manjummel boys vikram

தங்கலானை தொடர்ந்து வரிசையாக ஸ்கோர் செய்யும் விக்ரம்!.. லிஸ்ட்டுல மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனரும் இருக்காராம்!.

தமிழில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடி தேடி நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விக்ரம். பொதுவாக அவர் நடிக்கும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் காரணமாக அவருக்கு பெரிய ரசிகர்கள் உண்டு.

ஆனால் சமீபத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் எதுவுமே எதிர்பார்த்த வரவேற்பை தரவில்லை. சொல்லப்போனால் அவை மக்கள்  மத்தியில் அதிருப்தியைதான் ஏற்படுத்தின. கோப்ரா மாதிரியான திரைப்படங்களில் விக்ரம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் கதைரீதியாக மிகவும் சுமாரான கதையாக இருந்ததால் அந்த கதை ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை.

vikram

இந்த நிலையில் தற்சமயம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தங்கலான் திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது, பொதுவாகவே பா.ரஞ்சித் திரைப்படங்கள் பெரும்பாலும் நல்ல வெற்றியை கொடுக்க கூடியவை என்பதால் தங்கலான் நல்ல வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்து சித்தா திரைப்படத்தின் இயக்குனரான அருண் குமார் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் விக்ரம். சித்தா திரைப்படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதனை தொடர்ந்து அடுத்து மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் இயக்கத்திலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறாராம் விக்ரம்.

manjummel-boys-malayalam

மஞ்சுமல் பாய்ஸ் தென்னிந்திய அளவில் சிறப்பான வெற்றியை கொடுத்தது. அதற்கு இயக்குனர் படத்தை சிறப்பாக உருவாக்கி இருந்ததே காரணமாக இருந்தது. எனவே இந்த படம் கண்டிப்பாக விக்ரமிற்கு ஒரு சிறப்பான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே தங்கலானை தொடர்ந்து வரிசையாக இன்னும் இரண்டு வெற்றி படங்களை விக்ரம் கொடுப்பதற்கு வாய்ப்புள்ளதாக பேச்சுக்கள் உள்ளன.