள் விஷயம் தெரிந்து இவருடன் நடிப்பதற்கே பயப்படுகிறார்களாம்.

இன்னும் ஓயலையா இந்த மஞ்சுமல் பாய்ஸ் வசூல்.. இப்போ வரை எவ்வளவு வசூல் தெரியுமா?.. ஷாக் கொடுத்த நிலவரம்!.

Manjummel Boys : மலையாள சினிமாவில் இருந்து தமிழில் ஒரு திரைப்படம் இவ்வளவு வெற்றி பெற முடியுமா என்று அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஒரு வெற்றியை கொடுத்திருக்கிறது மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம்.

கேரளாவில் உள்ள கொச்சியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த 10 இளைஞர்களின் கதைதான் மஞ்சும்மள் பாய்ஸ். இந்த 10 இளைஞர்களும் கொடைக்கானலில் குணா குகையை சுற்றி பார்க்க செல்லும் பொழுது அதில் ஒரு நபர் மட்டும் குழிக்குள் சென்று மாட்டிக்கொள்ள அவரைக் காப்பாற்ற அவரது நண்பர்கள் செய்யும் செயலே கதையாக உள்ளது.

manjummel-boys-malayalam

2006 இல் உண்மையாகவே நடந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதாலேயே இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் திரைப்படத்தில் முழுக்க முழுக்க கமல் நடித்த குணா திரைப்படத்தின் பாடல்களும் இடம் பெற்றிருந்தன.

அதேபோல் படத்தின் வசனங்களும் முழுக்க முழுக்க தமிழில் இருந்ததால் தமிழ் மக்களுக்கு பிடித்த படமாக மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் அமைந்துவிட்டது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் தமிழில் கொண்டாடப்படும் ஒரு திரைப்படமாக மாறியது.

படம் வெளியாகி இரண்டு வாரங்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது இது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. ஏனெனில் இந்த திரைப்படம் மொத்தமே 15 கோடிக்குதான் எடுக்கப்பட்டது அப்படி இருக்கும் பொழுது 100 கோடி ரூபாய் என்பது பெரிய வசூல் என்று அனைவரும் ஆச்சரியப்பட்டு கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றுவரை மொத்தமாக சேர்த்து 165 கோடி வசூல் செய்திருக்கிறது இந்த திரைப்படம் இன்னமும் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

55 வருஷ வாழ்க்கைல நான் பார்க்காத அதிசயம் இது!.. மஞ்சுமல் பாய்ஸ் சாதனையால் அதிர்ந்து போன திரையரங்க உரிமையாளர்!..

Manjummel Boys : தற்சமயம் திரையரங்குகளில் பெரும் வெற்றியை பெற்று வரும் திரைப்படமாக மஞ்சள் பாய்ஸ் திரைப்படம் இருக்கிறது. ஒரு மலையாள திரைப்படத்திற்கு தமிழ் மக்கள் மத்தியில் இவ்வளவு வரவேற்பு இதற்கு முன்பு இருந்ததே இல்லை என கூறலாம்.

நண்பர்கள் 10 பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் பொழுது அதில் ஒருவர் மட்டும் 900 அடியை ஆழமுள்ள ஒரு பள்ளத்தில் மாட்டிக் கொள்ள அவரை காப்பாற்ற மற்ற நபர்கள் சேர்ந்து செய்யும் நடவடிக்கைகளே இந்த படத்தின் கதையாக உள்ளது.

manjummel boys

த்ரில்லர் திரைப்படங்கள் நிறைய இதுவரை சினிமாவில் வந்திருந்தாலும் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு வருவதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் காட்சி அமைப்புகள்தான். படம் துவங்கியது முதல் இறுதி வரை அலுப்பு தட்டாமல் சுவாரசியமாக கதையை கொண்டு சென்று இருக்கின்றனர்.

திரையரங்கில் கிடைத்த வெற்றி:

இது குறித்து திருச்சி திரையரங்க உரிமையாளர் ஸ்ரீதர் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படங்களான ஜிகர்தண்டா 2 மற்றும் ஜப்பான் திரைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

அதேபோல பொங்கலுக்கு வந்த அயலான் மற்றும் கேப்டன் மில்லர் திரைப்படங்களும் திரையரங்கில் பெரிதாக வசூலை பெற்று தரவில்லை ஆனால் ஒரு மலையாள திரைப்படமாக வெளிவந்தாலும் கூட தற்சமயம் திரையரங்குகளில் நல்ல வசூலை பெற்று கொடுத்திருக்கிறது மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம்.

Manjummel Boys Tamil reiview

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் திருவாரூர் அறந்தாங்கி போன்ற பகுதிகளில் இதுவரை மலையாள திரைப்படங்கள் வெளியானதே இல்லை. மலையாள திரைப்படமாகவே இருந்தாலும் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு இருந்து வெளியாகி இருக்க வாய்ப்பு உண்டே தவிர நேரடி மலையாள படங்கள் எல்லாம் அந்த மக்கள் மத்தியில் பிரபலம் கிடையாது.

அப்படிப்பட்ட பகுதிகளில் கூட முதல் முறையாக மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் நல்ல வெற்றியை வெற்றி இருப்பது எங்களுக்கே ஆச்சரியத்தை கொடுத்திருக்கின்றன. என்னுடைய 55 வருட திரையரங்க வாழ்க்கையில் இப்படி ஒரு சாதனையை நான் பார்த்தது கிடையாது என்று கூறுகிறார் ஸ்ரீதர்.

Manjummel Boys Collection: ஓவர் ட்ரெண்டிங்கில் வசூல் சாதனை படைக்கும் மஞ்சுமல் பாய்ஸ்!.. இவ்வளவு கோடி லாபமா?

Manjummel Boys Collection: தமிழ்நாடு சினிமா ரசிகர்கள் தற்சமயம் இந்தியாவில் உள்ள பலதரப்பட்ட மொழி திரைப்படங்களுக்கும் அதிக மதிப்பு கொடுக்க துவங்கியிருக்கின்றனர் என்று தெரிகிறது.

சில திரைப்படங்கள் வேற்றுமொழி படமாக இருந்தாலும் கூட அது சிறப்பான திரைப்படமாக இருக்கும் பட்சத்தில் அதற்கு தமிழ்நாட்டு மக்கள் மதிப்பு கொடுக்கின்றனர்.

மற்ற மொழி படங்களுக்கும் ஆதரவு:

இதற்கு முன்பு காந்தாரா என்கிற திரைப்படம் கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற பொழுது தமிழ்நாட்டிலும் மக்கள் அதை பார்க்க துவங்கினர். அதை பார்த்துவிட்டு தயாரிப்பு நிறுவனமே அந்த திரைப்படத்தை திரும்ப தமிழ் டப்பிங் செய்து தமிழகத்தில் வெளியிட்டது.

kanthara1

அதேபோல தற்சமயம் மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் மலையாளத்தை விடவும் தமிழ்நாட்டில் அதிக வசூலை படைக்க துவங்கியிருக்கிறது. பொதுவாகவே மலையாள திரைப்படங்கள் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களாக இருக்கும்.

மஞ்சுமல் பாய்ஸ் வசூல்:

எனவே அவை சில கோடிகள் வசூலித்தாலே அது பெரிய வசூலாக பார்க்கப்படும். அப்படி இருக்கும் பொழுது தமிழ் சினிமாவிற்கு இணையான ஒரு வசூலை மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் கொடுத்துள்ளது. தமிழகத்தில் வெளியாகி இரண்டு நாட்களில் 90 லட்சம் வசூல் செய்த மஞ்சுவலி பாய்ஸ் அடுத்த ஒரு நாளிலேயே 2 கோடி ரூபாய் வசூல் செய்தது.

Manjummel Boys Tamil reiview

இந்த நிலையில் கடந்த வார இறுதியில் எட்டு கோடி ரூபாய் வசூல் செய்து பெரும் வசூல் சாதனை கொடுத்திருந்தது மஞ்சுமல் பாய்ஸ். நேற்றைய நிலவரப்படி இந்த திரைப்படம் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இது மலையாள சினிமாவே எதிர்பார்க்காத ஒரு வரவேற்பு என்றும் கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் ஓடும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது நிறைய திரையரங்குகள் தற்சமயம் வந்த படத்தை திரையிட துவங்கியிருக்கின்றன. எனவே இந்த வசூல் நிலவரம் இன்னமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா மேலதான் எல்லா தப்பும்.. மலையாள படத்துக்கு அதுதான் ப்ளஸ்.. விளக்கம் கொடுத்த ஏ.ஆர் முருகதாஸ்!..

Director AR Murugadoss: தமிழில் நிறைய வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். தீனா, ரமணா, கத்தி, கஜினி போன்ற பல திரைப்படங்கள் தமிழில் பெரும் வெற்றியை கொடுத்திருக்கின்றன. தொடர்ந்து விஜய்யை வைத்து சர்க்கார் திரைப்படத்தையும் இயக்கியிருந்தார் ஏ.ஆர் முருகதாஸ்.

பொதுவாக ஏ.ஆர் முருகதாஸை பொருத்தவரை தனது திரைப்படங்களில் ஏதாவது ஒரு அரசியலை பேசி இருப்பார். கத்தி, சர்க்கார், ரமணா மாதிரியான திரைப்படங்களில் அவற்றை பார்த்திருக்க முடியும். ஆனால் கடந்த சில வருடங்களாக ஏ.ஆர் முருகதாஸிற்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது.

Director AR Murugadoss Stills

இத்தனைக்கும் தமிழ் சினிமாவில் இத்தனை வெற்றி படங்களை கொடுத்த பிறக்கும் கூட ஏ.ஆர் முருகதாஸிற்கு எதற்காக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது மட்டும் புரியவில்லை. இந்த நிலையில் மலையாள சினிமாக்கள் தொடர்ந்து தமிழில் வெற்றி பெற்று வருவது குறித்து தனது கருத்தை கூறியிருக்கிறார் ஏ.ஆர் முருகதாஸ்.

விளக்கம் கொடுத்த ஏ.ஆர் முருகதாஸ்:

அதில் அவர் கூறும் பொழுது குறைந்த பட்ஜெட்டில் படம் எடுப்பதற்கான வாய்ப்பு என்பது மலையாள சினிமாவில் அதிகமாகவே இருக்கிறது. அதனால்தான் அவர்கள் சிறப்பான திரைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் தமிழ் சினிமாவில் அப்படியான படங்களை எடுப்பதற்கான வாய்ப்புகளை குறைவாக இருக்கின்றன. உதாரணமாக தமிழில் சில நாட்களுக்கு முன்பு வந்த டாடா திரைப்படம் சிறப்பான திரைப்படமாக இருந்தது.

அதே மாதிரியான திரைப்படங்கள் ஆனால் அதிகமாக வரவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். அதே சமயம் மலையாளத்தில் ஒரு மாதத்திலேயே எக்கச்சக்கமான குறைந்த பட்ஜெட்டிலான படங்கள் வருகின்றன. அவற்றை நானும் கூட ரசித்து பார்த்தேன். இதுதான் தமிழ் சினிமாவில் படங்கள் வராததற்கு பிரச்சினையாக இருக்கின்றன.

குறைந்த பட்ஜெட்டில் படம் வந்து ஓடவில்லை என்று சொல்வதெல்லாம் உண்மையை கிடையாது குறைந்த பட்ஜெட்டில் படங்களே வருவதில்லை என்பதுதான் உண்மை என்று கூறுகிறார் ஏ.ஆர் முருகதாஸ்.

Manujummel Boys Review: விஸ்வரூபம் எடுக்கும் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம்!.. அப்படி என்னதான் கதை இருக்கு இதுல!..

Manjummel Boys Tamil reiview: சமீப காலமாகவே மலையாள திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு ஏற்பட்டு வருகிறது. முன்பெல்லாம் தமிழ் சினிமாவிலும் நல்ல கதைக்கரு கொண்ட திரைப்படங்கள் எல்லாம் வந்துக்கொண்டுதான் இருந்தன. ஆனால் தற்சமயம் முழுக்க முழுக்க தெலுங்கு சினிமாக்கள் போல ஒரே சண்டை படங்களாகதான் வருகின்றன.

இந்த நிலையில் தமிழில் மாறுப்பட்ட திரைப்படங்களை விரும்பும் ரசிகர்கள் தற்சமயம் மலையாள திரைப்படங்கள் மீது ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். ஏற்கனவே மம்முட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்சமயம் வெளியாகி சில வாரங்களாக சமூக வலைத்தளத்தையே மொத்தமாக ஆக்கிரமித்துள்ளது மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம். குறைந்த பட்ஜெட்டில் கூட நல்ல படங்களை எடுக்க முடியும் என மீண்டும் மீண்டும் நிருபித்து வருகின்றனர் மலையாள இயக்குனர்கள்.

மஞ்சுமல் பாய்ஸ் கதை:

மஞ்சுமல் பாய்ஸ் என்பது 11 நபர்களை கொண்ட ஒரு குழு ஆகும். இந்த குழுவில் உள்ள 11 நண்பர்களுக்கும் ஒவ்வொரு வகையான குடும்ப பிண்ணனி உண்டு. இந்த மாதிரியான நண்பர்கள் குழு என்றாலே அவர்களுக்கு பொதுவாக ஒரு ஆசை இருக்கும்.

ஒரு முறையாவது கோவாவிற்கு அனைவரும் சேர்ந்து பயணப்பட வேண்டும் என்பதுதான் அது. ஆனால் கோவாவிற்கு செல்லும் அளவிற்கு பண வசதி இல்லாத காரணத்தினால் கொடைக்கானலுக்காவது போக வேண்டும் என திட்டமிடுகின்றனர்.

அதன்படி கேரளத்தின் கொச்சியில் இருந்து கிளம்பும் இந்த குழு கொடைக்கானல் வந்து அங்கிருக்கும் இயற்கை எழில் பொங்கும் விஷயங்களை பார்த்து வருகின்றனர். கொடைக்கானலில் பிரபலமான இடங்களில் குணா படத்தில் வரும் குகையும் முக்கியமான பகுதியாகும்.

எனவே அதை பார்க்க நண்பர்கள் குழு செல்கின்றனர். அங்கு சென்று குணா குகையை பார்த்துவிட்டு வனத்துறை அனுமதித்த இடத்தையும் தாண்டி காட்டிற்குள் செல்கின்றனர். அப்போது அவர்கள் குழுவில் உள்ள சுபாஷ் என்னும் நபர் எதிர்பாராத விதமாக பாறை இடுக்கில் தவறி விழுந்துவிடுகிறார்.

அது 900 அடி பள்ளம். இந்த நிலையில் அடுத்து மஞ்சுமல் பாய்ஸ் அவரை காப்பாற்ற மேற்கொள்ளும் சாகசங்களே படத்தின் கதை. இந்த கதை நிஜமாக நடந்த கதையை அடிப்படையாக கொண்டது என கூறப்படுகிறது. தற்சமயம் இந்த படத்திற்கு எக்கச்சக்கமான வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

புடவைதான் எனக்கு பாதுக்காப்பான ஆடை!.. சாய் பல்லவி இப்படி சொல்ல ஒரு காரணம் இருக்கு!..

Premam Actress Sai pallavi : ப்ரேமம் திரைப்படம் கதாநாயகன் நிவின் பாலிக்கு (nivin paul) எப்படியான படமாக இருந்தது என தெரியவில்லை. ஆனால் அந்த படத்தில் நடித்த மூன்று கதாநாயகிகளுக்குமே அந்த திரைப்படம் ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

அதில் நடித்த அனுப்பாமா பரமேஸ்வரன் (Anupama parameshwaran), மடோனா சபாஸ்டியன் (Madona Sabastian), சாய் பல்லவி (sai pallavi) மூவருமே அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து தென்னிந்தியா முழுவதும் வாய்ப்பை பெற துவங்கினார்.

தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும் அந்த படம் மூலமாக சாய் பல்லவிக்கு மலையாள சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்தது. அப்போது தமிழ் நாட்டு ரசிகர்களே மலர் டீச்சர்  என்று சுற்றி கொண்டிருந்ததை பார்த்திருக்க முடியும். இந்த நிலையில் அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றார் சாய் பல்லவி.

பொதுவாக தெலுங்கிற்கு சென்றாலே கதாநாயகிகளை வைத்து கவர்ச்சி காட்சிகளை எடுத்துவிடுவார்கள், சமந்தா, தமன்னா மாதிரியான நடிகைகள் தெலுங்கு சென்றதும் அதிகமாக கவர்ச்சி காட்டியதை பார்க்க முடியும். ஆனால் சாய் பல்லவி தெலுங்கு சினிமாவிற்கு சென்ற போதும் கூட மிகவும் நாகரிகமாகவே நடித்து வந்தார்.

தற்சமயம் ஒரு பேட்டியில் அவர் பேசும்போது எதற்காக அனைத்து பேட்டிகளுக்கும், விழாக்களுக்கும் புடவை கட்டி வருகிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சாய் பல்லவி, புடவைதான் எனக்கு பாதுக்காப்பான உடையாக உள்ளது. ஒரு விழாவிற்கு பேச வந்திருக்கும்போது கவர்ச்சியாக உடை அணிந்தால் அது எங்கு விலகும் என்ற பயத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.

ஆனால் புடவையில் அந்த பயம் இல்லை. அதற்காக புடவைதான் நல்ல உடை என நான் கூறவில்லை. எனக்கு அந்த உடை சரியாக இருக்கிறது என்று கூறியுள்ளார் சாய் பல்லவி. அவரின் இந்த பேச்சுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உண்டாகியுள்ளது.

மேக்கப் இல்லாம பார்த்தா உன்ன யாருக்கும் பிடிக்காது!. செல்பி எடுத்த பெண்ணால் மனைவியிடம் திட்டு வாங்கிய துல்கர் சல்மான்..

டெல்லிக்கே ராஜானாலும் பல்லிக்கு புள்ளதான என ஒரு படத்தில் வசனம் வரும் அதுப்போல என்னதான் நடிகர்கள் ஊருக்கே பெரும் பிரபலமாக இருந்தாலும் கூட அவர்கள் வீட்டில் அவர்கள் ஒரு சாதாரண மனிதர்கள் தான்.

பொதுவாக அதிகமாக இளம் பெண்களை கவரும் நடிகர்கள் தங்கள் மனைவியிடம் அதிகமாக திட்டு வாங்குவது உண்டு. நடிகர் சிவகார்த்திகேயனே ஒரு பேட்டியில் கூறும் பொழுது எதிர்நீச்சல் திரைப்படத்தில் அவர் நடித்த பொழுது அதில் வா வா என் வெளிச்ச பூவே வா என்கிற ஒரு பாடலை சற்று ரொமான்டிக்காக செய்திருப்பார்.

அந்த பாடலை கடைசி வரை அவரது மனைவி பார்க்கவே இல்லை என்று கூறியிருந்தார் சிவகார்த்திகேயன். அந்த அளவிற்கு மனைவிகள் கணவர்களை தங்களின் உடைமைகளாக பார்ப்பது உண்டு. இந்த நிலையில் நடிகர் நடிகர் துல்கர் சல்மானும் இதே போல அதிகமான இளம் பெண்கள் ரசிகர்களை கொண்ட ஒரு நடிகராவார்.

அவரிடம் இது குறித்து கேட்கும் பொழுது என் மனைவி யாராவது ஒரு பெண் என்னிடம் செல்பி எடுக்க வந்தாலே யார் அந்த பொண்ணு எதற்காக உன்னிடம் வந்து செல்பி எடுக்கிறார் என்று கேட்பார். நான் வீடுகளில் தூங்கி காலை நேரங்களில் எழும் பொழுது முடியெல்லாம் கலைந்து மோசமாக இருப்பேன்.

அப்போது என்னை பார்க்கும் மனைவி இந்த நேரத்தில் உன்னை பார்க்கும் எந்த பெண் ரசிகர்களுக்கும் உன்னை பிடிக்காது என்று தனது மனைவி திட்டுவதாக தனது பேட்டியில் நகைச்சுவையாக கூறியிருந்தார் துல்கர் சல்மான்.