மொக்கை படத்தை எல்லாம் வெற்றி படம்னு சொல்றீங்க.. ஜெயிலர் படத்தை மறைமுகமாக அடித்த பா.ரஞ்சித்!.

தற்போது படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்களோ இல்லையோ ஆனால் படத்தை இயக்கும் இயக்குனர்கள் சர்ச்சையில் சிக்குவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

அதிலும் சமீப காலங்களாக தமிழ் சினிமாவில் இரண்டு, மூன்று இயக்குனர்களை பற்றிய சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களின் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் அந்த இயக்குனர்கள் மேடைகளில் பேசும் போதும், செய்தியாளர்கள் சந்திப்பின் போதும் கூறும் கருத்துக்கள் மக்களிடையே பல விமர்சனங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குனராக தற்போது அறியப்படுபவர் இயக்குனர் பா. ரஞ்சித். இவர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா என்ற திரைப்படத்தை இயக்குனர்.

இந்த படங்களைப் பற்றி இயக்குனர் பா. ரஞ்சித் கூறியிருக்கும் கருத்து ஒன்று சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக அமைந்திருக்கிறது.

இயக்குனர் பா. ரஞ்சித்

பா. ரஞ்சித் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்டவர் இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அதன் பிறகு நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கி நல்ல விமர்சனம் பெற்றார். பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா என்ற இரு அதிரடி திரைப்படங்களை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

pa. ranjith

சமீபத்தில் இவர் இயக்கிய தங்கலான் திரைப்படம் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மேடைகளில் பேசும் இவர் அரசியல் சார்ந்த மற்றும் சமூகம் சார்ந்த சில கருத்துக்களை கூறி வருவதால் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வருகிறார். இந்நிலையில் தான் இயக்கிய இரண்டு படங்களை பற்றி கூறியிருக்கும் தகவலானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கபாலி, காலா மொக்கை படமா?

பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பா. ரஞ்சித் கூறியதாவது தலைவர் ரஜினிகாந்த் நடித்த எல்லா படங்களும் ஹிட் ஆனது. ஆனால் நான் இயக்கிய காலா மற்றும் கபாலி திரைப்படங்கள் மட்டும் தோல்வி அடைந்த படங்களா? என கேள்வி கேட்டார். ஆனால் கபாலி மிகப்பெரிய அளவில் வசூல் செய்த திரைப்படம்.

வசூல் ரீதியாக நல்ல கலெக்ஷன் செய்த படத்தை வெற்றி படங்கள் என்று கூறாமல், நல்லாவே இல்லாத திரைப்படங்களை வெற்றி படங்களாக அங்கீகரிக்கிறார்கள். ஆனால் தோல்வி படங்கள் என்று கேட்டால் நான் இயக்கிய காலா படமும், கபாலி படமும் என்று கூறுவார்கள்.

தயாரிப்பாளர் படத்திற்காக செலவு செய்த பணத்தை அவர் திரும்ப எடுத்திருக்கிறார். அப்போது இது வெற்றி படமா? இல்லையா? என அவர் கேள்வி கேட்டு இருக்கிறார்.

இந்த கருத்தானது தற்போது பா. ரஞ்சித், ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படத்தை தான் மறைமுகமாக குறிப்பிடுகிறார் என பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version