Tag Archives: மஞ்சுமல் பாய்ஸ்

அனுமதி வாங்கிதான் ப்ரோ பாட்டை போட்டுருக்கோம்!.. இளையராஜா குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த மஞ்சுமல் பாய்ஸ் க்ரூப்!..

இளையராஜா தமிழ் சினிமாவில் பல காலங்களாக இருந்து வரும் முக்கியமான இசையமைப்பாளராக இருந்து வருகிறார். இளையராஜாவின் இசைக்காக தமிழ் சினிமாவில் பாடல்கள் வெற்றி பெற்ற காலக்கட்டங்களும் உண்டு.

ஆனால் இப்போது நிறைய இளம் இசையமைப்பாளர்கள் வந்ததால் இளையராஜாவிற்கு அவ்வளவாக வாய்ப்புகள் வருவதில்லை. இந்த நிலையில் தான் இசையமைத்த பாடல்களுக்கான காப்புரிமை தனக்கே வேண்டும் என்று போராடி வருகிறார் இளையராஜா.

இந்த நிலையில் அவரது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தும் படங்கள் மீதும் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறார் இளையராஜா. அப்படியாக தற்சமயம் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தில் குணா பட பாடலை பயன்படுத்தியிருப்பது குறித்து அவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளார் இளையராஜா.

manjummel boys

கண்மணி அன்போடு காதலன் என்கிற அந்த பாடல்தான் ஒட்டுமொத்த படத்திற்கே முக்கியமான அம்சமாக அமைந்தது. அதை இயக்குனர் பயன்படுத்தியிருந்த விதமும் நன்றாகவே இருந்தது. இதற்காக கமல்ஹாசன் கூட படக்குழுவினரை அழைத்து பாராட்டியிருந்தார்.

இந்த நிலையில் இளையராஜா இவ்வளவு தாமதமாக எதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரது கேள்வியாக இருந்தது. இதற்கு தற்சமயம் மஞ்சுமல் பாய்ஸ் தயாரிப்பாளர் பதிலளித்துள்ளார். குணா படத்தின் பாடலின் காப்புரிமையை படத்தின் தயாரிப்பாளரிடம் பெற்ற பிறகுதான் படத்தில் பயன்படுத்தினோம். அனுமதியின்றி எல்லாம் பயன்படுத்தவில்லை என தெரிவித்துள்ளனர்.

இவ்வளவு நாள் காத்திருந்து மஞ்சுமல் பாய்ஸ்க்கு சம்பவம் செய்த இளையராஜா!. இப்படி ஒரு ட்ரிக் இருக்கா?

இளையராஜா இசையமைத்த பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு வரும் பிரச்சனைதான் தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே சென்று கொண்டுள்ளது. பொதுவாகவே ஒரு பாடலுக்கான காப்புரிமை என்பது திரைப்படங்களை பொறுத்தவரை தயாரிப்பு நிறுவனங்களுக்குதான் செல்லும்.

ஆனால் தன் பாடலுக்கான காப்புரிமை தனக்கே வேண்டும் என இளையராஜா கேட்பதே குழப்பமான சங்கதியாக உள்ளது. இதற்கு நடுவே தன்னுடைய பாடல்களை பயன்படுத்திவிட்டார்கள் என பல திரைப்படங்கள் மீது வழக்கு தொடர்ந்து வந்தார் இளையராஜா.

அந்த வகையில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் மீதும் வழக்கு தொடர்ந்தார் இளையராஜா. அதில் வரும் கண்மனி அன்போடு காதலன் பாடலை பயன்படுத்தியதற்காக இழப்பீடு கேட்டுள்ளார் இளையராஜா என கூறப்படுகிறது.

ஆனால் இந்த படத்தின் படக்குழு குணா படத்தின் தயாரிப்பாளரிடம் காப்புரிமை பெற்றுதான் இந்த பாடலை படத்தில் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் போது இளையராஜா எப்படி இவர்கள் மீது வழக்கு போட முடியும் என்பது ஒருபக்கம் கேள்வியாக இருக்கிறது.

இதுக்குறித்து சினிமா துறையில் உள்ளவர்கள் கூறும்போது மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் இந்த பாடல் பயன்படுத்தப்பட்டிருப்பது படம் வெளியானப்போதே இளையராஜாவிற்கு தெரிந்திருக்கும். ஆனால் படம் நல்ல வசூலை பெறும்போது அதன் வழியாக பெரும் தொகையை இழப்பீடாக பெறலாம் என அவர் காத்துக்கொண்டிருந்தார் என்று கூறுகின்றனர்.

எது எப்படி இருந்தாலும் இன்று ட்ரெண்டிங்கான டாப்பிக்காக மாறியுள்ளார் இளையராஜா.

கமுக்கமாக கல்யாணத்தை முடித்த அபர்ணா தாஸ்.. மாப்பிள்ளை மஞ்சுமல் பாய்ஸ் நடிகராம்..

தமிழ் சினிமாவில் புது முகங்களாக பிரபலமாகி வந்த நடிகைகளில் முக்கியமானவராக நடிகை அபர்ணாதாஸ் இருந்து வந்தார். 2018 முதலே இவர் திரைத்துறையில் நடிகை ஆவதற்கான முயற்சிகளை செய்து வருகிறார்.

மலையாளத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான ஒரு படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அபர்ணா தாஸ். அதன் பிறகு பீஸ்ட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் அபர்ணா தாஸ்.

இதனை தொடர்ந்து இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வர துவங்கின. டாடா திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் கவின் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்த படம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அபர்ணா தாஸிற்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகரிக்க துவங்கின. ஆனால் இந்த நிலையில் தற்சமயம் திடீரென திருமணம் செய்திருக்கிறார் அபர்ணா தாஸ்.

இவர் தீபக் பெரம்போல் என்னும் நடிகரை திருமணம் செய்துள்ளார். தீபக் பெரம்போல் தற்சமயம் வெளியாகி பிரபலமான மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

கலெக்‌ஷனில் மஞ்சுமல் பாய்ஸை ஓரம் கட்டிய ஆடுஜீவிதம்!.. சொல்லி அடிக்கும் மலையாள சினிமா!..

கடந்த ஒரு மாதமாக தமிழ்நாடு மற்றும் கேரள மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருந்த விஷயமாக மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் இருந்தது. வாழ்வதற்கான போராட்டத்தை அடிப்படையாக கொண்டு வந்த திரைப்படங்கள் பல உண்டு.

ஆனால் அவற்றில் மஞ்சுமல் பாய்ஸ்க்கு மட்டும் இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருப்பதற்கு காரணம் அதன் திரைக்கதையே என கூறப்படுகிறது. கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு பயணம் சென்ற நண்பர்கள் குழுவில் ஒருவர் குணா குகையில் மாட்டிக்கொள்ள அவரை காப்பாற்றுவதுதான் கதையாக இருக்கிறது.

manjummel boys

இது உண்மையிலேயே நடந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் பிரபலமாக துவங்கியப்பிறகு கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் லாபமீட்டியது. தொடர்ந்து அதை தற்சமயம் தெலுங்கு மொழியிலும் வெளியிட இருக்கின்றனர்.

வசூலை மிஞ்சிய ஆடுஜீவிதம் திரைப்படம்:

இந்த நிலையில் அதே மாதிரி உயிர் வாழ்வதற்கான போராட்டத்தை அடிப்படையாக கொண்டு வந்த திரைப்படம்தான் ஆடு ஜீவிதம். சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு செல்லும் நஜீப் என்னும் இளைஞன் அந்த பாலைவனத்தில் இருந்து தப்பிப்பதை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதுவும் நிஜமாக நடந்த கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான். இந்த நிலையில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் 100 கோடி வசூலை பெறுவதற்கு 12 நாட்கள் தேவைப்பட்டது.

aadujeevitham

ஆனால் ஆடுஜீவிதம் திரைப்படம் 9 நாட்களிலேயே அந்த வசூலை பெற்றுள்ளது. கேரள சினிமாவில் வேறு எந்த ஒரு திரைப்படமும் இவ்வளவு குறுகிய காலத்தில் 100 கோடி ரூபாய் வசூல் செய்வது அரிதான விஷயம் என கூறப்படுகிறது. தொடர்ந்து மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தை விடவும் ஆடுஜீவிதம் அதிக வசூலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கலானை தொடர்ந்து வரிசையாக ஸ்கோர் செய்யும் விக்ரம்!.. லிஸ்ட்டுல மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனரும் இருக்காராம்!.

தமிழில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடி தேடி நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விக்ரம். பொதுவாக அவர் நடிக்கும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் காரணமாக அவருக்கு பெரிய ரசிகர்கள் உண்டு.

ஆனால் சமீபத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் எதுவுமே எதிர்பார்த்த வரவேற்பை தரவில்லை. சொல்லப்போனால் அவை மக்கள்  மத்தியில் அதிருப்தியைதான் ஏற்படுத்தின. கோப்ரா மாதிரியான திரைப்படங்களில் விக்ரம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் கதைரீதியாக மிகவும் சுமாரான கதையாக இருந்ததால் அந்த கதை ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை.

vikram

இந்த நிலையில் தற்சமயம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தங்கலான் திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது, பொதுவாகவே பா.ரஞ்சித் திரைப்படங்கள் பெரும்பாலும் நல்ல வெற்றியை கொடுக்க கூடியவை என்பதால் தங்கலான் நல்ல வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்து சித்தா திரைப்படத்தின் இயக்குனரான அருண் குமார் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் விக்ரம். சித்தா திரைப்படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதனை தொடர்ந்து அடுத்து மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் இயக்கத்திலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறாராம் விக்ரம்.

manjummel-boys-malayalam

மஞ்சுமல் பாய்ஸ் தென்னிந்திய அளவில் சிறப்பான வெற்றியை கொடுத்தது. அதற்கு இயக்குனர் படத்தை சிறப்பாக உருவாக்கி இருந்ததே காரணமாக இருந்தது. எனவே இந்த படம் கண்டிப்பாக விக்ரமிற்கு ஒரு சிறப்பான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே தங்கலானை தொடர்ந்து வரிசையாக இன்னும் இரண்டு வெற்றி படங்களை விக்ரம் கொடுப்பதற்கு வாய்ப்புள்ளதாக பேச்சுக்கள் உள்ளன.

வெற்றிமாறன், மாரி செல்வராஜ்லாம் இருக்கும்போது மலையாள சினிமாவை போய் பேசுறீங்க… ஓப்பனாக கேட்ட ப்ரித்தீவிராஜ்!.

Actor Prithiviraj: தற்சமயம் மலையாள சினிமாக்களுக்கு தமிழில் நிறைய வரவேற்புகள் வர துவங்கி இருக்கின்றன. ஏற்கனவே வெளியாகி இருந்த பிரம்மயுகம் திரைப்படமே 50 கோடி ரூபாய் வசூல் செய்தது.

இந்த நிலையில் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் 150 கோடியை தாண்டி இன்னமும் வசூல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. யாருமே எதிர்பார்க்காத அளவிலான ஒரு வெற்றியை மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் கொடுத்திருக்கிறது.

இதனை தொடர்ந்து தமிழில் நல்ல திரைப்படங்களே வருவது இல்லையா எதற்கு மலையாள திரைப்படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது என்று பேச்சுக்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தமிழில் அறிமுகமாகி தற்சமயம் மலையாளத்தில் அதிகமாக திரைப்படங்களை நடித்து வரும் நடிகர் பிருத்திவிராஜ் இதை குறித்து பேசும் பொழுது சில கருத்துக்களை முன்வைத்தார்.

தமிழில் எடுக்கப்பட்ட ஜெயிலர் லியோ ஆகிய இரண்டு திரைப்படமும் கேரளாவில் வெளியான பொழுது முதல் ஒரு வாரத்திற்கு கேரளாவில் டிக்கெட் கிடைக்கவில்லை. கேரள மக்களும் தமிழ் படங்களை விரும்பி பார்க்கின்றனர்.

அதைத்தான் தமிழ் மக்களும் செய்கின்றனர் அதற்காக தமிழ் சினிமாவில் தரமான இயக்குனர்கள் என்று இல்லை என்று கூற முடியாது வெற்றிமாறன் மாரி செல்வராஜ் பா. ரஞ்சித் மாதிரியான இயக்குனர்கள் சிறப்பான அரசியல் சார்ந்த திரைப்படங்களை இயக்குகின்றனர். அதேபோல கமர்சியல் ஆன திரைப்படங்களை இயக்குவதற்கு இயக்குனர் சங்கர் மாதிரியான இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் இருக்கின்றனர்.

எல்லா வருடமும் தமிழ் சினிமாவில் சிறப்பான திரைப்படங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன எனவே மலையாளத்தில் மட்டும்தான் நல்ல படங்கள் வருகிறது என்று கூறுவதே முதலில் தவறு என்று கூறுகிறார் பிரித்திவிராஜ்.

இப்படி பேசுறது தமிழன் செய்யுற செயல் கிடையாது!.. எது வந்தாலும் வாங்கி கட்டிக்க தயாரா இருக்கேன்!.. எழுத்தாளரால் கடுப்பான பாக்கியராஜ்!..

Bhagyaraj : சமீபத்தில் மலையாளத்தில் இயக்கப்பட்டு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸ். ஒரு சாதாரண சின்ன கதையை எடுத்துக்கொண்டு வெகு சிறப்பாக படமாக்கி அதன் மூலமாக அந்த திரைப்படத்திற்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தமிழ் மக்கள் பலரும் அந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர் 15 கோடிக்கு எடுக்கப்பட்ட மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் கிட்டத்தட்ட 170 கோடியை தாண்டி லாபம் ஈட்டி கொடுத்துள்ளது. இவ்வளவு லாபத்தை இதற்கு முன்பு எந்த ஒரு மலையாள திரைப்படமும் தமிழில் ஓடி பெற்று கொடுத்தது கிடையாது.

இந்த நிலையில் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தை மட்டுமன்றி கேரள மக்களையும் விமர்சிக்கும் விதமாக எழுத்தாளர் ஜெயமோகன் கருத்து ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் கேரள மக்கள் அனைவருமே குடிகாரர்கள் என்றும் அவர்கள் பயணம் செய்யும் இடங்களில் எல்லாம் குடித்துவிட்டு தொந்தரவு செய்கின்றனர்.

bhagyaraj

மேலும் மதுபான பாட்டில்களை தூக்கி காடுகளில் தூக்கி எறிகின்றனர் என்றும் மிக மோசமாக பேசியிருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்திருந்தனர். இந்த நிலையில் நடிகர் பாக்யராஜ் இதற்காக குரல் கொடுத்திருக்கிறார்.

அவர் கூறும் பொழுதே வேறு மாநிலத்து மக்களைஅவமதித்து பேசுவது என்பது தமிழனின் பண்பு கிடையாது. படத்தில் என்ன கூற வேண்டுமானாலும் பேசுங்கள். படத்தில் தவறாக இருக்கிற விஷயத்தை பற்றி பேசுங்கள் அதைப்பற்றி யாரும் எதுவும் கூறப்போவதில்லை.

ஆனால் பொது ஜனங்களை பற்றி இவ்வளவு கீழ்த்தரமாக பேசுவது ஒரு எழுத்தாளனுக்கு நல்ல விஷயம் கிடையாது என்று கூறியிருக்கிறார் பாக்யராஜ். ஏன் இவ்வளவு தாமதம் ஆனாலும் இப்பொழுது தெரிவிக்கிறேன் என்றால் கேரள மக்களுக்காக குரல் கொடுக்க தமிழ்நாட்டில் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும். அதற்காகத்தான் பேசுகிறேன் என்று கூறியிருக்கிறார் பாக்யராஜ்.

இன்னும் ஓயலையா இந்த மஞ்சுமல் பாய்ஸ் வசூல்.. இப்போ வரை எவ்வளவு வசூல் தெரியுமா?.. ஷாக் கொடுத்த நிலவரம்!.

Manjummel Boys : மலையாள சினிமாவில் இருந்து தமிழில் ஒரு திரைப்படம் இவ்வளவு வெற்றி பெற முடியுமா என்று அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஒரு வெற்றியை கொடுத்திருக்கிறது மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம்.

கேரளாவில் உள்ள கொச்சியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த 10 இளைஞர்களின் கதைதான் மஞ்சும்மள் பாய்ஸ். இந்த 10 இளைஞர்களும் கொடைக்கானலில் குணா குகையை சுற்றி பார்க்க செல்லும் பொழுது அதில் ஒரு நபர் மட்டும் குழிக்குள் சென்று மாட்டிக்கொள்ள அவரைக் காப்பாற்ற அவரது நண்பர்கள் செய்யும் செயலே கதையாக உள்ளது.

manjummel-boys-malayalam

2006 இல் உண்மையாகவே நடந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதாலேயே இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் திரைப்படத்தில் முழுக்க முழுக்க கமல் நடித்த குணா திரைப்படத்தின் பாடல்களும் இடம் பெற்றிருந்தன.

அதேபோல் படத்தின் வசனங்களும் முழுக்க முழுக்க தமிழில் இருந்ததால் தமிழ் மக்களுக்கு பிடித்த படமாக மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் அமைந்துவிட்டது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் தமிழில் கொண்டாடப்படும் ஒரு திரைப்படமாக மாறியது.

படம் வெளியாகி இரண்டு வாரங்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது இது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. ஏனெனில் இந்த திரைப்படம் மொத்தமே 15 கோடிக்குதான் எடுக்கப்பட்டது அப்படி இருக்கும் பொழுது 100 கோடி ரூபாய் என்பது பெரிய வசூல் என்று அனைவரும் ஆச்சரியப்பட்டு கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றுவரை மொத்தமாக சேர்த்து 165 கோடி வசூல் செய்திருக்கிறது இந்த திரைப்படம் இன்னமும் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சுமல் பாய்ஸ் க்ளைமேக்ஸ்ல நான் வச்ச அந்த விஷயம்!.. ஆனா யாரும் கவனிக்கல!.. சீக்ரெட்டை கூறிய இயக்குனர்!..

Manjummel Boys: மலையாளத்தில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு தமிழ் சினிமாவில் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படமாக மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் இருக்கிறது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலில் நடந்த உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

கதைப்படி கொச்சியில் இருந்து கொடைக்கானலுக்கு 10 நண்பர்கள் சுற்றுலா செல்கின்றனர். அப்படி சென்று குணா குகையை பார்க்கும்போது அங்கு ஒரு 900 அடி ஆழமுள்ள குழியில் சிக்கி கொள்கிறார் அவர்கள் நண்பர்களில் ஒருவர். இந்த நிலையில் மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து அந்த நபரை காப்பாற்றுவதே கதையாக இருக்கிறது.

manjummel-boys-malayalam

படத்தின் தயாரிப்பு சிறப்பாக இருந்ததால் படம் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட வெளியாகி இரண்டு வாரங்கள் கழித்தே நல்ல வரவேற்பை பெற்றது மஞ்சுமல் பாய்ஸ். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இயக்குனரான சிதம்பரத்திற்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளது.

க்ளைமேக்ஸில் இயக்குனர் வைத்த காட்சி:

தமிழ் பிரபலங்கள் பலரும் அவரது திரைப்படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் இயக்குனர் சிதம்பரம். அதில் அவர் கூறும்போது க்ளைமேக்ஸ் காட்சியில் குறியீடாக சில காட்சிகளை நான் வைத்திருந்தேன்.

கதைப்படி அந்த நபர் மாட்டிக்கொள்ளும் குழியை ஒரு கர்ப்பப்பை போலவே வடிவமைத்திருப்பேன். அதாவது பூமி தாயின் கர்ப்பப்பைக்குள் அந்த நபர் மாட்டிக்கொண்டார் என்பதாகவே காட்சியை அமைத்திருந்தேன். அதனால்தான் அதற்குள் அவர் ஆடையில்லாமல் இருப்பார். இந்த நிலையில் குழந்தைக்கு இருக்கும் ஒரு தொப்புள் குடியை போலதான் அவரை காப்பாற்றும் அந்த கயிறு இருக்கும்.

எப்படி ஒரு குழந்தை பிறக்கும்போது அழுதுக்கொண்டே இரத்தத்துடன் வயிற்றில் இருந்து வருமோ அதே போல அவரும் அழுதுக்கொண்டுதான் வருவார். அது அவருக்கு மறுப்பிறப்பு என விளக்கியுள்ளார் இயக்குனர் சிதம்பரம்.

கமலுக்கும் அந்த படத்துக்கும் தொடர்பில்லை!.. மலையால சினிமாவை கமல் சாரே வளர விட மாட்டார்!.. மஞ்சுமல் பாய்ஸ் வசனகர்த்தா ஓப்பன் டாக்!..

Manjummel Boys : தமிழ் சினிமா மக்கள் மத்தியில் பெருவாரியான வரவேற்பு பெற்ற திரைப்படமாக மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் இருக்கிறது. அது ஒரு மலையாள படம் என்பதை மறந்து அதை ஒரு தமிழ் படமாக நினைத்தே தான் பார்த்து வருகின்றனர் தமிழ் ரசிகர்கள்.

படத்திற்கு வசனத்தை எழுதிய க்ளைட்டன் என்பவரிடம் பேட்டி எடுக்கும் பொழுது அவர் நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை கூறியிருந்தார். சொல்ல போனால் அவரே தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான். அவர் கூறும் பொழுது படத்தின் பாதி காட்சிகள்தான் கேரளாவில் நடக்கின்றன.

அதற்குப் பிறகு முழுக்க முழுக்க கொடைக்கானலில்தான் படம் நடக்கிறது எனவே இந்த திரைப்படம் ஒரு மலையாள படம் என்கிற நினைப்பே முதலில் பார்க்கும் மக்களுக்கு வரவில்லை. அதே போல கேரளாவில் இருக்கும் நிறைய பேருக்கு குலதெய்வமாக பழனி முருகன்தான் இருக்கிறார். எனவே இந்த திரைப்படம் முழுக்கவும் பழனி முருகன் கொடைக்கானல் அது இல்லாமல் குணா படத்தில் வரும் இளையராஜா பாடல் இப்படி தமிழ் சார்ந்து தான் எக்கச்சக்கமான விஷயங்கள் இருக்கின்றன.

manjummel boys

இவை யாவும் தமிழ்நாட்டு மக்களுக்கு இது ஒரு தமிழ் படம் என்கிற மனநிலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதுதான் இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பெரிய காரணம். இளையராஜாவின் பாடலும் ஒரு முக்கிய காரணம் என்று கூற வேண்டும் ஏனெனில் மலையாளிகள் இளையராஜாவின் பாடலை ரசித்து கேட்பதாக காட்சிகள் வைப்பதும் கூட தமிழ் மக்களுக்கு ஒரு பெருமிதத்தை ஏற்படுத்தும்.

அந்த திரைப்படத்தில் காவலர்கள் அந்த மலையாள நண்பர்களை மோசமாக நடத்துவது போன்ற காட்சிகளுக்கு நிறைய அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் படத்தில் தமிழர்கள் மலையாளிகள் என்கிற வேறுபாட்டை காட்டுவதற்காக அப்படி காட்சிகள் அமைக்கப்படவில்லை.

அவர்கள் தடை செய்யப்பட்ட ஒரு பகுதிக்குள் அத்து மீறி சென்றதால் அந்த காவலருக்கு வரும் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகவே அந்த காட்சிகள் வைக்கப்பட்டன என்று கூறுகிறார் க்ளைட்டன். மேலும் அவர் கூறும் பொழுது இந்த படத்திற்காக எதற்கு கமல்ஹாசனை கொண்டாடுகிறார்கள் என்று தெரியவில்லை.

Kamal_haasan

ஏனெனில் கமல்ஹாசனின் நடிப்பிற்கும் இந்த படத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை. குணா படத்தை பாராட்ட வேண்டும் என்றால் அந்த படத்தின் இயக்குனரைதான் கொண்டாட வேண்டுமே தவிர கமலஹாசன் எதற்கு கொண்டாடுகிறார்கள் என்று தெரியவில்லை. அதேபோல மலையாள சினிமா தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து விட்டது என்று கூறுகிறார்கள்.

இந்த படம் தமிழ் திரைப்படமாக தோன்றுவதால் மக்கள் இதை பார்க்கிறார்களே தவிர அனைத்து மலையாள திரைப்படத்தையும் மக்கள் பார்க்க போவதில்லை அப்படியான ஒரு சூழல் ஏற்பட்டால் கமலே கூட தமிழ் சினிமாவிற்குள் மலையாளம் வருவதற்கு அனுமதிக்க மாட்டார் என்று கூறுகிறார் க்ளைட்டன்.

தனுஷ் படத்துக்கே நோ சொன்ன மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனர்!.. இதுதான் காரணமாம்!.. இப்படி பண்ணிட்டாரே!.

Dhanush : மலையாளத்தில் எடுக்கப்பட்ட திரைப்படமாக இருந்தாலும் கூட தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸ். 10 இளைஞர்களில் ஒருவர் குணா குகையில் இருக்கும் ஒரு குழிக்குள் மாட்டிக்கொள்ள அவரைக் காப்பாற்றுவதற்காக இந்த ஒன்பது பேரும் மேற்கொள்ளும் முயற்சிகளே படத்தின் கதையாக இருக்கிறது.

படத்தில் குணா குகையாக இருக்கட்டும், படத்தின் தயாரிப்பாக இருக்கட்டும் அனைத்தையும் அட்டகாசமாக செய்திருந்தார் இயக்குனர். படத்திற்கு சென்று அமர்ந்து விட்டால் நேரம் போவதே தெரியாத அளவிற்கு படம் வேகமாக செல்வதால் இந்த படத்தின் மீது பலருக்கும் நல்ல மரியாதை ஏற்பட்டுள்ளது.

manjummel boys

இதனால் இந்த திரைப்படம் நல்ல வெற்றியும் கண்டிருக்கிறது இந்த நிலையில் திரைப்படத்தின் இயக்குனரான சிதம்பரத்தை வைத்து திரைப்படம் நடிக்க வேண்டும் என்று தமிழ் நடிகர்களும் தயாரிப்பாளர்களும் ஆசைப்பட துவங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் தனுஷ் இது குறித்து இயக்குனர் சிதம்பரத்திடம் பேசி இருக்கிறார்.

நிராகரித்த இயக்குனர்:

சில நாட்களுக்கு முன்பு அவர்கள் இருவருக்கும் இடையே மீட்டிங் நடந்துள்ளது. இதில் பேசிய தனுஷ் யாரடி நீ மோகினி திரைப்படம் மாதிரியான ஒரு காதல் கதையை தனுசை வைத்து சிதம்பரம் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்.

இந்த விஷயத்தை சிதம்பரத்திடமும் கூறியிருக்கிறார் ஆனால் எடுத்த உடனேயே ஒரு பெரிய நடிகரை வைத்து தமிழில் படம் இயக்குவதற்கு யோசித்து வருகிறார் சிதம்பரம். ஏனெனில் கேரளா மார்க்கெட்டை விடவும் தமிழ் சினிமா மார்க்கெட் மிகவும் பெரிதாக இருப்பதால் இதில் பயங்கரமான வெற்றியை கொடுக்கக்கூடிய ஒரு திரைப்படத்தை தான் எடுக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார் சிதம்பரம்.

எனவே மலையாளத்தில் இன்னும் ஒரு படம் எடுத்துவிட்டு தமிழ் கலாச்சாரத்திற்கு தகுந்தார் போல ஒரு கதையை யோசித்து விட்டு சொல்கிறேன் என்று கூறியிருக்கிறாராம் சிதம்பரம். ஏனெனில் தமிழ் கலாச்சாரம் பற்றி பெரிதாக தனக்கு அறிவில்லை என்பதால் அது தொடர்பாக சில ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று நேரம் கேட்டிருக்கிறார் சிதம்பரம். தனுஷும் இதற்கு ஒப்பு கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

Manjummel Boys : மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனர் மீது பாலியல் குற்றச்சாட்டு!.. மலையாள நடிகை வெளியிட்ட பகீர் தகவல்!..

Manjummel Boys : கடந்த ஒரு வாரமாகவே சினிமா உலகில் அதிகமாக பேசப்பட்டு வரும் திரைப்படமாக மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் இருக்கிறது. பொதுவாக மலையாளத்தில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு அவ்வளவாக தமிழ் சினிமாவில் வரவேற்பு கிடைப்பது கிடையாது.

இதற்கு முன்பு எந்த திரைப்படத்திற்கும் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்று கூறலாம். மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்திற்கு முன்பு வெளியான பிரம்ம யுகம் திரைப்படத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடித்திருந்தார்.

அந்த திரைப்படம் கூட இந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை இத்தனைக்கும் கொடைக்கானலில் குணா குகையில் தவறி விழுந்த தனது நண்பனை காப்பாற்றும் மற்ற நண்பர்களின் போராட்டம் தான் இந்த கதை. இவ்வளவு சிம்பிளான ஒரு கதைக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று தமிழ்நாட்டு இயக்குனர்களே எதிர்பார்க்கவில்லை என்று கூறலாம்.

manjummel boys

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனரான சிதம்பரத்திற்கு வரவேற்புகளும் பாராட்டுகளும் அதிகரித்து வருகின்றன. மேலும் தமிழிலும் அவர் படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.

இயக்குனர் மீது குற்றச்சாட்டு:

இந்த நிலையில் மலையாள நடிகையும் சமூக வலைதள பிரபலமுமான ப்ரப்தி எலிசபெத் இயக்குனர் சிதம்பரம் குறித்து பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பி இருக்கிறார். நடிகை ப்ரப்தி எலிசபத் 2021 ஆம் ஆண்டு ஜான்மென் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இயக்குனர் சிதம்பரத்தால் இயக்கப்பட்ட திரைப்படம் இதுதான் அவரது முதல் திரைப்படமாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது அவர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக இயக்குனர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பி இருக்கிறார் நடிகை ப்ரப்தி எலிசபத்.

இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு இயக்குனர் என்ன பதில் கொடுக்கப் போகிறார் என்பது தற்சமயம் பேச்சாக இருந்து வருகிறது.