All posts by Esai

பட வாய்ப்புக்காக எந்த எல்லைக்கும் தயார்.. அப்படி நடிக்க ஒப்புக்கொண்ட அஞ்சலி

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக அறியப்படுபவர் நடிகை அஞ்சலி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட திரைப்படங்களில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட அஞ்சலி தன்னுடைய பள்ளி படிப்பிற்குப் பிறகு சென்னை வந்து படித்தார். கணிதத்தில் பட்டம் பெற்ற இவர் சிறிய சிறிய குறும்படங்களில் நடித்து திரைப்படத்துறையில் நுழைவதற்கு வழி வகுத்தார். தற்போது இவர் வெப் தொடர்களில் நடித்து வரும் நிலையில், இவர் வெப் தொடர்களில் நடிக்கும் காட்சி குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை அஞ்சலி

விளம்பரம் படங்களில் நடித்ததன் மூலம் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்தார். அதன் பிறகு கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்த கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்த படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற நிலையில், சிறந்த அறிமுக நடிகைக்கான தென் மண்டல ஃபிலிம் ஃபேர் விருதை இவர் வென்றார்.

கடந்த 2010ல் வெளிவந்த அங்காடி திரைப்படத்தில் கனியாக நடித்து அவரின் நடிப்பு பலராலும் பாராட்டு பெற்று வந்த நிலையில், இந்த படத்திற்கான பிலிம் பேர் விருதை இவர் பெற்றார். இளம் நடிகையாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த அஞ்சலி பல முக்கிய கதாபாத்திரங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு பல மொழிகளிலும் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

பழமொழி படங்களிலும் நடித்து வரும் அஞ்சலி தற்போது வெப்ப தொடர்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பட வாய்ப்புக்காக எந்த எல்லைக்கும் செல்லும் நடிகை அஞ்சலி

தற்போது பல முன்னணி நடிகைகளும் வெப் தொடர்களில் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் பல கவர்ச்சி காட்சிகளில் நடித்து வரும் நிலையில், நடிகை தமன்னா, நித்யா மேனன், ரெஜினா, அமலாபால் ஆகியோர் கவர்ச்சியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை அஞ்சலியின் நடிப்பில் வெளியான பாகிஸ்கரானா என்ற வெப் தொடரில் கதாநாயகனுடன் ஆடை இன்றி சில நிமிட காட்சிகளில் நடித்து அதிர வைத்திருக்கிறார்.

பட வாய்ப்புகள் குறைந்து தன்னுடைய மார்க்கெட்டை இழந்திருக்கும் அஞ்சலி தற்போது வெப் தொடர்களில் படுமோசமான காட்சிகளில் நடித்து வருவது ரசிகர்களை அதிரசெய்திருக்கிறது. வெப் தொடரில் ஒரு நடிகை நடிக்கிறார் என்றாலே அவர் கட்டாயம் அந்த தொடரில் கவர்ச்சியாகத்தான் நடிப்பார் என்று பலரும் நினைக்கிறார்கள். ஏனென்றால் படங்களில் வாங்கும் அதே சம்பளம் வெப் தொடர்களில் கிடைக்கிறது. மேலும் இத்துடன் கால்ஷீட் நாட்களும் குறைவுதான்.

மேலும் அஞ்சலி இவ்வாறு நடித்திருந்ததை பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக இவ்வாறு நடிக்க வேண்டுமா என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

அந்த கம்பெனிதான் எங்களை வளர்த்துச்சு.. அநியாயமா பழிய போடாதீங்க.. விஷால் குறித்து விசித்திரா காட்டம்

சினிமா துறையில் பெண்களுக்கு எதிராக பல அநீதிகள் நடந்து வரும் நிலையில், தற்போது பல நடிகர்களும், நடிகைகளும் அதற்கு குரல் கொடுத்து வருகிறார்கள்.

ஹேமா கமிட்டியின் மூலம் வெளிவந்த பல பிரச்சனைகள் குறித்து தமிழ் சினிமா துறையில் இருக்கும் நடிகர்களிடமும், நடிகைகளிடமும் இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும் போது அவர்கள் கொடுக்கும் தகவலானது பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இதுகுறித்து பத்திரிக்கையாளர்கள் விஷாலிடம் கேட்கும் போது அவர் கொடுத்த தகவலால் பல நடிகைகளும் கடுப்பாகி அதற்கு பதிலடி கொடுத்து வருவது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சினிமா துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதி

எந்த துறையாக இருந்தாலும் தற்போது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு வன்முறைகள் நடந்து கொண்டு இருக்கிறது.

இதற்கு சினிமா மட்டும் விதிவிலக்கா என்ன? என்று கூறும் படியாக தற்போது சினிமா துறையில் உள்ள நடிகைகளுக்கு ஏற்படும் பிரச்சனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு கேரளா நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, கேரளா அரசு ஹேமா கமிட்டி என்ற குழுவை அமைத்து அதன் மூலம் நடிகைகளுக்கு நடைபெறும் குற்றங்களை பதிவு செய்து வந்தது. தற்சமயம் கேரள கமிட்டியின் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து ஒட்டுமொத்த இந்திய சினிமா துறையையும் கதிகலங்க வைத்திருக்கிறது.

இதுகுறித்து பல்வேறு நடிகர்களும், நடிகைகளும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது விஷால் கூறி இருக்கும் தகவலுக்கு நடிகை விசித்ரா கூறிய பதிலடி பார்க்கலாம்

விஷால் VS விசித்ரா

நடிகைகளுக்கு சினிமா துறையில் ஏற்படும் வன்முறைக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என பத்திரிக்கையாளர்கள்கேட்டதற்கு.. விஷால் கூறியது, “நடிகைகளை தவறாக அழைக்கும் நபர்களுக்கு அவர்கள் செருப்பைக் கொண்டு அடிக்க வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு விசித்ரா “ஒரு சினிமா துறையில் அறிமுகமாகும் புதுமுக நடிகையை மற்ற நபர்கள் பாலியல் ரீதியாக அணுகும் போது அவர் அனைவருக்கும் முன்பு அவரை செருப்பால் அடித்தால் அடுத்தது அந்த பெண்ணிற்கு யார் பாதுகாப்பு கொடுப்பார்” நடிகர் சங்கத்தில் இருக்கும் இவர் வந்து “அந்த பெண்ணின் படப்பிடிப்பு முடியும் வரை உடன் இருப்பாரா. அந்த நடிகையின் எதிர்கால வாழ்க்கை என்ன ஆகுவது” என கேள்வி கேட்டிருக்கிறார்.

மேலும் விசித்ராவிடம் பத்திரிக்கையாளர்கள் உங்களுக்கு சப்போர்ட் செய்து தானே அவர் பேசினார் ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள்? என கேட்டதற்கு. எனக்கு “பாலக்காட்டில் அவ்வாறு ஒரு சம்பவம் நடக்கும்போது நான் அனைவரையும் அழைத்துக் கொண்டு நடந்துவற்றை காமிக்கும் போதே எனக்கு எதுவும் நியாயம் கிடைக்கவில்லை ” அவ்வாறு இருக்கும்போது நடிகைகள் செருப்பைக் கொண்டு அடித்தால் அந்தப் பெண்கள் அடுத்து எதிர்காலத்தில் இந்த துறையில் எவ்வாறு நிலைத்திருப்பார்கள் என்ற கேள்வியை அவர் முன் வைத்திருக்கிறார்.

மேலும் விஷால் நடிகைகளை “சில உப்புமா கம்பெனிகள் ஏமாற்றுகிறார்கள் ” எனக் கூறினார். இதற்கு விசித்ரா பதிலடி கொடுக்கும் விதமாக ” பொதுவாக எல்லா நிறுவனங்களையும் உப்புமா கம்பெனி என்று கூறக்கூடாது ” ஏனென்றால் அந்த உப்புமா கம்பெனிதான் என்னைப் போன்ற நடிகைகளை வளர்த்து விட்டது.. அஜித் போன்ற முன்னணி நடிகையை வளர்த்து விட்டது என்ற கருத்தை அவர் தெரிவித்திருக்கிறார்.

முழங்காலுக்கு மேல் சென்ற ஆடை..! 96 நடிகை கவுரியின் அசத்தலான லுக்..

சினிமாவில் பல இளம் நடிகைகளும் அறிமுகமாகி கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள். அந்த வகையில் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை கௌரி ஜி. கிஷன். இவர் தமிழில் 96 என்ற திரைப்படத்தில் திரிஷாவின் ஜானு என்ற இளைய கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

தற்போது கௌரி ஜி. கிஷன் பல திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், இவரின் புகைப்படங்களை அவ்வப்போது இணையதளங்களில் பதிவிட்டு ரசிகர்களின் மத்தியில் டிரெண்டிங்கில் இருப்பார்.

தற்போது இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

96 கௌரி ஜி. கிஷன்

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவரின் தாய்மொழி தமிழாகும். இவர் பெரும்பாலும் சென்னையில் வாழ்ந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு 96 என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானார்.

இவர் பள்ளி படித்துக் கொண்டிருக்கும் போதே 96 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால், வாய்ப்பை தவறவிடாமல் நல்லபடியாக பயன்படுத்தினார். மேலும் 96 படத்தில் நடித்ததற்காக இவர் பலரின் பாராட்டுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்கமாளி என்னும் மலையாள படத்திலும், ஜானு என்ற 96 இன் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்திருந்தார்.

பிறகு மாஸ்டர், கர்ணன் போன்ற தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். மலையாளத்தில் வெளியான அனுக்ரஹீதன் ஆண்டனி என்னும் திரைப்படத்தில் முன்னணி நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் மாறி மாறி நடித்து வரும் கௌரி ஜி. கிஷன் தற்போது பிஸியான நடிகைகளில் ஒருவராகவும், இளம் நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் கௌரி ஜி. கிஷன்

தற்போது தென்னிந்திய சினிமாவில் பிஸியாக நடித்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் கௌரி ஜி. கிஷன். அவ்வப்போது பல புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் அவர் பதிவிட்டு உள்ள புகைப்படம் ஆனது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படங்களை பார்த்தகௌரி ஜி. கிஷனின் ரசிகர்கள் 96 படத்தில் பார்த்த ஜானுவா இது என்றும், ஆச்சரியப்படும் அளவிற்கு மாறிவிட்டார் எனவும் கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள்.

தற்போது இவரின் புகைப்படங்கள் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு லைக் செய்யப்பட்டு வருகிறது.

என்னை நானே செருப்பால அடிச்சிக்கிட்டதுக்கு இதுதான் காரணம்.. மனம் உடைந்த சிவக்குமார்.. ஓப்பன் டாக்.!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்த பல நடிகர்களும் அதன் பிறகு குறிப்பிட்ட சில படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்து வருவார்கள்.

ஆனால் மற்ற நடிகர்கள் இதற்கு விதிவிலக்கு தான். காரணம் ஆரம்பத்தில் எவ்வாறு முன்னணி நடிகராக இருந்தார்களோ தற்போது வரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தான் உண்டு, தன் வேலை உண்டு என எந்த ஒரு கிசு கிசுவிலும், சர்ச்சையிலும் சிக்காத நடிகர் என்றால் அவர் சிவகுமார் தான். இன்னும் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக கூறினால் இவர் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி அகியோரின் அப்பா ஆவார்.

தற்போது இவர் சினிமாவை விட்டு விலகியதற்கான காரணம் பற்றி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகுமார்

கோயம்புத்தூரில் பிறந்த சிவகுமார் மேடைப் பேச்சாளராவார் .கம்பராமாயணம், மகாபாரதம், திருக்குறள் ஆகிய சிறந்த சொற்பொழிவுகளை நடத்தி இருக்கிறார். இவர் சினிமாவில் நான்கு தலைமுறைகளாக முன்னணி கதாபாத்திரத்திலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்.

காக்கும் கரங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர். அதன் பிறகு பல படங்களில் நடித்து வந்தார். சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருமால் பெருமை, உயர்ந்த மனிதன், சிந்து பைரவி, அக்னி சாட்சி மற்றும் பல படங்களில் நடித்து புகழடைந்தார்.

இவர் மூன்று தலைமுறைகளில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், கார்த்திக், மோகன், அஜித் குமார், விஜய், விக்ரம், சூர்யா ஆகியோருடன் நடித்து பிரபலம் அடைந்தார்.

அதன் பிறகு தமிழ் சீரியல்களில் நடித்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற சிவக்குமார் சமீப காலங்களாக எந்த ஒரு சீரியல்களிலும்,படங்களிலும் நடிப்பதில்லை. அதற்கான காரணம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சினிமாவை விட்டு விலகியதற்கான காரணம்

படங்களில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் சிவகுமார் சித்தி மற்றும் அண்ணாமலை ஆகிய சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது பல நடிகர்களும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் படங்களில் கிடைக்கும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து தங்களை பிஸியாக வைத்துக் கொள்வார்கள்.

ஆனால் சிவக்குமார் நடிப்பே வேண்டாம் என ஒதுங்கியதற்கான காரணம் என்னவென்றால், சித்தி என்ற சீரியலில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் போது அதில் சிவாஜி கணேசன் போல் மிகவும் ஃபீல் பண்ணி நடித்துக் கொண்டிருந்தார்.

இதற்காக தன்னை முழுவதுமாக தயார்படுத்திக் கொண்ட சிவக்குமார், அந்த காட்சிக்காக மிகவும் எமோஷனலாக நடித்தார். அந்த காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் இருந்த சக நடிகை ஒருவர், அலட்சியமாக சிரித்துக் கொண்டிருந்தார். அது சிவகுமாருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

மேலும் அவர் ஆரம்பத்தில் சினிமாவிற்குள் தான் வந்தபோதும், இப்போது இருக்கும் சினிமாவிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக உணர்ந்த இவர் தன்னை செருப்பால் அடித்துக் கொண்டு இனி நடிக்கவே கூடாது என முடிவெடுத்ததாக தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

என்னது நான் நாலு பொண்ணுங்க கூடவா.. அட போயா.. பத்திரிக்கையாளர் கேள்வியால் கடுப்பான பரத்!.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் உச்ச நடிகராக இருந்த ஒரு சில நடிகர்கள் தற்போது எந்த படங்களிலும் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகி இருப்பார்கள். அந்த வகையில் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த நடிகர் பரத்.

பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான இவர் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதன் பிறகு அவர் நடித்த ஒரு சில படங்கள் அவருக்கு நன்றாக அமையவில்லை. இதனால் பட வாய்ப்புகள் குறைந்து அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்தி வந்த பரத், தற்போது ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ என்னும் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவர் பத்திரிக்கையாளரின் கேள்விக்கு கூறி இருக்கும் கருத்தானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் பரத்

தமிழ், மலையாளம், ஹிந்தி படங்களில் நடித்து வந்த பரத் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கடந்த 2003 ஆம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமானார். அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு செல்லமே என்ற திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் எடுத்தார்.

பிறகு கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பிறகு பல படங்கள் நடித்தாலும் இவருக்கு எம் மகன், வெயில், பழனி, சேவல், திருத்தணி ஆகிய திரைப்படங்கள் நன்றாக அமைந்தது.

தற்போது ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் பரத் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசி இருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்

இயக்குனர் பிரசாந்த் முருகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ இந்த திரைப்படத்தில் பரத், அபிராமி, அஞ்சலி நாயர், ஷான், ராஜாஜி, பவித்ர லட்சுமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் கேப்டன் எம்பி ஆனந்த் தயாரித்திருக்கிறார்.

தற்போது வெளியீட்டிற்கு காத்திருக்கும் இந்த திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் நாங்கள் பல செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி இருக்கிறோம். ஆனால் எந்த ஒரு படகு குழுவிலும் இவ்வளவு ஹீரோயின்கள் நாங்கள் பார்த்ததில்லை. கீழே இருந்து பார்க்கும் எங்களுக்கே இப்படி என்றால், நீங்கள் படத்தில் நான்கு ஹீரோயின்களுடன் நடித்திருக்கிறீர்கள் உங்களுக்கு எப்படி உள்ளது என கேட்டார்.

அதற்கு பரத் படத்தில் 4 வெவ்வேறு கதைகள் இருக்கிறது. அதனால் 4 ஹீரோயின்கள் இருக்கிறார்கள். ஆனால் நான் நடித்தது ஒரு நாயகியுடன் மட்டும் தான் என நகைச்சுவையாக பதில் கூறியிருக்கிறார்.

மொக்கை படத்தை எல்லாம் வெற்றி படம்னு சொல்றீங்க.. ஜெயிலர் படத்தை மறைமுகமாக அடித்த பா.ரஞ்சித்!.

தற்போது படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்களோ இல்லையோ ஆனால் படத்தை இயக்கும் இயக்குனர்கள் சர்ச்சையில் சிக்குவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

அதிலும் சமீப காலங்களாக தமிழ் சினிமாவில் இரண்டு, மூன்று இயக்குனர்களை பற்றிய சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களின் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் அந்த இயக்குனர்கள் மேடைகளில் பேசும் போதும், செய்தியாளர்கள் சந்திப்பின் போதும் கூறும் கருத்துக்கள் மக்களிடையே பல விமர்சனங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குனராக தற்போது அறியப்படுபவர் இயக்குனர் பா. ரஞ்சித். இவர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா என்ற திரைப்படத்தை இயக்குனர்.

இந்த படங்களைப் பற்றி இயக்குனர் பா. ரஞ்சித் கூறியிருக்கும் கருத்து ஒன்று சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக அமைந்திருக்கிறது.

இயக்குனர் பா. ரஞ்சித்

பா. ரஞ்சித் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்டவர் இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அதன் பிறகு நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கி நல்ல விமர்சனம் பெற்றார். பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா என்ற இரு அதிரடி திரைப்படங்களை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இவர் இயக்கிய தங்கலான் திரைப்படம் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மேடைகளில் பேசும் இவர் அரசியல் சார்ந்த மற்றும் சமூகம் சார்ந்த சில கருத்துக்களை கூறி வருவதால் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வருகிறார். இந்நிலையில் தான் இயக்கிய இரண்டு படங்களை பற்றி கூறியிருக்கும் தகவலானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கபாலி, காலா மொக்கை படமா?

பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பா. ரஞ்சித் கூறியதாவது தலைவர் ரஜினிகாந்த் நடித்த எல்லா படங்களும் ஹிட் ஆனது. ஆனால் நான் இயக்கிய காலா மற்றும் கபாலி திரைப்படங்கள் மட்டும் தோல்வி அடைந்த படங்களா? என கேள்வி கேட்டார். ஆனால் கபாலி மிகப்பெரிய அளவில் வசூல் செய்த திரைப்படம்.

வசூல் ரீதியாக நல்ல கலெக்ஷன் செய்த படத்தை வெற்றி படங்கள் என்று கூறாமல், நல்லாவே இல்லாத திரைப்படங்களை வெற்றி படங்களாக அங்கீகரிக்கிறார்கள். ஆனால் தோல்வி படங்கள் என்று கேட்டால் நான் இயக்கிய காலா படமும், கபாலி படமும் என்று கூறுவார்கள்.

தயாரிப்பாளர் படத்திற்காக செலவு செய்த பணத்தை அவர் திரும்ப எடுத்திருக்கிறார். அப்போது இது வெற்றி படமா? இல்லையா? என அவர் கேள்வி கேட்டு இருக்கிறார்.

இந்த கருத்தானது தற்போது பா. ரஞ்சித், ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படத்தை தான் மறைமுகமாக குறிப்பிடுகிறார் என பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதுக்கு மேல ஏத்தி போட முடியாது.. திடீர்னு கவர்ச்சி பக்கம் இறங்கிய பிக்பாஸ் வி.ஜே அர்ச்சனா..!

வெள்ளித்திரையில் இருக்கும் நடிகைகளைவிட தற்போது சின்னத்திரை நடிகைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார்கள். அந்த வகையில் சமீப காலமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கும் சின்னத்திரை நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன்.

தற்போது இவர் பல படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் அர்ச்சனா ரவிச்சந்திரன் தற்போது இணையதளங்களில் பல மாடனான புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது பதிவிட்டு இருக்கும் புகைப்படம் ஆனது அர்ச்சனா ரவிச்சந்திரன் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன்

விஜே அர்ச்சனா தமிழ் தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்களில் தோன்றியிருக்கிறார். இவருக்கு அங்கீகாரம் பெற்றுக் கொடுத்த சீரியல் என்றால் ராஜா ராணி 2. மேலும் முரட்டு சிங்கிள் சீசன் 2, காமெடி ராஜா கலக்கல் ராணி மற்றும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இடம்பெற்று இருக்கிறார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 7 வைல்ட் கார்டு என்ரியாக பங்கேற்ற அர்ச்சனா பிக் பாஸில் டைட்டில் வின்னர் ஆகவும் வெற்றி பெற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

வீடியோ ஜாக்கியாக சன் டிவியில் தனது வாழ்க்கையை தொடங்கிய விஜே அர்ச்சனா பல நிகழ்ச்சிகளில் தோன்றியிருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மக்கள் மத்தியில் அர்ச்சனாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, தற்போது பல படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அருள்நிதி நடிப்பில் வெளிவந்த டிமான்டி காலனி என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இணையதளங்களில் விஜே அர்ச்சனா ரவிச்சந்திரன்

தற்போது பிஸியாக படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வரும் விஜேஅர்ச்சனா சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருந்து வருகிறார்.

பல நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளில் கலந்துகொண்டு பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து வரும் அர்ச்சனா ரவிச்சந்திரன், சமீப காலங்களாக அவரின் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிடுவதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவரின் புகைப்படமானது மாடனாகவும், ஸ்டைலாகவும் இருக்கிறது. இந்த புகைப்படங்களை பார்த்து அவரின் ரசிகர்கள் அர்ச்சனா ரவிச்சந்திரனா இது என்று ஆச்சரியத்துடன் அவரின் புகைப்படங்களை லைக் செய்தும், கமெண்ட் செய்தும் ஷேர் செய்தும் வருகிறார்கள்.

அஜித் தவறவிட்ட ரெண்டு படங்களால் முன்னுக்கு வந்த இன்னொரு ஹீரோ.. யார் தெரியுமா?

சினிமாவில் ஒரு சில நடிகர்களின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும். இன்றளவும் அந்த திரைப்படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தால் அனைவரும் உட்கார்ந்து பார்க்கும் படியாக அந்த படத்தின் கதை மற்றும் நடித்திருந்த நடிகர், நடிகை மக்களின் மனதை விட்டு நீங்காமல் இருப்பார்கள்.

இந்நிலையில் அந்தப் படத்தைப் பற்றி இயக்குனரோ அல்லது மற்ற நபர்கள் யாராவது சில தகவலை கூறினால் அது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

அந்த வகையில் தான் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித் அவருக்கு கிடைத்த இரண்டு படங்களைத் தவிற விட்டு அந்த படத்தில் மற்றொரு நடிகர் நடித்து தற்போது வரை அந்த திரைப்படத்திற்கான வரவேற்பு மக்கள் மத்தியில் உள்ளது என்பது ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது.

நடிகர் அஜித் தவறவிட்ட இரண்டு திரைப்படங்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நேருக்கு நேர்

நேருக்கு நேர் திரைப்படம் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை வசந்த் இயக்கியிருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் சூர்யா, விஜய், சிம்ரன், கௌசல்யா ஆகியோர் நடித்திருந்தார்கள். ஆனால் இந்த படத்தில் சூர்யாவின் கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வு செய்யப்பட்ட நடிகர் அஜித்.

ஆனால் அஜித் அதிக சம்பளம் கேட்டதால், இந்த படத்தில் சூர்யாவை நடிக்க வைத்துள்ளனர்.

கஜினி

கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படம் கஜினி. இந்த திரைப்படத்தை ஏ. ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார். சூர்யா, அசின், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த திரைப்படம் கடந்த 2008 ஆம் ஆண்டு அமீர்கான் நடிப்பில் ஹிந்திலும் வெளியானது. ஹிந்தியில் வெளியாகி அதிக வசூல் செய்த முதல் ரீமேக் திரைப்படம் என்ற பெயரும் பெற்றது. ஆனால் இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் அஜித்.

இந்த படத்தில் மொட்டை போட வேண்டும் என்பதால் நடிகர் அஜித் இந்த படத்திலிருந்து விலகிவிட்டார் என்ற செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த இரு படங்களிலும் நடிகர் அஜித் நடித்திருந்தால், அவரின் சினிமா வாழ்க்கைக்கு இந்த திரைப்படங்கள் ஒரு திருப்புமுனையாக இருந்திருக்கும் என ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

கசமுசா காட்சிகள் அதிகம் இருந்ததால அந்த படத்தை விக்கவே இல்ல.. வெளிப்படையாக கூறிய எஸ்.ஜே சூர்யா!.

சினிமாவில் இருக்கும் பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் என பலரும் நடிகர்களாக தங்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு வாய்ப்புகளை நோக்கி காத்துக்கொண்டிருந்த ஒரு மனிதர் என்றால் அது எஸ்.ஜே சூர்யா.

இயக்குனராக அறிமுகமாகி அடுத்தடுத்து படங்களில் இயக்குனராகவும், நடிகராகவும் தன்னை ரசிகர்களின் மத்தியில் கொண்டு சேர்த்தவர் எஸ்.ஜே சூர்யா.

இந்நிலையில் முழுவதுமாக நடிகராக களம் இறங்கியிருக்கும் எஸ்.ஜே சூர்யா, தற்போது முன்னணி நடிகர்களை எல்லாம் விட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடித்த நியூ படத்தை பற்றி கூறியிருக்கும் ஒரு சுவாரசிய தகவலானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் எஸ். ஜே. சூர்யா

திரைக்கதை ஆசிரியர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் எஸ்.ஜே. சூர்யா. தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித் மற்றும் விஜய்யை வைத்து இயக்கிய வாலி மற்றும் குஷி திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படமாகும்.

மேலும் இந்த இரு திரைப்படங்கள் மூலம் எஸ்.ஜே சூர்யா நட்சத்திர இயக்குனராக அனைவராலும் அறியப்பட்டார். இயக்குனராக அறியப்பட்ட எஸ்.ஜே சூர்யா அன்பே ஆருயிரே, இசை ஆகிய திரைப்படங்களில் மூலம் அறிமுக நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு கள்வனின் காதலி, திருமகன், வியாபாரி போன்ற படங்களில் நடித்தார். ஸ்பைடர், மெர்சல், மாநாடு, மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார்.

தற்போது தென்னிந்திய சினிமாவில் படு பிஸியாக நடித்து வரும் எஸ்.ஜே சூர்யா தமிழ், தெலுங்கு என அனைத்து திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வந்து கொண்டிருக்கிறார். இவரின் தனித்துவமான நடிப்பிற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.

நியூ படத்தை பற்றி பகிர்ந்த எஸ்.ஜே சூர்யா

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டஎஸ்.ஜே சூர்யாவிடம், தொகுப்பாளர் நியூ படத்தை தற்போது பலரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த படம் எந்த ஒரு பிளாட்பார்மிலும் கிடைக்கவில்லை ஏன் என கேட்டார்.

அதற்கு எஸ்.ஜே சூர்யா சிரித்துக்கொண்டே நான் இப்பொழுது தான் நல்ல பையன் என்ற பெயரை வாங்கி இருக்கிறேன். அந்தப் படத்தை நான் வெளியிட்டால் இந்த பெயர் போய்விடும் என கூறினார். ஏனென்றால் அந்த படத்தில் சில கசமுசா காட்சிகள் இருக்கிறது. வேண்டுமானால் அந்த படத்தின் ஒருசில காட்சிகளை நீக்கிவிட்டு புதியதாக ரிலீஸ் செய்யலாம் என கூறி சிரித்தார்.

சினிமாவில் பெரிய காம்போவில் வரவிருந்து மிஸ்ஸான திரைப்படங்கள்.. இதோ லிஸ்ட்.

சினிமாவில் பல படங்கள் வந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ஒரு சில இயக்குனர்கள் தொடர்ந்து ஒரு சில குறிப்பிட்ட நடிகர்கள் அல்லது நடிகைகளை மட்டும் வைத்து தொடர்ந்து படங்களை கொடுத்து வருவார்கள்.

ஏனென்றால் இவர்களின் காம்போவில் வெளிவரும் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு பிடித்துப் போக அடுத்தடுத்த திரைப்படங்களையும் குறிப்பிட்ட இயக்குனர்கள் அந்த நடிகர் நடிகைகளை மட்டும் வைத்து எடுத்து வருவார்கள்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் நடிகர்கள் இவ்வாறு பெஸ்ட் காம்போவில் பல படங்களை கொடுத்து வெற்றிகளை பெறும் நிலையில் தற்போது அந்த வரிசையில் ஒரு சில காம்போவில் படங்கள் எடுக்கலாம் என நினைத்து அதன் பிறகு அந்த படங்களை கைவிட்ட செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ராஜமவுலி மற்றும் ஜேசன் மோமோ

தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்கும் அளவிற்கு வெளிவந்த திரைப்படம் என்றால் அது பாகுபலி. இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு நடிகர்களின் நடிப்பும் ரசிகர்களின் மனதில் பதிந்த நிலையில் அதில் நடித்திருந்த வல்வால் தேவன் என்னும் கதாபாத்திரம் தற்போது வரை யாராலும் மறக்க முடியாத கதாபாத்திரமாக இருக்கிறது.

நிலையில் தான் அந்த கதாபாத்திரத்திற்கு ராஜமவுலி கேம் ஆஃப் த்ரோன்ஸ் படத்தில் நடித்த ஜேசன் மோமோ எனும் நடிகரை முதலில் நடிக்க வைக்க இருந்ததாகவும், ஆனால் அவர் அக்வாமேன் படத்தின் பிஸியாக நடித்து வந்ததால் நடிகர் ராணாவை அந்த கதாபாத்திரத்தில் இயக்குனர் நடிக்க வைத்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. மேலும் அந்த ஹாலிவுட் நடிகர் நடித்திருந்தால் பாகுபலி இன்னும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்று இருக்கும் என கூறப்பட்டு வருகிறது.

சூர்யா மற்றும் கார்த்தி

மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தை தமிழில் எடுக்கலாம் என இயக்குனர் லோகேஷ் நினைத்திருந்ததாகவும், மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் மற்றும் சூர்யாவை நடிக்க வைக்கலாம் என அவர் நினைத்திருந்ததாகவும் சில காரணங்களால் அந்த படத்தை எடுக்க முடியாமல் சென்று விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரஜினி மற்றும் இளையராஜா

இளையராஜா ஒரு நேரலையில் கூறியிருக்கும் செய்தி ஆனது, ரஜினி நடிப்பில் வெளிவந்த ராஜாதி ராஜா திரைப்படத்தை முதலில் நான் தான் இயக்க இருந்ததாகவும் ஆனால் சில காரணங்களால் அந்த வாய்ப்பு நழுவி விட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

கடலுக்குள் போக இருக்கும் சென்னை நகரம்!.. காத்திருக்கும் ஆபத்து!.

சமீப காலங்களாக உலகின் பல்வேறு இடங்களிலும் நாம் எதிர்பார்க்காத பல நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.

நவீன கால மாற்றத்தின் காரணமாக மனிதர்களால் பல தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வந்தாலும், இயற்கையை கட்டுப்படுத்தும் அளவிற்கு எந்த ஒரு அறிவியல் தொழில்நுட்பங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்ட பல இயற்கை நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கும் நிலையில், உலகின் பல்வேறு இடங்களிலும் எரிமலை வெடிப்பு, சுனாமி, நிலச்சரிவு, மேக வெடிப்பு, பருவநிலை மாறுதல் போன்ற பல நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டின் முக்கிய நகரமான சென்னை கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

கடலில் மூழ்கப்போகும் சென்னை

தற்போது சிறிய மழை பெய்தாலும் சென்னையில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளம் ஏற்படுகிறது. இவ்வாறு இருக்கையில் ஒரு சிறிய மழையை கூட சென்னை நகரத்தால் தாங்க முடியாத அளவிற்கு சென்னையில் சில திட்டமிட்ட வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சென்னை நகரத்தில் பல்வேறு கட்டுமான வசதிகள் போன்றவை வளர்ச்சி அடைந்து கொண்டு வந்தாலும், திட்டமிட்ட வளர்ச்சி இருக்கிறதா? என்று கேட்டால் அவ்வாறு இல்லாத காரணத்தால் மழை பெய்யும் போது சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கி அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

இந்நிலையில் வரும் ஆண்டுகளில் அதிக மழை பெய்தால் சென்னை நகரம் கடலுக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர் கருத்து தெரிவித்து வருகிறார்.

சமூக ஆர்வலரின் கருத்து

வரும் 2050-க்குள் சென்னையில் உள்ள ஏழு சதவீத நிலப்பரப்பு கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர் பூவுலகின் நண்பர்கள் கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அவர் கூறியதாவது, அனைவரும் நினைப்பதாவது கடல் மட்டம் உயர்வு என்பது கடல் நீர் மட்டம் உயர்ந்து அப்படியே சென்னை மூழ்கும் என நினைக்கிறார்கள் ஆனால் அது அவ்வாறு கிடையாது.

சென்னையில் கொசஸ்தலை, அடையாறு, கூவம் ஆகிய ஆறுகள் கடலில் சென்று சேருகிறது. இந்நிலையில் அதிக மழை பெய்யும் போது கடல் நீரின் பிஹெச் அளவும், ஆற்றின் பிஹெச் அளவும் ஒன்றாக இருக்கும் நிலையில் கடல் நீர் மட்டம் உயரும் போது இந்த ஆறுகள் பின்னோக்கி அப்படியே சென்னை நகரங்களில் புகுந்து வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும்.

இந்த ஆறுகளின் பக்கத்தில் எந்தெந்த இடங்கள் இருக்கிறதோ அந்த இடங்களில் தாழ்வான பகுதிகளில் எல்லாம் மழைநீர் சென்று பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்தப் பகுதிகளில் எல்லாம் நாம் வீடு, சாலைகள் அமைத்திருக்கிறோம் அல்லது தொழிற்சாலை வைத்திருக்கிறோம் என்றால் நிச்சயம் இவை அனைத்தும் மூழ்கும் என அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

நடிகைகளை வேட்டையாடும் 10 கேரள பிரபலங்கள்.. வெளிவந்த பகீர் உண்மைகள்!.

தென்னிந்திய சினிமாவில் இந்த அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது பல நடிகைகளும் தங்களுக்கு ஏற்பட்ட இந்த பிரச்சினையை பற்றி பேட்டியில் வெளிப்படையாக கூறி வரும் நிலையில், ஒரு சில நடிகைகள் இது போன்ற பல இக்கட்டான நிலைகளை தாண்டி தான் தற்போது சினிமாவில் பெண்கள் சாதிக்கும் படியாக இருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள்.

மேலும் சினிமா ஆரம்பித்த காலத்தில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. தற்போது மலையாள சினிமாவில் அரங்கேறி இருக்கும் இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை பற்றி தற்போது வெளிவந்திருக்கிறது. இந்த தகவல் தற்போது தென்னிந்திய சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் நடிகைகளுக்கு ஏற்படும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை

இதுபோன்ற பிரச்சனைகள் தமிழ், தெலுங்கு சினிமாவில் அதிகம் இருப்பதாக பேசப்பட்ட வந்த நிலையில், மலையாள சினிமாவில் இதுகுறித்து அவ்வளவாக யாரும் பேசி கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.

இந்நிலையில் தான் ஒரு சிலர் கேரளா சினிமாவில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுவதில்லை என நினைத்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் செய்தி ஒன்று கேரளா சினிமா மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமாவையும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.

நடிகைகளின் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் பற்றிய பாலியல் துன்புறுத்தலுக்கு தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்வதற்காக ஹேமா கமிட்டி என்ற ஒரு கமிட்டியை கேரள சினிமா அமைத்திருந்தது.

இந்த கமிட்டி கொடுத்த செய்திகள் தான் தற்போது கேரளா சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமா வரை சர்ச்சையாக இருக்கிறது.

கேரளா சினிமாவின் பிரபல 10 நடிகர்கள்

இந்த தகவலின் படி மலையாள சினிமாவில் அதிகபட்சமாக பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது. இதையெல்லாம் விட பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் செய்தியாக மலையாள சினிமாவில் இருக்கிற முக்கியமான பத்து நடிகர்கள் தான் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகளுக்கு முக்கிய மூல காரணமாக இருப்பதாகவும், இந்த அட்ஜஸ்ட்மெண்டுக்கு தலைமை தாங்குபவர்களே அந்த முக்கிய 10 பிரபல நடிகர்கள்தான் என்ற தகவல் ஹேமா கமிட்டியின் மூலம் வெளிவந்திருக்கிறது.

இந்நிலையில் மலையாள சினிமாவில் இப்படி ஒரு சர்ச்சை நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், இன்னும் பல சர்ச்சைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் நெடிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.